Go to full page →

பால் கொடுக்கும் தாயின் மனப்பான்மை CCh 405

இயற்கைக் கொடுக்கும் ஆகாரமே சிசுக்களுக்கு மிகச் சிறந்த ஆகாரம். தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. அனாவசியமாக தன் வசதிக்காகவோ அல்லது சமூக சல்லாப வசதிக்காகவோ தன் பாலை குழந்தைக்குக் கொடுக்க மறுப்பது இருதய உணர்வற்ற செயலாகும். CCh 405.4

குழந்தை தாய் பாலுண்ணும் சமயம் மிக்க ஆபத்துகரமான வேளை, அனேக தாய்மார்கள் மிதமிஞ்ச இச் சமயம் சமையல் அறையில் வேலை செய்யும்படி விடப்படுவதால், இரத்தம் கொதிப்படைகிறது; இதனால் குழந்தை ஆபத்துக் கேதுவாகத் தாக்கப்படுகிறது. தாயின் கொதித்தல் உடலிலிருந்து உண்ணும் பால் மட்டுமல்ல, அவளுடைய முழு உடலையும் கொதிக்கச் செய்யும் தாயின் ஆரோக்கிய மற்ற விஷ சத்துக்கள் குழந்தையின், ஆகாரத்தைப் பாதிக்கின்றன. தாயின் மனப்பான்மை குழந்தையின் தன்மையை பாதிக்கிறது. அவள் துக்கமாகவும், பதஷ்டமாகவும், வெடுவெடுப்பாகவும், கலவரமான மனவெழுச்சிகளுக்கு இடங்கொடுப்பாளாயின் குழந்தையின் ஆகாரம் கொதிப்படைந்து குழந்தைக்கு வயிற்று வலி, கெண்டையேறல், சில சமயங்களில் வலிப்புகளும் இழுப்புகளும் உண்டாக ஏதுவாகும். CCh 406.1

தாயிடமிருந்து பெறும்ஜ் ஆகாரத்தைப் பொறுத்து குழந்தையின் குணமும் பாதிக்கப்படும். எனவே, பாலூட்டும் தாய் அச்சமயம் தன்னடக்கமுடையவளாய் மன மகிழ்ச்சியுடன் தன்னைக் காத்து நடப்பது அவசியமாகும். இப்படிச் செய்வதினால் குழந்தையின் ஆகாரம் கெடாது; அமர்ந்த தன்னடக்கமான வழியைக் கையாடும் தன் குழந்தையின் மனதைப் பண் படுத்துவதில் செய்ய வேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு. குழந்தை தளர்ச்சியானதும், துரிதமாகப் பதஸ்டமடையுந் தன்மையுடையதாயிருந்தால், தாயின் கவனமுள்ள, பதஷ்டமற்ற நடத்தை அதை சாந்தப்படுத்தி, திருத்தும் செல்வாக்கு உடையதாகும்; குழந்தையின் ஆரோக்கியம் அதிகம் விருத்தியாகும். CCh 406.2