Go to full page →

ஐசுவரிவான்களும் ஏழைகளும் அனுபவிக்கக்கூடிய ஆரோக்கிய நேரப்போக்கு CCh 444

விருத்தாப்பியரைப் போல், வாலிபர் அமர்ந்து ஆழ்ந்து சிந்திக்கவும், குழந்தைகள் பெரியோர்களைப் போல், நிதானமாய் இருக்கவும் செய்வது கூடாதக் காரியம். பாவ கேளிக்கைகளைக் கண்டிக்கும் போதே, சிறுவரின் பெற்றோர் ஆசிரியர்கள் பாதுகாப்பாளர்கள் அவர்களுடைய சன்மார்க்கம் கறைப்படாமலும் சீர்கெடாமலுமிருக்கும்படி மாசற்ற கேளிக்கைகளை ஏற்படுத்துவார்களாக. அவர்களைக் கட்டுக்கடங்காத அளவில் புத்தியீனமானதும் நாசகரமானதுமான வழிகளில் மிரண்டு ஓடச் செய்யும் கடினமான கட்டுப் பாடுகளையும் சட்டங்களையும் ஏற்படுத்தாதிருங்கள். உறுதியாகவும், பட்சமாகவும், கவனமாகவும் ஆட்சி செய்து, அவர்களுடைய மனசுகளையும் நோக்கங்களையும் வழி நடத்தி, மென்மையோடும், விவேகத்தோடும், அன்போடும் அவர்கள் நலத்தையே நீங்கள் நாடுவதாக அவர்கள் அறியும்படி செய்ய வேண்டும். C. T. 335. CCh 444.4

சில வித நேரப்போக்குகள் மனதுக்கும் சரீரத்துக்கும் சிரேஷ்டமான நன்மை தரும். புலமையும், பகுத்தறிவுமுடைய மனது மாசற்றவைகள் மட்டுமல்ல, போதனா சக்தியுமுடைய ஏதுக்களிலிருந்து போதிய பொழுது போக்கையும் வேடிக்கைகளையும் கண்டுகொள்ள முடியும். திறந்த வெளிகளில் விளையாடுவதும் இயற்கையில் கடவுள் கிரியைகளைப் பற்றி தியானிப்பதும் மகோன்னத பலனளிக்கும். 4T. 653. CCh 445.1

எவை தங்களைப் பிறருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக்குகிறதோ அதை விட சிறந்த நேரப்போக்கு சிறுவருக்கும், வாலிபருக்கும் வேறு இல்லை யென்பது ரூபிக்கப்பட வேண்டும். இயற்கனவே இளைஞர்கள் மிக உற்சாகமும், ஆலோசனைகளுக்குத் துரிதமாய் இணங்குகிறவர்களுமாயிருப்பார்கள். Ed. 212. CCh 445.2

தூய சிந்தைகளை அப்பியாசிப்பதினாலும் சுயநலமற்ற கிரியைகளைச் செய்வதினாலும் அடைகிற இன்பம் அனுதாபமான வார்த்தைகளைப் பேசி பட்சமான உதவிகளைச் செய்வதினால் கிடைக்கும் இன்பம் ஆகியவை கடவுளால் ஐசுவரிவான்களுக்கும் ஏழைகளுக்கும் நிரந்தரமாக அனுபவிக்க அருளப்பட்ட இன்பங்கள். இப்படிப்பட்ட சேவைகளைச் செய்கிறவர்களிடமிருந்து, அனேக துக்கங்களால் இருண்ட ஜீவியத்திலிருப்பவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளி வீசி பிரகாசிக்கும். 9T. 57. CCh 445.3

இன்பமான வீண் கேளிக்கைகளில் ஈடுபடாதபடியிருக்கச் செய்யும், அவசியமானதும், உபயோகமானதுமான பொழுது போக்குகள் உலகில் நிரம்ப இருக்கின்றன. தேவனை மகிமைப்படுத்தும்படி அவர்கள் கடவுள் அருளிய தாலந்துகளை நடைமுறையில் பயன்படுத்தி, மன சக்திகளையும் சரீர உறுப்புகளின் பலத்தையும் அடைந்து மூளை, எலும்பு, தசையாவும் திட்டமான நோக்கத்தோடு நன்மை செய்யவும், ஆழ்ந்து சிந்திக்கவும் தக்க வலிவும் பலமும் அடையக் கூடும். A. H. 509. CCh 446.1

