Go to full page →

அபேட்சகர் பரிபூரண ஆயத்தம் அடைய வேண்டும் CCh 325

ஞானஸ்நானம் பெற நாடுவோர் விஷயத்தில் பரிபூரண ஆயத்தம் அவசியம். அவர்களுக்கு வழக்கமாய் போதித்து வருகிறதைக் காட்டிலும் அதிக உண்மையாகப் போதனை அளித்தல் இன்றியமையாத செயல். சத்தியத்திற்குப் புதிதாக வந்திருக்கிறவர்களுக்குக் கிறிஸ்தவ வாழ்க்கைகுரிய கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். தாங்கள் கிறிஸ்துவுடனே இரட்சிப்பிற்கேற்ற தொடர்பு கொண்டிருப்பதற்குச் சான்றாகத் தங்கள் விசுவாச கோட்பாடுகளின் மேல் சார்ந்திருக்கக்கூடாது. விசுவாசிக்கிறேன் என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் போதாது; சத்தியத்தை நடை முறையில் அப்பியாசிக்க வேண்டும். நாம் கடவுளுடனே கொண்டுள்ள தொடர்பை நிரூபிக்கும் வண்ணம், நம் சொல்லும் செயலும் ஒழுக்கமும் அவர் திருவுள்ளத்திற்கு இசைந்திருக்க வேண்டும். ஒருவன் நியாயப்பிரமாணத்தை மீறி நடப்பதாகிய பாவத்தைத் துறந்து விடும் பொழுதெல்லாம், அவனது வாழ்க்கை பூரண கீழ்ப்படிதலுக்குள்ளே நியாயப் பிரமாணத்துக்கு இசைவாக அமைந்து விடும். இது பரிசுத்த ஆவியின் செயல். கருத்தாய் ஆராய்ந்து படித்த வசனத்தின் வெளிச்சம், மனச் சாட்சியின் குரல், ஆவியின் விடா முயற்சி என்பவை, நம் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் மீட்கும் பொருட்டுத் தம்மைப் பரிபூரண பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின்மீது, நம் உள்ளத்தின் சுயம்பான அன்பை உண்டாக்கி விடும். அன்பு கீழ்ப்படிதலால் வெளிப்படும். கடவுளிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும், அவரிடத்தில் அன்பு கூராமல் அவர் கட்டளைகளை அசட்டை பண்ணுகிறவர்களுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு தெளிவும் திட்டமுமாகப் புலப்படும். CCh 325.1

எவராவது தம்மை கடவுளுக்கு முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டிய அவசியத்தைக் கண்டுணர்ந்து கொள்வது சாத்தானுக்கு விருப்பமாகாது. ஆத்துமா தன்னை அவ்வாறு ஒப்புக்கொடுக்கத் தவறிப் போகும்பொழுது, பாவத்தைக் கைவிடமாட்டாது. பற்றுக்களும் பாசங்களும் தலைமை பெறுவதற்குப் போராடுகின்றன்; சோதனைகள் மனச் சாட்சியைக் குழப்புகின்றன், அதனா மெய்யான மன மாறுதல் உண்டாகாது. கண்ணி வைக்கவும், நயங் காட்டவும், வஞ்சிக்கவும் வகை தேடுகின்ற சாத்தானுடைய செயலாளர்களுடனே ஒவ்வொரு ஆத்துமாவும், போராட வேண்டிய உண்ர்ச்சி எல்லாருக்கும் இருந்தாலும், சத்தியத்தில் இளைஞர்களாய் இருக்கிறவர்களுக்காக மென்மேலும் இடை விடா முயற்சியாய் உழைக்க வேண்டும். CCh 326.1