Go to full page →

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நினைப்பூட்டும் பொருள் CCh 339

அவர்கள் மேசையைச் சுற்றி கூடியிருந்தபொழுது, அவர் துக்க உணர்ச்சியுள்ள குரலுடன் கூறியது:-------நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனே கூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய இராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி; நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள்; தேவனுடைய இராட்சியம் வருமளவும் நான் திராட்ச பழ ரசத்தைப் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் லூக்கா 22:15-18. CCh 339.1

நற்கருணை ஆராதனை நேரம் துக்கப்படுகிற வேளை அல்ல. இது அதன் நோக்கம் அல்ல. ஆண்டவருடைய சீடர்கள் அவருடைய மேசையைச் சுற்றிக் கூடுகிறபொழுது, அவர்கள் தங்கள் குற்றங் குறைகளை நினைத்துப் புலம்ப வேணுடுவதில்லை. அவர்கள் தங்கள் கடந்த கால அனுபவம் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை நினைத்துக்கொண்டிருக்க வேண்டுவதில்லை. அவர்கள் தங்களுக்கும் தங்கள் சகோதரருக்கும் உள்ள வேறுபாடுகளைத் திரும்ப நினைக்க வேண்டுவதில்லை. ஆயத்த ஆராதனை இவற்றை எல்லாம் தழுவியுள்ளது. தற் சோதனை, பாவ அறிக்கை, வேறுபாடுகள் நீங்கி ஒப்புரவாகுதல் எல்லாம் தீர்ந்து போயின. CCh 339.2

அவர்கள் இப்பொழுது கிறிஸ்துவைச் சந்திக்க வருகின்றார்கள். அவர்கள் சிலுவையில் நிழலில் நிற்க வேண்டுவதில்லை; அதன் இரட்சிப்பருளும் வெளிச்சத்தில் நிற்க வேண்டும். நீதியின் சூரியனுடைய பிரகாசமுள்ல கதிர் களுக்கு நேரே ஆத்துமாவைத் திறந்து வைக்க வேண்டும். கிறிஸ்துவின் மகா விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே இருதயம் சுத்தரிக்கப்பெற்று, அவரது பிரசன்னம் கண்ணுக்குப் புலப்படாதிருந்தாலும் அதை முற்றிலும் உணர்ந்தவர்களாய், சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை (யோவான் 14:27) என்று கூறுகின்ற அவர் வார்த்தைகளைக் கேட்க வேண்டும். CCh 339.3

கிறிஸ்துவின் நொறுங்குண்ட சரீரத்திற்கும் சிந்துண்ட இரத்தத்திற்கும் அடையாளமாகிய அப்பத்தையும் திராட்சரசத்தையும் நாம் பெற்றுக்கொள்ளுகிற பொழுது, மனோ பாவனையினா மேல் வீட்டு அறையிலுள்ள நற் கருனைக் காட்சியில் கலந்துகொள்ள வேண்டும். உலகத்தின் பாவங்களைச் சுமந்த அவருடைய கொடிய வேதனையினால் பிரதிஷ்டை பண்ணப்பட்டு தோட்டத்திற்குள்ளே நாம் கடந்து போகக் காண்கிறேம். தேவனோடு நம்மை ஒப்புரவாக்குகிறதற்காக நடைபெறுகின்ற போராட்டத்தைக் காண்கின்றோம். கிறிஸ்து நம் நடுவில் சிலுவையிலே அறையப்பட்டிருக்கின்றார். CCh 340.1

சிலுவையில் அறையப்பட்ட மீட்பரை நோக்கிப்பார்த்து, பரலோக மன்னர் செலுத்திய பலியின் மாண்பையும் கருத்தையும் நாம் பூரணமாய் அறிந்து கொள்ளுகின்றேம். இரட்சிப்பின் திட்டம் மகிமையுடனே நமக்கு முன் தோன்றுகின்றது. கல்வாரியின் நினைவு உயிருள்ள தூய உணர்ச்சிகளை நம் உள்ளத்தில் எழுப்பிவிடுகின்றது. கடவுளையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதிக்கும் துதி நம் உள்ளத்திலும் உதடுகளிலும் எழும்புகின்றது. கல்வாரியின் காட்சிகளை சதா மனதில் பேணும் ஆத்துமாவில் மேட்டிமையும் தற்புகழ்ச்சியும் தலையெடுக்க மாட்டா. CCh 340.2

