Go to full page →

வேத வாசிப்பு அறிவைப் பலப்படுத்தும் CCh 296

வேதத்தைப் படிக்க வேண்டிய பிரகாரம் படித்தால் மனிதர் அறிவில் பலப்படுவார்கள். தேவத்திருவசனத்தில் விரித்துரைக்கப்பட்டிருக்கும் காரியங்கள், அதின் கம்பீர, எளிய வசன நடை, அது மனத்திற்குத் தோற்றும் உயர்ந்த விஷயங்கள் யாவும், மானிடத்தத்துவங்களை வேறெவ்வித முறையிலும் செய்யக்கூடாவண்ணம் அபிவிருத்திச் செய்கின்றன. வேதத்தில் மனோ காட்சிக்கு எல்லையில்லா வெளி திறக்கப்பட்டிருக்கிறது. வேதத்தின் மகத்தான விஷயங்கள், அதன் உயர்ந்த வர்ணனை, மாணுக்கனுகு அதிகத் தெளிவும், உயர்வுமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தந்து மனிதன் எழுதிய எவ்விதப் புத்தகமும் கொடுக்கக்கூடாத பலனை அதிகமாய்க் கொடுக்கும். ஞானத்தின் ஊற்றாகிய வேதத்தை நெகிழ விடும்போது, வாலிபரின் மனது மேன்மையான அபிவிருத்தியடைவதை இழந்து விடும். நல்ல மனது, உறுதி, மதிப்பு உள்ளவர்கள் வெகு சிலரே நம்மவருள் இருப்பதின் காரணம், அனேகர் தேவனை நேசியாமலும் அவருக்குப் பயன்படாமலும், மார்க்க லட்சியங்களை ஜீவியத்தில் நிறைவேற்றாமலும் இருப்பதேயாகும். CCh 296.2

நமது மனோ சக்திகளைப் பண்படுத்தி பெலப்படுத்த நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு காரியத்தையும் பயன்படுத்தவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். வேதம் அதிகமாக வாசிக்கப்பட்டு அதன் சத்தியங்கள் சரிவர அறிந்துகொள்ளப்படுமானால் நாம் அதிகப்படியான அறிவும், ஒளியும் பெற்றவர்களாக இருப்போம். வேதப் புத்தகத்தை ஆராய்வதால் ஆத்துமாவுக்குச் சக்தி அளிக்கப்படுகின்றது. C.G.507. CCh 297.1

ஜீவியத்தின் உறவுகள் யாவிலும் மனிதன் செல்வமாய் வாழ்க்கை நடத்தும் விஷயத்தைக் குறித்து வேத போதனை மிக முக்கிய சம்பந்தமுடையதாயிருக்கிறது. ஒரு ஜாதியின் வளர்ச்சிக்கு மூலைக்கல்போல் இலங்கும் இலட்சியங்களை சத்தியவேதம் தெளிவாக்குகின்றது. இந்த இலட்சியங்களோடு சங்கத்தின் நல் வாழ்வும் குடும்பத்தின் பாதுகாப்பும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சியங்கள் இன்றி ஒருவனாவது இம்மையில் பிரயோஜனமாகவும், சந்தோஷமாகவும், மதிப்பாகவும் வாழ முடியாது; மேலும், மறுமையில் நித்திய ஜீவனையடையும் நம்பிக்கையையும் பெற முடியாது; வாழ்க்கையின் எந்நிலைக்கும், மானிட அனுபவத்தின் எப்பகுதிக்கும் மிக முக்கிய எத்தனங்கள் அளிப்பது சத்திய வேத போதனையே யல்லாது வேறெதுவுமில்லை. p.p.599. CCh 297.2