Go to full page →

ஐக்கியத்தில் பெலன் உண்டு CCh 254

ஒற்றுமைக்காக ஊக்கமாகப் பாடுபடுங்கள். அதற்காக ஜெபியுங்கள். அதற்காக வேலை செய்யுங்கள். அது ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும், மேலான எண்ணத்தையும், உயர்ந்த குணத்தையும், பரலோக சிந்தையையும் கொண்டு வரும். சுய நலம், தீமை நினைத்தல், இவைகளின் பேரில் வெற்றி காணச் செய்யும். உங்களில் அன்பு கூர்ந்து, தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தவர் மூலம் உங்களை முற்றிலும், வெற்றியடைந்தவர்களாக்கும். சுயத்தை சிலுவையில் அறையுங்கள். மற்றவர்களை உங்களிலும் மேன்மையாக எண்ணுங்கள். இப்படிச் செய்தால் கிறிஸ்துவில் ஐக்கியப் படுவீர்கள். நீங்கள் தேவனுக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்று சர்வ லோகத்திற்கும், சபைக்கும், உலகத்திற்கும் உண்மை சாட்சி பகருவீர்கள். நீங்கள் காண்பிக்கும் மாதிரியினால் தேவன் மகிமையடைவார். CCh 254.2

தேவ ஜனங்களின் இருதயங்களை கிறிஸ்துவின் அன்பு ஒன்றாக இனைக்கும் அற்புதச் செயலை உலகம் காண்பதவசியம். கர்த்தருடைய ஜனங்கள் உன்னதங்களில் கிறிஸ்துவில் ஒன்று கூடி அமர்வதை உலகம் பார்ப்பது அவசியம். அவரில் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கிறவர்களுக்கு தேவ சத்தியம் செய்யக் கூடியதின்னதென்பதை உங்கள் ஜீவியங்களில் காட்ட மாட்டீர்களா? நீங்கள் எப்படி ஆகக்கூடும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். தெய்வீக சுபாவத்திற்கு நீங்கள் பங்குள்ளவர்களானால் தெய்வக் கிருபை உங்களுக்கு என்ன செய்யக் கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். 9T. 188. CCh 255.1

“சகோதரரே, நீங்களெல்லாரும், ஏக காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏக மனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய்ச் சீர் பொருந்தி இருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இசுக் கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” 1 கொரி. 1:10. CCh 255.2

ஐக்கியம் பெலன்; பிளவு பெலவீனம். நிகழ்கால சத்தியத்தை விசுவாசிக்கிறவர்கள் ஐக்கியப்படும் பொழுது, அவர்கள் பிறருக்கு பயன் தரும் செல்வாக்கை பிரயோகிக்கிறார்கள். இதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். தேவனுடைய சத்தியத்தைப் பயனற்றதாக்கும்படி அவன் கசப்பையும், பிரிவினையையும் உண்டாக்குவதற்கு முன் ஒரு போதும் இல்லாத விதமாக தீர்மானித்திருக்கிறான்.T. 236. CCh 255.3