விசுவாசம் நம் ஆண்டவரின் மாபெரும் பலியைத் தியானிக்கிற பொழுது, ஆத்துமா கிறிஸ்துவின் ஆவிக்குரிய ஜீவனை உட்கொள்ளுகின்றது. இராப்போஜனம் பெறுகின்ற ஒவ்வொரு வேளையும் ஆத்துமா ஆவிக்குரிய வல்லமை அடைகின்றது. ஆராதனையானது விசுவாசியைக் கிறிஸ்துவோடும் அவர் மூலமாய்ப் பிதாவோடும் இணைக்கின்ற உயிருள்ள தொடர்பை அமைக்கின்றது. விசேஷித்த கருத்தில் சார்ந்திருக்கிற மனுமக்களுக்கு கடவுளுக்கும் தொடர்பு உண்டாக்குகின்றது. CCh 341.1

நற்கருணை ஆராதனை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைச் சுட்டிக் காட்டுகின்றது, அது சீடர்கள் மனத்தில் தெளிவான நம்பிக்கையை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப் பெற்றது. அவர்கள் அவரது மரணத்தை நினைவு கூரும்படி கூடி வந்த பொழுதெல்லாம் அவர் செயல்களை எண்ணிப் பார்த்தார்கள்:----பின்பு, பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்கு கொடுத்து; நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவ மன்னிப்புண்டாகும்படி அனேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது முதல் இந்த திராட்சபழ ரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் இராஜ்யத்தில் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 26:27-29) அவர்கள் தங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்திலே தங்கள் ஆண்டவருடைய வருகையைப் பற்றிய நம்பிக்கையினால் ஆறுதல் அடைந்தார்கள். நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் பொழுதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:26) என்னும் வசனம், அவர்களுக்குச் சொல்லி முடியாத அருமையாய் இருந்தது. CCh 341.2

இந்தக் காரியங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. மக்களை நெருங்கி ஏவுகின்ற இயேசுவின் அன்பை அதன் வல்லமையுடனே கூட நாம் சதா நினைவு கூர வேண்டும். இந்த ஆராதனையானது நமக்காக வெளிப்படுத்திய கடவுள் அன்பைக் குறித்து நம் உணர்ச்சிகளுடனே பேசும்படி கிறிஸ்து இதை ஏற்படுத்தியிருக்கின்றார். கிறிஸ்து மூலமாகவே அல்லாமல் நம் ஆத்துமாவிற்கும் கடவுளுக்கும் எவ்வகையிலும் ஐக்கியம் உண்டாக்க முடியாது. இயேசுவின் அன்பினாலேயே சகோதரனோடு சகோதரனுக்கு ஐக்கியமும் அன்பும் உறுதிப்பட்டு என்றும் நிலை நிற்கவேண்டும். கிறிஸ்துவின் மரணத்தைக் காட்டிலும் குறைவான பரிகாரம் யாதொன்றினாலும் அவருடைய அன்பு நமக்கு விரும்பிய பலனை விளைவிக்கும்படி செய்ய இயலாது. அவரது மரணத்தினாலேயே நாம் அவரது இரண்டாம் வருகையை மகிழ்ச்சியுடனே எதிர்பார்க்கக்கூடியவர்களாய் இருக்கின்றோம். அவரது பலியே நம் நம்பிக்கைக்கு மத்தியஸ்தலம். அதன் மேலேயே நாம் நம் விசுவாசத்தை நிலைப்படுத்த வேண்டும். DA 643----661. CCh 341.3