ஒரு நகரத்தில் அல்லது கிராமத்த்கிலிருக்கும் பல குடும்பங்கள் சேர்ந்து, தங்களைப் பலட்சியப்படுத்தும் சரீர மானத வேலைகளை விட்டு விட்டு, மிக மனோகரமான காட்சி அளிக்கும் ஏரிப் பக்கம், அல்லது அழகிய தோட்டமுள்ள ஒரு வெளி இடம் செல்வார்களாக. தங்களுக்கு நல்ல ஆரோக்கிய ஆகாரமும், பழங்களும், பருப்புகளும் கூடிய பந்தியை ஆயத்தஞ் செய்து கொண்டு போய், ஒரு மரத்தடியில் வான வீதியின் கீழ் அமருவார்களாக. சவாரி, அப்பியாசம், காட்சிகள் யாவும் பசியைக் கிளப்பி, அரசரும் அருந்த விரும்பும் அமிர்த உணவாகச் செய்துவிடும். CCh 446.2

அப்படிப்பட்ட வேளைகளில் பெற்றோர் பிள்ளைகள் யாவரும், கவலை, தொழில், சிக்கல்கள் ஆகியவை பற்றி யாதொன்றும் எண்ணக் கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பிள்ளைகளாக நடந்து, அவர்களை எவ்வளவு சந்தோஷப்படுத்த முடியுமோ அவ்வளவு சந்தோஷப்படுத்த வேண்டும். அந் நாள் முழுவதும் ஆரோக்கியமான விளையாட்டுகளிலும், பொழுது போக்குகளிலும் செலவிடப்பட வேண்டும். அறைகளுக்குள்ளேஎ அமர்ந்து வேலை செய்கிறவர்கள் திறந்த வெளியில் ஓடியாடி விளையாடுவதினால், ஆரோக்கியத்திற்கு அனுகூலமாகும். கூடுமான வரையில் யாவரும் இப்படிச் செய்ய வேண்டும். நஷ்டம் ஒன்றுமாகாது; ஆனால் அதிக லாபம் உண்டு. புத்துயிருடன் புது ஊக்கத்துடன், அதிக உற்சாகத்தோடு வேலை செய்யும் வியாதியைத் தடுக்க மிகுந்த சக்தி பெற்றவர்களாயும் தங்கள் அலுவல்களுக்குத் திரும்புவார்கள். 1T. 514, 515. CCh 446.3

சாதாரணமான பந்தாட்டத்தை நான் கண்டனஞ் செய்வதில்லை, ஆயினும் இதுவும் சில சமயங்களில் மிதமிஞ்சிப் போவதுண்டு. CCh 447.1

வீண் கேளிக்கைகளில் ஈடுபடுவதினால் உண்டாகும் நிச்சய பலனைக் கண்டு என் மனம் ஒடுங்குகிறது. கிறிஸ்துவின்றி நாசமாகும் ஆத்துமாக்களுக்குச் சத்திய ஒளியைக் கொண்டு போகச் செலவிடப்பட வேண்டிய பொருளை வேறு வழியில் திருப்பிவிடுகிறது. சுயநல நாட்டங்களுக்கான கேளிக்கைகளும், பொருளைச் செலவழிப்பதும் தன்னை மகிமைப்படுத்தும்படி வழி நடத்தி, இப்படிப்பட்ட விளையாட்டுகளை இன்பத்துக்காகக் கற்பிப்பது கிறிஸ்தவ குணத்தைப் பூரணப்படுத்த உதவாமல், வீன் ஆசையையும் நாட்டத்தையும் உண்டாக்குகிறது. A. H. 499. CCh 447.2

பொழுது போக்குக்கும் சரீர பயிற்சிக்கும் கவனஞ் செலுத்துவதினால், பள்ளிக்கூட வேலையின் ஒழுங்குபடுத்தப்பட்ட காரியக் கிரமங்கள் பாதிக்கப்படலாம். ஆனால் இவ்விதத் தடைகள் உண்மையான இடையூறுகள் ஆகா. மனமும், சரீரமும் ஊக்கப்படுவதினாலும், சுயநலமற்ற ஆவியை வளர்ப்பதினாலும் ஆசிரியர் மாணவர் பொதுநலப் பணியிலும், நட்பான சகவாசத்திலும் இணைக்கப்படுவதினாலும் செலவாகும் நேரமும் முயற்சியும் நூறு மடங்கு பயன் தரும். இளைஞருக்கு ஆசீர்வாதமாகப் பிரயோகிக்கப்பட வேண்டிய அமைதியற்ற சக்திகள் துர்ப்பிரயோகஞ் செய்யப்படாமல் காக்கப்படுகின்றன. தீமைக்கு விலக்கிக் காக்கும் ஏதுவாக மனசு நன்மையோடு முன்கூட்டியே இணைக்கப்பட்டுவிடுவது சட்டங்கள், சிட்சைகள் ஆகிய எண்ணிறந்த தடைகளை விடச்சிறந்ததாகும். Ed. 213. CCh 447.3