Go to full page →

கிறிஸ்துவைப் போன்ற குணத்தை உருவாக்குதல் CCh 265

கிறிஸ்துவின் மார்க்கம் அதை ஏற்றுக் கொள்பவனைக் கீழாக்குவதில்லை; அது அவனை கரடு, முரடானவனாகவோ, மரியாதை அற்றவனாகவோ, தன்னை உயந்த்துகிறவனாகவோ, வெடுவெடுப்பானவனாகவோ, இறுகிய கல் நெஞ்சனாகவோ ஆக்காமல் அதற்கு மாறாக அது அவனது நாட்டங்களை புனிதமாக்கி, பகுத்தறிவைப் பரிசுத்தமாக்கி, சிந்தையை சுத்திகரித்து, மேன்மைப் படுத்தி, கிறிஸ்துவுக்குக் கீழ்ப் படுத்துகிறது. தமது பிள்ளைகளுக்குத் தேவன் வைத்திருக்கும் இலட்சியம் மனிதனுடைய மகா மகோன்னத சிந்தையும் எட்டக்கூடா மிக உயர்ந்த நிலையுள்ளது. அவரது பரிசுத்த பிரமாணத்தில் தமது குணலட்சணங்களை பெயர்த்தெழுதியிருக்கிறார். கிறிஸ்துவின் சாயலை அடைவதே கிறிஸ்தவ உயர் லட்சணம். சதா முன்னேற்றம் அடைவதற்கான வழி நமக்கு முன் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. நன்மையானவைகள், புனிதமானவைகள், மேன்மையானவைகள், உயர்வானவைகளை அடையும்படியாக நமக்கு ஒரு நோக்கமும், திட்டமும் உண்டு. குண லட்சணம் மென்மேலும் உயர்த்தப்பட்டு பூரணமடையும்படிக்கு, தொடர்ந்தேர்ச்சியான இடையறா முயற்சியும் முன்னேற்றமும் வேண்டும்.8T. 63,64. CCh 265.1

தனித்தனியே நமது பழக்க வழக்கங்கள் எவ்வாறு நம்மை உருவேற்றுகின்றனவோ அப்படியே இப்போழுதும் சதா காலங்களிலும் இருப்போம். சரியான குணப் பண்பு களை தங்களில் உருவாக்கித் தங்கள் அனுதினக் கடமைகளே உண்மையாக நிறைவேற்றுகிறவர்கள் பிரகாசிக்கிற ஒளிகளாக இருந்து மற்றவர்களின் வழிகளில் ஒளி வீசுவார்கள்: ஆனால் அவர்கள் தங்கள் பழக்கங்களில் உண்மைக் குறைவு, தளர்ச்சி, சோம்பல், நெகிழ்ச்சி முதலியன பெலப்பட இடம் கொடுத்தால், நடு ராத்திரிக் கொப்ப இருள் மேகம் அவர்களின் வாழ்வில் அமர்ந்து நித்தியத்திற்கும் வருங்கால வாழ்விற்கும் அவர்களை அருகதையற்றவர்களாக்கி விடும். 4T. 452. CCh 265.2

நித்திய ஜீவ வசனங்களுக்குச் செவி சாய்க்கிறவன் பாக்கியவான். அவன் சத்திய ஆவியினாலே நடத்தப்பட்டு சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்தப் படுவான். அவன் உலகத்தால் நேசிக்கப்படாமலும், மதிக்கப்படாமலும் புகழ்ச்சிப் பெறாமலும் இருப்பான்; ஆனால் பரலோக பார்வையில் அவன் விலையேறப் பெற்றவனாக இருப்பான். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. 1 யோவா 3:1. 5T.439 CCh 266.1