Go to full page →

தக்க சமயத்தில் தெய்வ அன்பைச் சம்பாதியுங்கள் CCh 498

பெயெர்செபாவிலே இராத்தரிசனத்திலே தனக்குக் கொடுக்கப்பட்ட தெய்வ கட்டளையின்படியே கீழ்ப்படிந்து, ஈசாக்கு தன் பக்கத்திலே நடந்து வர, பிரயாணஞ் செய்த விசுவாசியாகிய ஆபிரகாமை நான் நினைக்கிறேன். ஈசாக்கைப் பலியிடவேண்டி கடவுள் குறித்துக் காட்டுவதாகத் தனக்குக் கூறிய மலையை அவன் தனக்கு முன்பாகப் பார்க்கின்றான். CCh 498.1

உருக்கமுடைய தகப்பனின் நேசக்கைகள் ஈசாக்கைக் கயிற்றினால் கட்டுகையில் நடுக்கமடைகின்றன என்ற போதிலும் கடவுளின் கட்டளையை அவன் நிறைவேற்றுகின்றான். ஏனெனில் தகப்பனின் நேர்மையை அவன் நம்புகின்றான். ஆயினும் யாவும் ஆயத்தமாயிருக்கும் பொழுது, தகப்பனின் விசுவாசமும் மகனின் ஒப்புக்கொடுக்குதலும் முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகு, தேவ தூதனானவர் மகனை வெட்டுவதர்கு ஓங்கிய ஆபிரகாமின் கையைக் தடை செய்து, ஆபிரகாம் அவ்வளவு செய்தது போதுமென்று கூறுகின்றார்: நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏசுசுதன் என்று பாராமல், எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால், நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன். ஆதி. 22:12. CCh 498.2

ஆபிரகாமின் விசுவாசத்தை வெளிப்படுத்தும் இந்தக்கிரியை நமது நலத்தின் பொருட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடவுளுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு பாடு, சிரமம் இருந்தாலும், நாம் முழு விசுவாசத்துடனே நடந்துகொள்ள வேண்டுமென்று இதின் மூலம் போதிக்கப் படுகின்றோம். தங்கள் பெற்றோரிடத்திலும், தெய்வத்தினிடமும் பரிபூரணமான கீழ்ப்படிதலைப் பிள்ளைகள் காட்ட வேண்டுமென்று இது கற்பிக்கின்றது. ஆபிரகாமின் கீழ்ப்படிதலிலிருந்து தேவனுக்கு நாம் கொடுக்காமல் வைத்துக் கொள்ளக் கூடிய அரிய காரியம் எதுவுமில்லை என்றும் கற்பிக்கப்படுகின்றோம். CCh 499.1

தமது குமாரனுக்குத் தெய்வம் தாழ்மையான தோர் வாழ்க்கையையும், சுய வெறுப்பையும், தரித்திரத்தையும், உழைப்பையும், நிந்தையையும், சிலுவையின் வேதனையான மரணத்தையும் வைத்தார். என் நேச குமாரனே, நீர் மரிக்க வேண்டியதில்லை. நீர் அனுபவித்த பாடுகள் போதும் என்று தூதன் மூலமாக எச்செய்தியும் அனுப்பப்படவில்லை. எண்ணிறந்த தூதர்கள் துக்கத்துடனே அவரண்டையில் நின்று கொண்டு, கடவுள் ஈசாக்கைத் தப்புவித்தது போலவே, கடைசி வினாடியில் அவருடைய நீசச் சிலுவை மரணம் நிறைவேற வொட்டார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் கடவுள் திருப் புதல்வருக்கு எச்செய்தியையும் கூருவதர்கு அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி மலைக்குப் போகும் வழியிலும் அவர் தாழ்மைப்படுத்தப்பட்டார். அவரை நிந்தித்து, பரியாசம் பண்ணி, அவர் மீது துப்பினார்கள். நிந்தையையும் பரியாசத்தையும் தூஷணையையும் அவர் பொறுத்தார். சிலுவையில் தமது தலையைத் தாழ்த்தி, மரணமடையுமட்டும் சகிப்பினையைக் காண்பித்தார். CCh 499.2

தமது அன்பைக் குறித்து இதைப்பார்க்கிலும் பெரியதோர் அத்தாட்சியை தேவன் அருள முடியுமோ? தமது குமாரனை இத்தகைய துன்பத்தின் வழியாகக் கடந்து செல்லவும் செய்தாரே. கடவுள் மனிதனுக்கு அருளியளவு முற்றும் இலவசமும் முடிவற்றதுமானது போலவே, நாம் அவர் பேரில் விசுவாசம் வைக்கவும் அவருக்குக் கீழ்ப்படியவும், நமது முழு இருதயத்தின் மீதும், அதன் ஆசாபாசங்களில் மீதும் அவர் உரிமை பாராட்டுகிறார். தேவன் அருளியளவிற்கு ஒத்த அளவாய் நமது கீழ்ப்படிதலும் இருக்க வேண்டும். அது பூரணமானதும் குறைவில்லாததுமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் தேவனுக்குக் கடனாளியாக இருக்கின்றோம். நாம் நம்மை முற்றுமாகவும், மனப்பூர்வமாகவும் பலியாகத் தத்தம் செய்ய வேண்டும். உடனடியானதும், மனப்பூர்வமானதுமான கீழ்ப்படிதலை உரிமை பாராட்டுகின்ற அவர் அதற்குக் குறைவான தொன்றையும் அங்கீகரிக்கமாட்டார். தெய்வ கிருபையையும், தயவையும் சம்பாதிக்க இதுவே தருணம். இதை வாசிக்கிறவர்கள் சிலரின் வாழ்நாளில் இறுதி ஆண்டாக இவ்வாண்டு இருக்கலாம். இதை வாசிக்கும் இளைஞரில் யாராவது ஊக்கமுடன் அவரைத்தேடி, உற்சாகத்துடனே அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு அவர் அருளும் சமாதானத்திற்குப் பதிலாக உலக இன்பங்களைத் தெரிந்து கொள்வீர்களோ? 3T 361-370. CCh 500.1