Go to full page →

பெற்றோரின் ஒருமை CCh 508

பிள்ளைகளுடைய சுபாவம் இயல்பாகவே உணர்வும் பாசமுமுடையது. அவர்கள் இலகுவாகச் சந்தோஷமடையவும் வருத்தமடையவும் செய்யலாம். அன்பு செறிந்த வார்த்தைகளினாலும் கிரியைகளினாலும் தாய்மார் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் இருதயங்களுடனே பிணைக்கலாம். கடுமையையும் பலவந்தத்தையும் பிள்ளைகளிடத்தில் பிரயோகம் பண்ணுவது தவறு. ஒரே மாதிரியான உறுதியுடைமையும் கோபதாப கலப்பில்லாமலே அடக்கியாளுதலும் எந்தக் குடும்பத்தின் நல்லொழுக்கப் பயிற்சிக்கும் அவசியமாகின்றது. நீங்கள் அவர்களிடம் எதிர்ப்பார்ப்பதை அமைதியுடனே அன்புடனே வழுவதலின்றி எடுத்துக் கூரிச் சொல்லியபடியே யாவும் செய்து நிறைவேற்றுங்கள். 3T 532. CCh 508.1

தங்களுடைய பிள்ளைப் பிராயத்திலே தாங்கள் அன்பிற்காகவும் பரிவிற்காகவும் எத்தனை ஏக்கமுடையோராயிருந்தார்கள் என்பதைப் பெற்றோர் மறந்து விடல் ஆகாது. கடுமையாகவும் வெடுவெடுப்புடனும் கடிந்து கொள்ளப்பட்ட போது அவர்கள் எத்தனை மன வருத்தம் அடைந்தார்களென்றும் நினைவு கூறுதல் வேண்டும். பிள்ளைப் பிராய உணர்வுகளுடனே அவர்கள் திரும்பவும் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளின் தேவைகள் யாவையும் அறிந்துகொள்ள பழக்கஞ் செய்வதற்குத் தங்கள் மனதைத் தாழ்த்த வேண்டும். என்ற போதிலும், உறுதியும் அன்பும் கலந்த மொழிகளால் பிள்ளைகளிடமிருந்து கீழ்ப்படிதலைப் பெற வேண்டும். பெற்றோரின் வார்த்தைக்கு எவ்வித மறுப்புமின்றிப் பிள்ளைகள் கீழ்ப்படியவேண்டும். 1T 388. CCh 508.2

குடும்ப நிர்வாகத்தில் உறுதியில்லாமலிருப்பது பெரும் தீங்கை விளைவிக்கும். ஏறக்குறைய நிர்வாக மற்ற நிலை போன்றதோர் நிலையே அதுவாகும். மார்க்க வைராக்கியமுடைய பெற்றோருடைய பிள்ளைகள் ஏன் அடங்காதவர்களும் கோப மூட்டுகிறவர்களும் கலக குணமுள்ளவர்களுமாயிருக்கின்றார்கள்? இது அடிக்கடி கேட்கப் படுகின்றதோர் கேள்வி. காரணம் வீட்டுப் பயிற்சியின் குறைவே. CCh 509.1

பெற்றோர் ஒன்றுபட்டு செயலாற்றக் கூடாவிட்டால், இருவரும் மன ஒற்றுமை காண்பதற்கு பிள்ளைகளை விட்டுத் தனிப்பட ஆலோசனை செய்யட்டும். CCh 509.2

பெற்றொர் பிள்ளையின் நல்லொழுக்கப் பயிற்சிக்கடுத்த காரியங்களில் ஒன்றுபட்டவர்களாகவிருந்தால், தன்னிடத்தில் எதிர்பார்க்கப்படுவதின்னதென்று பிள்ளை அறிந்து கொள்ளுவான். தாயார் பிள்ளைக்கு அளிக்கும் சிட்சையைத் தகப்பன் அங்கீகரிக்காமல் தன்னுடைய வார்த்தையினாலோ பார்வையினாலோ அதை வெளிப்படுத்தினால், அல்லது தாயானவள் அதிக கடுமையாக இருப்பதாக தகப்பன் எண்ணி அவளுடைய கொடுமைக்கு ஈடு செய்யும் வகையில் செல்லம் கொடுத்துப் பிள்ளை மனம்போல விட்டு விட்டால் குழந்தை கெட்டுப்போகும். தன் மனம்போலச் செய்வதற்கு கூடுமென்று விரைவில் பிள்ளை அறிந்து கொள்ளுவான். இந்தப் பாடத்தை பிள்ளைகளுக்கு விரோதமாகச் செய்யும் பெற்றோர் பிள்ளைகளுடைய ஆத்துமாக்களுக்காகக் கணக்கு கொடுக்க வேண்டும். AH 310-315. CCh 509.3

பெற்றோர் முதலில் தங்களைக் கட்டுப்படுத்த அறிய வேண்டும்; அப்பொழுது அவர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக சித்திகரமாகக் கட்டுப்படுத்தி ஆள முடியும். தங்களைக் கட்டுப்படுத்தாமல் பேசி சினந்துகொள்ளும்போதெல்லாம், அவர்கள் தெய்வத்திற்கு விரோதமாகப் பாவஞ் செய்கின்றனர். முதலாவது பிள்ளைகளிடத்தில் அவர்கள் பேசி, நியாயத்தை எடுத்துக் கூறி, அவர்களுடைய தப்பிதங்கள் அவர் களுக்கு விளங்குமாறு செய்து, அவர்களுடைய பாவத்தைச் சுட்டிக் காட்டி, அவர்கள் பெற்றோருக்கு விரோதமாக மட்டுமல்ல, தெய்வத்திர்கு வீரோதமாகவும் பாவஞ் செய்திருக்கின்றனர் என்று விளக்குங்கள். உங்கள் சொந்த இருதயம் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்க, தவறு புரிகின்ற உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் இருதயத்தில் பரிவும் துக்கமும் ததும்பி நிற்க, அவர்களைக் கண்டியுங்கள். அவ்வாறு செய்யப்படும் கண்டனத்தினால் பிள்ளைகளுடைய இருதயத்தில் உங்கள்மீது வெறுப்பு தோன்றாது. அவர்கள் உங்களிடத்தில் அன்பு கூர்ந்திருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஏதோ சங்கடம் விளவித்ததற்காகவோ அன்றி நீங்கள் உங்கள் ஆத்திரத்தை அவர்கள் பேரில் தீர்த்துக்கொள்வதற்காகவோ அவர்களைத் தண்டிக்கவில்லை என்று உணருவார்கள். அவர்கள் பாவத்திலே வளரும்படி விடப்படாமல் அவர்களுடைய நன்மையின் பொருட்டே உங்களுடைய கடமையைச் செய்ததாக அறிவார்கள். 1T 398. CCh 509.4