Go to full page →

கிறிஸ்தவ உண்மை CCh 300

கொடுக்கல் வாங்கல் யாவற்றிலும் கண்டிப்பான உண்மையைக் கடைப்பிடியுங்கள். எவ்விதம் சோதிக்கப் படினும், அற்ப காரியங்களிலும், ஏமாற்றமோ, புரட்டலோ காண்பிக்கக் கூடாது. வேளாவேளைகளில் நேர்மையான நடத்தையிலிருந்து விலகுமாறு இயற்கை சுபாவத்தால் தூண்டப்படலாம். ஆனால் ஒரு மயிரிழையாகிலும் உண்மையை விட்டு மாறாதேயுங்கள். ஏதாவது ஒரு காரியத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதாக வாக்குக் கொடுத்து, பின்னால் உங்களுக்கு நஷ்டத்தைத்தரக் கூடியதாயிருந்தாலும், இலட்சியத்திலிருந்து இம்மியளவும் மாறாதேயுங்கள். உங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். G.C.154. CCh 300.3

மிக வலிய சொற்களால் வேதம், எல்லா பொய் நடத்தையையும், உண்மையின்மையையும், கண்டிகிறது, உண்மை எது, உண்மைக் கேடு எது என்று வெகு தெளிவாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன். ஆனால், தேவனுடைய பிள்ளைகளை சத்துரு சோதிக்கத்தக்கதான இடத்தில் தங்களை வைத்து இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது; இவர்கள் சோதனைக்குள் விழுந்து தங்கள் மனச்சாட்சி மழுங்கிப்போகு மட்டும் சாத்தானுடைய உபாயதந்திரங்களைப் பின்பற்றுகிறார்கள். சத்தியத்திலிருந்து சற்று விலகி, தேவத் திட்டங்களுக்கு கொஞ்சம் மாறுபட்டு, அதனால் பண லாபமோ, நஷ்டமோ ஏற்பட்டால், அதை அவர்கள் அதிக பாவமென்று எண்ணுவதில்லை. தெருவில் திரியும் தரித்திரன் என்றாலும், மாட மாளிகையிலிருக்கும் கோடீஸ்வரன் என்றாலும் அவர்கள் செய்கின்ற பாவம் பாவமே. பொய் வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கிறவர்கள் தங்கள் ஆத்துமாக்கள் மேல் சாபத்தைக் கொண்டு வருகிறவர்களாயிருக்கிறார்கள். வஞ்சித்து, ஏமாற்றி கிடைக்கப்பெறுவதெல்லாம் சாபமாகும். 4T.311. CCh 301.1

ஏமாற்றுகிறவனும், பொய்ப் பேசுகிறவனும் தன்னுடைய சுய மரியாதையை இழந்து விடுகிறான். அவன், தேவன் தன்னைக் காண்கிறார், தன் தொழில் சம்பந்தமான யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். என்னும் உணர்ச்சியில்லாதவனாயிருக்கலாம். மேலும், பரிசுத்தத்தூதர்கள் எல்லா எண்ணங் CCh 301.2

களையும் சீர்தூக்கி, வார்த்தைகளைக் கவனிக்கிறார்கள் என்றும், அவனுடைய கிரியைகளுகுத் தக்க பிரதிபலன் கிடைக்கும் என்றும் அறியாதவனாயிருக்கலாம். ஆனால் தன்னுடைய தப்பிதங்களை தேவனுடைய பரிசோதனைக்கும், மனிதர் பரிசோதனைக்கும் தன்னா மறைக்க முடியுமென்றாலும், தன் உண்மைநிலை தனக்குத் தெரிந்திருப்பது அவன் குணத்தையும், மனதையும் அவனுக்கு இழிவுபடுத்திக் காட்டும். ஒரே செயல் குணத்தை நிர்ணையிக்காது, ஆனால் அது பாதுகாப்பின் கோட்டையை உடைத்து விடுகிறது. அடுத்த சோதனை எளிதில் இடம் பெற்று, முடிவில் ஒழுங்கு மீறி, தொழிலில் உண்மையின்மை உண்டாகி அந்த மனிதன் சத்தியத்தை மறைத்துப் பேசுவான். அவனை நம்பமுடியாது. 4T.396. CCh 302.1

தேவன் தம்முடைய கொடியின் கீழ் உள்ளவர்கள் முற்றும் உண்மையுள்ளவர்களும், குன்றாக்குணமுடையவர்களும் சற்றும் பொய்ப் பேசா நாவுடையவர்களாயிருக்க வேண்டுமென விரும்புகிறார். கண்களும், நாவும் உண்மையுள்ளவைகளாயும், கிரியைகள் முற்றும் தேவன் பாராட்டத்தக்கவைகளாயும் இருக்கவேண்டும். உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் என்று பக்தி வினயத்தோடே சொல்லும் பரிசுத்த தேவனுடைய பார்வையின் கீழ் நாம் இருக்கிறோம். அவருடைய பரிசுத்தக்கண் எப்பொழுதும் நம்மைருக்கிறது. அநீதமான ஒரு செய்கையையாவது நாம் அவருக்கு மறைக்க முடியாது. நம்முடைய ஒவ்வொரு கிரியையும் குறித்து தேவன் உண்மை சாட்சி பகருகிறார் என்பதை ஒரு சிலரே உணருகிறார்கள். C.T. 152. CCh 302.2