Go to full page →

சாட்சியாகமங்களைத் தவறாகப்பயன்படுத்துதல் CCh 282

முதற் பாகமாக வெளியிடப் பெற்ற சாட்சியாகமங்கள் கடவுள் மக்கள் இவ்வகையாகப் பெற்றிருக்கும் வெளிச் சத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்த எச்சரிப்புக் கொண்டுள்ளது. சிலர் இவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களென்று நான் அதில் கூறியிருந்தேன். சிலர் அவிசுவாசிகளிடம் தங்கள் விசுவாசத்தைக் குறித்துப் பேச, அதற்குரிய அத்தாட்சிகளை அவர்கள் கேட்ட பொழுது, வேதவாக்கியங்களை அத்தாட்சிகளாக வெளிப்படுத்துவதை விட்டு விட்டு, என்னால் எழுதப்பெற்றவைகளை வாசித்துக் காண்பித்தனர். இந்த முறை முரண்பாடானது என்றும் சத்தியத்திற்கெதிராக அவிசுவாசிகளை துவேஷம் உடையவர்களாக்குமென்றும் எனக்குக் காட்டப் பட்டது. சாட்சியாகமங்களை அருளிய ஆவியைக்குறித்து அறிந்து கொள்ளாதவர்கள் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். அத்தகையோரிடம் பேசும்பொழுது, இவற்றைக் குறித்துப் பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை. CCh 282.3

சாட்சியாகமங்களைப் பயன்படுத்துவது பற்றிய பிற எச்சரிப்புகள் அப்போதைக்கப்போது பின்வருமாறு அளிக்கப்பெற்றன்:- CCh 283.1

“சில ஊழியர்கள் மிகவும் பின் தங்கி தூரத்தில் இருக்கிறார்கள். சாட்சியின் வார்த்தைகளை நம்புவதாகக் கூறிக்கொண்டு, தாங்களை அவற்றின்படி செய்யாமல் தவறி, யாருக்கு அவை பொருந்தாதோ அவரகள் அவற்றின்படி செய்தே தீரவேண்டுவென்று வற்புறுத்துகின்றார்கள். அவர்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டாமென்று அளிக்கப்பட்ட சாட்சிமொழிகளை அவர்கள் முழுவதுமாக நிராகரித்தார்கள். அத்தகையோரின் போக்கு முரண்பாடானது.” 5T. 669,670. CCh 283.2

“பிறருடைய தப்பிதங்கள், பாவங்களைப்பற்றி தேவன் காட்டியவைகளை அனேகர் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வதைக் கண்டேன். தரிசனத்தில் காட்டப்பட்டவைகளின் பொருளை மிகைப்படுத்தி, பலருடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தும் அளவில் அதை வற்புறுத்தி, சபையை அதைரியப்படுத்துகிறார்கள்.” CCh 283.3