Go to full page →

கிறிஸ்துவைச் சேரும் வழி SC 0

முகவுரை. SC 1

இப்புத்தகத்தின் நோக்கத்தை இதன் தலைப்புப் பெயர் காண்பிக்கிறது. இது, இயேசு ஒருவரே நமது ஆத்துமக்குறைவுகளை நிவிர்த்திக்கக்கூடியவரென்று காண்பித்து, சந்தேகப்பட்டு நிற்கிறவர்களைச் “சமாதானத்தின் பாதையில்” நடத்துகிறது. இது, நீதியையும், சிறந்த நல்லொழுக்கத்தையும் தேடுகிறவனைத்தன்னையே முழுவதும் ஒப்புக்கொடுப்பதிலும், பாவிகளின் நேசருடைய இரட்சிக்கிற கிருபையின் பேரிலும் பாதுகாப்பின் வல்லமையின்பேரிலும் வைக்கும் அசையாத நம்பிக்கையிலும் காணப்படும் பூரண ஆசீர்வாதத்திற்குக் கிறிஸ்தவ ஜீவியத்தின் வழியாய்ப் படிப்படியாக நடத்துகிறது. இப்புஸ்தகத்தில் காணப்படும் போதனைகள், உபத்திரவப்படும் அநேக ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டுவந்திருக்கிறது. தங்கள் பரம எஜமானைப் பின்செல்லுகிற அnநேeeகம்பேரைத் தங்கள் பரம வழிகாட்டியின் அடிச்சுவடுகளில் அதிக நிட்சயத்தோடும், சந்தோஷத்தோடும் நடக்கத் திராணியுள்ளவர்களாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட உதவியை விரும்புகிற இன்னும் அநேகம் பேர்களுக்கு அதே பலனைக்கொண்டுவருமென்று நம்புகிறோம். SC 1.1

யாக்கோபு, தன்பாவம் தன்னைத் தேவனைவிட்டுப்பிரித்து விட்டதென்னும் பயத்தினால் நெருக்கப்பட்டபோது அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் இளைப்பாறப் படுத்துக்கொண்டபோது “அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான். இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதில் நுனி வானத்தை எட்டியிருந்தது.” பூமிக்கும் வானத்துக்குமுள்ள சம்பந்தம் இதினால் அவனுக்குக் காட்டப்பட்டது. அந்த ஏணியின் உச்சியில் நின்றவர் அலைந்து திரிகிற அவனை நோக்கி ஆறுதலான வார்த்தைகளைப்பேசினார். அப்படிப்பட்ட பரம தரிசனம், ஜீவமார்க்கத்தைப்பற்றிய இந்தச் சரிதையை வாசிக்கும்போது, அநேகருக்குக் காணப்படுவதாக. SC 2.1

பிரசுரம் செய்வோர். SC 2.2