Go to full page →

பரிசுத்த ஆவியானவர் முடிவு மட்டும் தங்குவார் CCh 311

பரிசுத்த ஆவியின் தெய்வீகச் செல்வாக்கு தமது பின்னடியார்களுடன் முடிவு மட்டும் தங்கி இருக்கும் என் கிறிஸ்து அறிவித்தார். ஆனால் அந்த வாக்கு பாராட்டப்படவேண்டிய அளவுக்குப் பாராட்டப்படவில்லை. ஆதலால் அதன் நிறைவேறுதலும் அது இருக்கக்கூடிய அளவுக்குக் காணப்படவில்லை. பரிசுத்த ஆவியைப்பற்றிய வாக்குத்தத்தம் சிறிதளவும் எண்ணப்படுவதில்லை. அதன் பலாபலன், ஆவிக்குரிய வறட்சி, இருள், தளர்ச்சி, மரணம். அற்பக்காரியங்கள் கவனத்தைக்கவர்ந்து கொள்ளுகின்றன். மேலும், சபையின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் அவசியமான தேவ வல்லமை ஏராளமாகக் கொடுக்கப்பட்டு, மற்ற எல்லா ஆசிர் வாதங்களும் அதனோடு வருவதாக இருந்தும், அது குறைவுபடுகிறது. CCh 311.1

தேவ ஆவியற்ற நிலையே, சுவிசேஷ ஊழியத்தை வல்லமையற்றதாக்குகிறது. கல்வி தாலந்து, பேச்சு சாதுரியம், இயற்கையாகவும், பயின்று பெற்றதாகவுமுள்ள வரங்களிருப்பினும், தேவ ஆவியானவரின் பிரசன்னம் இல்லாவிடில் அவைகளால் ஒரு ஆத்துமாவும் உணர்வு அடையாது. கிறிஸ்துவுக்கென்று ஒரு பாவியும் ஆதாயம் செய்யப்பட முடியாது. அதற்கு மாறாக, கிறிஸ்துவில் இணைக்கப்பட்டு, ஆவியின் வரம் பெற்றவர்களாக இருந்தால் சீஷர்களில் பேதைகளும் எளிமையுமானவர்களுங்கூட இருதயங்களைத் தொடத்தக்க வல்லமையுடையவர்களாக இருப்பார்கள். சர்வலோகத்திலும் மேலான செல்வாக்கு வழிந்தோடும் வாய்க்கால்களாக தேவன் அவர்களை ஆக்குவார். CCh 312.1

தேவனைப்பற்றிய பக்திவைராக்கியம், சீஷர்களை அசைத்து அவர்களை சத்தியத்தைக்குறித்து வல்லமையாக சாட்சி பகரச்செய்தது. சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவையும், மீட்கும் அவரின் அன்பின் சரிதையையும் பற்றித் தீர்மானமுடன் சொல்ல நமது இருதயங்களில் அவ்வித பக்தி வைராக்கியம் கொழ்ந்துவிட்டு எரிய வேண்டாமா? ஊக்கமான ஓயா ஜெபத்திற்கு உத்தரவாக இன்று தேவ ஆவியானவர் வந்து ஊழியத்திற்கான வல்லமையால் மனிதரை நிரப்பவேண்டாமா? ஏன் சபைப்பெலவீனமாகவும் ஆவியற்றும் இருக்கிறது? 8T. 21,22. CCh 312.2

நமது சபை அங்கத்தினரின் மனசு பரிசுத்த ஆவியினால் அடகியாளப்படும் பொழுது இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் மேலான சொல்வன்மை, ஊழியம், பக்தி நமது சபைகளில் காணப்படும். ஜீவத்தண்ணீரினால் சபை அங்கத்தினர் முசிப்பாறுதல் அடைவர். ஊழியக்காரர் தலையாகிய கிறிஸ்துவின் கீழ் தங்கள் ஆண்டவரின் ஆவியை வார்த்தையிலும், கிரியையிலும் வெளிப்படுத்துவார்கள். நாம் ஈடு பட்டிருக்கும் மகத்தான முடிவின் வேலையில் தொடர்ந்து முன்னேறும்பை ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவார்கள். பாவிகள் மீட்படைய தேவன் தம்முடைய குமாரனை மரிக்கும் படி அனுப்பினார் என்று உலகத்திற்கு சாட்சி கொடுக்கத்தக்கதாக் ஐக்கியமும் அன்பும் நல்வளர்ச்சிபெறும். தெய்வீக சத்தியம் மேலுயர்த்தப்படும்; மேலும் அது எரிகிற விளக்கைப் போன்று பிரகாசிக்கையில், நாம் அச்சத்தியத்தை அதிகமதிகமாக தெளிவுடன் விளங்கிக் கொள்வோம் 8T. 211. CCh 312.3

தேவனுடைய ஜனங்கள், தங்களைப் பொறுத்தவரையில் ஒருவித முயற்சியும் செய்யாம்ல் இளைப்பாறுதல் வரும்படியாகக் காத்திருந்து, அது வந்து தங்கள் குற்றங்களையும், தவறுதல்களையும், சரிப்படுத்திவிடும் என்றும், ஆவியிலும் மாம்சத்திலும் காணப்படும் அசுத்தங்களிலிருந்து அது தங்களை சுத்திகரித்து, மூன்றாம் தூதனின் உரத்த சத்தத்தில் ஈடுபட அவர்களைத் தகுதியாக்கும் என்றும் காத்திருந்தால் அவர்கள் குறையுள்ளவர்களாகக் காணப்படுவார்கள் என எனக்குக் காட்டப்பட்டது. தேவன் செய்யும்படிச் சொல்லிய வேலையைச் செய்து, ஆவியிலும் மாம்சத்திலும் உள்ள அசுத்தம் நீங்கத் தங்களைச் சுத்திகரித்து பயத்தோடும் நடுக்கத்தோடும். தங்கள் இரட்சிப்பைப் பூரணப்படுத்தி ஆயத்தமாயிருப்பவர்களுக்கு மட்டுமே இளைப்பாறுதல் அல்லது தேவவல்லமை கிடைக்கும். T. 619. CCh 313.1