Go to full page →

இரண்டு பேர் ஒரு மனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ? CCh 365

குறிப்பிட்ட அவிசுவாசி சமய நெறிக்கு உதவியாளராக இருக்கிறார். அவர் கிறிஸ்துவர் அல்ல என்னும் ஒரே காரியம் தவிர மற்றவை எல்லாம் அவர் துணைவர் ஆகிரதற்கு விரும்பக்கூடியதாகவே இருக்கின்றன என்று, சில வேளைகளில் நியாயம் பேசுவதுண்டு. விசுவாசியின் சிறந்த நிதானம், ஓர் அவிசுவாசி என்பதைக் குறிப்பாகத் தெரிவித்தாலும், பத்தில் ஒன்பது காரியங்களில் உள்ளப்பற்றே வெற்றி அடைகின்றது. விவாக வேளையில் பீடத்தில் வாக்களிக்கின்ற அந்நிமிஷமே ஆவிக்குரிய மாறுபாடு தொடங்குகின்றது; சமய நெறியின் அனல் குளிர்ந்து போகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக அரண்கள் இடிந்து விழுகின்றன. இறுதியில் தம்பதிகள் இருவரும் சாத்தான் கருங்கொடியின் கீழ் அடுத்தடுத்துப் பக்கத்தில் நிற்கின்றனர். மணவிழாக் கொண்டாட்டத்திலே தானும், உலக சிந்தையானது மனச்சாட்சியையும், விசுவாசத்தையும், சத்தியத்தையும் எதிர்த்து, வெற்றி பெறுகின்றது. புதிய இல்லத்தில் ஜெப வேளைக்கு நன்கு பதிப்பு கிட்டாது. மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் தெரிந்தெடுத்துக் கொண்டு இயேசுவையோ தள்ளிவிட்டார்கள். CCh 365.2

அவிசுவாசமுள்ளவர் முதன் முதல் புதிய உறவு முறையில் எவ்வகை எதிர்ப்பும் காண்பிக்க மாட்டார். ஆனால் வேத சத்தியத்தின் பொருளைக் கவனத்திற்கும் ஆராய்ச்சிக்கும் கொண்டு வந்து அவருக்கு காட்டும் பொழுது, உணர்ச்சி உடனே எழும்பி விடுகிறது.---- நான் எத்தன்மையுடையவன் என்று அறிந்தே என்னை மணஞ்செய்திருக்கின்றாய். இது முதல் உன் தனிப்பட்ட கருத்துகள் பற்றி என்னுடன் உரையாடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்து கொள் என்று எச்சரிக்கின்றார். விசுவாசி தமது விசுவாசத்தைக் குறித்து யாதாவது சிறப்புள்ள ஊக்கம் காட்டுவாரானால், அது கிறிஸ்துவ அனுபவத்தில் ஆர்வம் இல்லாதவர் ஒருவரிடம் அன்பில்லாமல் நடந்துகொள்ளுவது போல் தோன்றும். CCh 366.1

விசுவாசமுள்ளவர் தம் புதிய உறவு முறையில் தாம் தெரிந்துகொண்டே துணைவருக்கு அவர் சிறிது விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விவாதிக்கின்றார். சமுதாயமுறை உலக முறை வேடிக்கை விளையாட்டுக்களை அவர் ஆதரிக்கின்றார். முதன் முதல் இவ்வாறு செய்வதில் மிகவும் வெறுப்புணர்ச்சி உண்டாகின்றது. ஆனால் சத்தியத்தில் ஆர்வம் குறையக்குறைய விசுவாசம் ஐயமாகவும் அவநம்பிக்கையாகவும் மாறி விடுகின்றது. ஒரு காலத்தில் உறுதியும் மகா நேர்மையுமுள்ளவராய் இருந்த விசுவாசி கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றிச் சென்றவர் இப்பொழுது இருக்கிறபடி ஐயத்தில் ஊசலாடுகின்ற ஆளாகி விடுகின்றார். ஐயோ இது அந்த அறிவு கெட்ட மனத்தினால் விளைந்த மாறுதல் அன்றோ? CCh 366.2

உலக உறவு கொள்வது அபாயமுள்ள செயல். இளைஞரான ஆடவரும் மகளீரும் இவ்வகை மணம் நடத்துகின்ற அந்த நாழிகையிலே தானே, அவர்களுடைய சமய நெறி அனுபவம், பயன் இவற்றின் வரலாறு முடிவடைகின்றது என்பதைச் சாத்தான் நன்கறிவான். அவர்கள் கிறிஸ்துவுக்கு நஷ்டமாகி விட்டனர். அவர்கள் பின்னும் சிறிது காலம் கிறிஸ்துவ வாழ்க்கை நடத்த முயற்சி செய்யலாம். ஆனால் அவர்கள் முயற்சிகள் எல்லாம் அதற்கு எதிராக எதிர்த்திசையில் நிலையான செல்வாக்கு பெற்றுவிடுகின்றது. அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையும் பற்றிப் பேசுவது, ஒரு காலத்தில் அவர்களுக்குச் சிலாக்கியமும் சந்தோஷமுமாய் இருந்தது. ஆனால் தங்கள் வாழ்க்கை நலத்தை எவருடன் பிணைத்திருகின்றார்களோ அவர் அதில் ஆர்வம் கொள்ள மாட்டார் என்று அறிந்து, அந்தப் பொருளை எடுத்துரைக்க மன மற்றவர்கள் ஆகிவிடுகின்றார்கள். அதன் பலனால் அருமையான சத்தியத்தைப் பற்றிய விசுவாசம் உள்ளத்தில் மடிந்து போகின்றது; சாத்தான் வஞ்சகமாய் அவர்களைச் சுற்றிலும் ஐயவாதம் என்னும் வலையைப் பின்னி விடுகின்றான். CCh 367.1

இரண்டு பேர் ஒரு மனப்பட்டிருந்தாலொழிய ஒரு மித்து நடந்து போவார்களோ? ஆமோஸ் 3:3, உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளுப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒரு மனப்பட்டிருந்தால், பரலோகத்தீலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் மத். 18:19. ஆனால் இங்கே காட்சி எவ்வளவு விபரீதமாய் இருக்கின்றது! அவர்களில் நெருக்க மாய் இணைக்கப்பெற்ற ஒருவர் தெய்வப் பக்தியில் ஈடுபட்டுருக்கின்றார்; மற்றவர் அலட்சியமாய்க் கவலையற்றிருக்கின்றார். ஒருவர் நித்திய ஜீவனுக்குப் போகிற வழியைத் தேடுகின்றார்; அடுத்தவர் மரணத்திர்குச் செல்லுகின்ற விரிவான வழியில் இருக்கின்றார். CCh 367.2

நூற்றுக் கணக்கானோர் குணப்படாத துணைவரை மணந்து கொள்ளுகிறதின் பயனாய்க் கிறிஸ்துவையும், பரலோகத்தையும் ஐக்கியத்தையும் அற்பமாக மதிக்கலாமோ? அருமை இரட்சகரிடம் சிறிதும் அன்பில்லாதவர் பொருட்டுப் பரலோக இன்பங்களை இழந்து போக விரும்புகிறதற்கு அதன் மதிப்பு அவ்வளவு அற்பமானதோ? CCh 368.1