Go to full page →

நீங்கள் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீரிகள் CCh 400

இழிவான இச்சைகள் உடம்பை இருப்பிடமாகக் கொண்டு அதன் மூலமாய்ச் செயலாற்றுகின்றன. மாம்சம் அல்லது மாம்சத்திற்குரிய அல்லது மாம்ச இச்சைகள் என்னும் சொற்கள், இழிந்த கெட்டுப்போன தன்மையைத் தழுவுகின்றன. மாம்சம் தன் மட்டில் கடவுள் சித்தத்துக்கு விரோதமாகச் செயலாற்ற இயலாது. மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும், சிலுவையில் அறைய வேண்டுமென்பது நமக்குக் கட்டளை, அதை நாம் செய்வது எப்படி? நம் உடம்பில் நாம் வேதனை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமோ? வேண்டாம்; ஆனால் பாவ சோதனையைக் கொன்று போட வேண்டும். கேடான எண்ணத்தை வெளியே துரத்த வேண்டும். எந்த எண்ணத்தையும் இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படுத்திச் சிறைபடுத்த வேண்டும். மிருக இச்சைகள் அனைத்தும் ஆத்துமாவின் உயர்ந்த வல்லமைக்கு அடங்கி இருக்கப் பண்ண வேண்டும். தேவ அன்பே எல்லாவற்றிற்கும் மேலாய் ஆளுகை செய்ய வேண்டும். உள்ளத்தில் கிறிஸ்து தனிச் சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும். நம் உடம்பு அவர் கிரயத்திற்குக் கொண்ட உடைமை என்று நாம் மதிக்க வேண்டும். நம் உடலுறுப்புக்கள் நீதியின் ஆயுதங்கள் ஆக வேண்டும். ---- A. H. 121-128. CCh 400.1