Go to full page →

பிள்ளைகளிடத்தில் கண்டிப்பான உண்மையுடனே நடந்துகொள்ளுதல் CCh 523

பெற்றோர் உண்மைக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும். ஏனெனில் அது ஒவ்வொரு நாளும் பிள்ளையின் இருதயத்தில் பதிய வேண்டிய நிதசரி போதனை. முரண்படாத இலட்சியமே வாழ்வின் அம்சங்கள் யாவிலும் பெற்றோரை ஆட்கொள்ள வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் கல்வியையும் நல்லோழுக்கப் பயிற்சியையும் பொறுத்த வரைக்கும் அவ்வாறே பெற்றோர் ஆண்டு கொள்ளப்பட வேண்டும், பிள்ளையானாலும் அதின் செய்கை சுத்தமோ செவ்வையோ என்பது அதின் நடக்கையினால் விளாங்கும். CCh 523.4

பகுத்தறிவில் குறைவுபட்ட அன்னையொருத்தி தன் பிள்ளைகள் வஞ்சகரும், மாயக்காரருமாயிருக்க அவர்களுக்குப் போதனை செய்யலாம். இவ்வாறு பேணப்பட்ட குணாதிசயங்கள் நீங்காத தன்மையுடைவனாக மாறி, பொய் சொல்லுதல் சுவாசிப்பது போன்றே பழக்கமாகி விடுகின்றது. பாவனை செய்து நடித்தல் மெய்யென்றும் யதார்த்த மென்றும் அர்த்தப்படுத்தலாம். CCh 524.1

பெற்றோரே, ஒருபொழுதும் திரித்துக் கூறாதிருங்கள். போதனையாலும் முன் மாதிரியாலும் ஒருபொழுதும் பொய்யுரையாதேயுங்கள். உங்கள் பிள்ளை சத்தியவந்தனாக விருக்க வேண்டுமானால் நீங்களும் சத்தியவந்தராகவிருங்கள். நேர்மையாகவும் அதில் பிசகாமலும் இருங்கள். சிறிதளவு மழுப்பிப் பேசுதலும் அனுமதிக்கப்படக்கூடாது. அன்னையர் திரித்துக் கூறுவதும் உண்மையற்றவர்களுமாகவிருக்கப் பழக்கஞ் செய்திருப்பதால், பிள்ளையும் அவனைப் போலவே நடந்து கொள்ளுவதற்கு பழகுகின்றது. CCh 524.2

அன்னையின் வாழ்க்கையின் அம்சங்கள் யாவிலும் யதார்த்தம் அப்பியசிக்கப்பட வேண்டும். பிள்ளைகளை நல்லொழுக்கமுடையவர்களாக்குவதற்குப் பயிற்சி செய்யும்பொழுது, பையன்கள் போன்றே பெண்பிள்ளைகளையும் திரித்துக் கூறாதிருக்கவும் கொஞ்சமும் ஏமாற்றாதிருக்கவும் போதிப்பது முக்கியமானது. CG 151, 152. CCh 524.3