Go to full page →

எல்லாரையும் பற்றி நன்றாக எண்ணு CCh 469

நமது சகோதரனுக்கு விரோதமாக ஒரு நிந்தையைக் கேட்கும்போது நாம் உடனே அதை எடுத்தாள ஆரம்பிக்கிறோம். இதற்குத் தகுந்த ஆலோசனை; கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். சங். 15:1-3. CCh 469.1

பிறர் தவறுகளாஇ நம்மிடம் சொல்லுகிற ஒருவன் அனுகூல சமயம் வாய்த்தால் நம் தவறுகளையும் தாராளமாகப் பிரசித்தி செய்வான் என்பதை மட்டும் ஒவ்வொருவனும் நினைவு கூர்ந்தால் உலகில் எத்தனையோ வீணான வம்பளப்புகள் நின்று போகும். எல்லாரைப்பற்றியும், விசேஷமாக நம் சகோதரரைப்பற்றி வேறு விதமாக சிந்திக்க அவசியப்படும் வரையிலும் நன்றாய் எண்ணிக்கொள்ள வேண்டும். நிந்தையான பேச்சைக் கேட்ட உடனேயே நம்பிவிடக்கூடாது. பொறாமை, தப்பெண்ணம், மிகைப்படுத்திக் கூறல், அல்லது நிஜத்தை ஓரளவு மட்டும் சொல்லுவது ஆகியவற்றால் வரும் பயனாக இருக்கலாம். பொறாமையும் சந்தேகமும் இடம் பெற்றால் முட் புதர் போல் நெருக்கி நற் குணங்களை அமுக்கிப் போடும். ஒரு சகோதரன் வழி விலகிப்போனால், நாம் அவன் மீது உண்மையான வாஞ்சை காட்ட வேண்டிய வேளை அதுவே. அவனுடைய மீட்புக்காகச் செலுத்தப்பட்ட விலையேறப் பெற்ற கிரயத்தை நினைத்தவர்களாக அவனிடம் அன்புப்டன் சென்று, அவனோடு அவனுக்காக ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்வதினால் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து மீட்டு, திரளான பாவத்தை மூடுவாய். CCh 469.2

ஒரு பார்வை, ஒரு வார்த்தை, சப்தத்தில் ஒரு மாறுபாடு கூட சில இருதயங்களில் கூரிய அம்பு போல பாய்ந்து, சுகப்படக்கூடாத காயத்தை உண்டாக்கலாம். இப்படிப்பட்ட ஒரு சந்தேகம், ஓர் அவதூறு தேவன் நல்ல வேலை செய்ய உபயோகிக்கக்கூடைய ஒருவனுடைய செல்வாக்கைப் பாழாக்கி, அவனுடைய உபயோகத்தை நாசமாக்கக் கூடும். சில மிருகவர்க்கங்களில் ஒன்று காயப்பட்டு விழுந்தால், மற்றவை அதைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போடும். கிறிஸ்துவின் நாமத்தையுடையவர்களும் அதே குரூர ஆவியோடிருக்கிறார்கள். தங்களைப் பார்க்கிலும் சற்று குறைந்த குற்றவாளிகளாகக் காணப்படுகிறவர்களையும், கல்லெறிய வைராக்கியம் காட்டுபவர்களுண்டு. சிலர் தங்கள் தவறுகளையும் குறைகளையும் விட்டுக் கவனத்தை விலக்க அல்லது தேவனுக்கும் சபைக்கும் வெகு பக்தி வைராக்கியமுடையவர்களாகக் காட்ட பிறருடைய தவறுகளைக் காட்டுவார்கள். 5T. 58, 59. CCh 470.1

கிறிஸ்துவின் ஊழியர்களுடைய நோக்கங்களையும் வேலைகளையும் பற்றி குறை கூறும் நேரத்தை ஜெபத்தில் செலவிடுவது நலந்தரும். தாங்கள் குற்றங் கண்டு பிடிப்பவர்களைப் பற்றிய உண்மையை அறிவார்களானால் அவர்கள் மிகவும் வித்தியாசமான அபிப்பிராயம் கொள்வார்கள். பிறரைக் குறை கூறிக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும்; நான் என் ரட்சிப்பைச் சம்பாதிக்க வேண்டும். என் ஆத்துமாவை மீட்க விரும்புகிறவரோடு நான் ஒத்துழைப்பேனேயாகில் நான் என்னைக் குறித்தே வெகு ஜாக்கிரையாக இருக்க வேண்டும். என் ஜீவியத்தில் காணப்படும் ஒவ்வொரு தீமையையும் விலக்க வேண்டும். கிறிஸ்து வுக்குள் நான் புதிய சிருஷ்டியாக வேண்டும். நான் ஒவ்வொரு தவறுதல்களையும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது, தீமையோடு போரிடுகிறவர்களைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக என் தைரிய மூட்டும் வார்த்தைகளினால் அவர்களைப் பலப்படுத்தக்கூடும் என்பார்களாக. 8T. 83, 84. CCh 470.2