Go to full page →

குழந்தைகளுக்கு ஆலோசனை அளிப்பதில் ஓர் சொந்த அனுபவம் CCh 527

தங்கள் பிள்ளைகளை நடத்துவதில் சில அன்னைமார் ஒன்று போலிருப்பதில்லை. சில வேலைகளில் பிள்ளைகளுக்குத் தீங்கு உண்டாகும் வகையில் அவர்களுக்குச் செல்வம் கொடுக்கிறார்கள். ஆயினும் குழந்தை இருதயத்தை மிகவும் மகிழ்வடையச் செய்யும் பாவமற்ற ஆசை எதையாவது திருப்தி செய்ய மறுக்கின்றனர். இதிலே அவர்கள் கிறிஸ்துவைப் போலக் காணப்படவில்லை. அவர் பிள்ளைகளை நேசித்தார். அவர்கள் உணர்வுகளை அறிந்துகொண்டு, அவர்களுடைய சந்தோஷங்களிலும், அவர்கள் பரீட்சைகளிலும் அனுதாபம் காட்டினார். MH 389, 390. CCh 527.1

பிள்ளைகள் இந்தச் சங்கத்திற்குப் போவோமென்றோ, அந்தக் களியாட்டு கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமென்றோ உங்களிடத்திலே கெஞ்சி கேட்கும்போது அவர்களிடம் பின்வருமாறு கூறுங்கள். பிள்ளைகளே, நான் உங்களை அனுப்பவே முடியாது. இங்கே உட்காருங்கள். காரனம் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் நித்தியத்திற்காகவும் தெய்வத்திற்காகவும் என்னுடைய அலுவலைச் செய்து வருகிறேன். கடவுள் உங்களை எனக்குத் தந்து, என்னை உங்களுக்குப் பொறுப்பாக ஏற்படுத்தியிருக்கிறார். தெய்வத்தின் பிரதிநிதியாக நான் உங்களிடம் இருக்கிறேன். எனவே கடவுளுடைய வருகையின் நாளில் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவளாக என்னைப் பாவித்து, நான் உங்களைக் கண்காணிக்க வேண்டும். உங்களுடைய அன்னையின் பெயர் பரலோக புஸ்தகங்களில் சத்துருவை உள்ளே வரவிட்டு, தெய்வம் பிரவேசிக்க வேண்டிய இடத்தில் அவனை உட்கார வைத்தவளாகவும், பிள்ளைகளுக்குத் தன் கடமையைச் செய்ய தவறிப் போன நபரென்றும் பதியப்படுவது உங்களுக்குப் பிரியமா? பிள்ளைகளே, எது சரியான பாதையென்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்லிய பிறகு நீங்கள் அன்னையை விட்டு தூரமாகப் போய், உங்கள் பொல்லாங்கான வழியில் நடந்தால், உங்கள் அன்னை மீது குற்றம் சுமராது. நீங்களோ உங்கள் சொந்த பாவங்களினிமித்தம் தண்டனை அடைவீர்கள். CCh 528.1

இவ்வாறு நான் என்னுடைய பிள்ளைகளிடத்திலே பேசினேன். நான் பேசிமுடிப்பதற்குள்ளாக, அவர்கள் அழுது கொண்டு, நீங்கள் எங்களுக்காக ஜெபிக்க மாட்டீர்களா? என்று கேட்பார்கள். அவர்களுக்காக ஜெபிக்க நான் ஒரு பொழுதும் மறுத்ததில்லை. அவர்கள் பக்கத்திலே முழங்காலிட்டு, அவர்களோடு ஜெபித்தேன். அப்புறமாக நான் எழுந்து போய், தேவனிடத்திலே போராடி, சத்துருவின் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படும்படி இரவு முழுவதும், சூரியன் வானத்தில் உயரே ஏறிப் பிரகாசிக்கும் வரைக்கும் ஜெபித்தேன். அப்பொழுது வெற்றி என்னுடையதாயிற்று. ஒரு இரவு முழுவதும் நான் கிரியை நடப்பிக்க வேண்டியதாயிற்று. ஆயினும் என் பிள்ளைகள் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ஆ, அம்மா, நாங்கள் போக விரும்பின பொழுது எங்களை அனுப்பாததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நாங்கள் போயிருந்தால் அது தவறாகத்தான் இருந்திருக்கும் என்று கூறுவர். பெற்றோரே, இவ்வாறு நீங்கள் சொல்லுகிறபடியே செய்கிறவர்களாகவும் கிரியை நடப்பிக்க வேண்டும். தேவராஜ்யத்திலே உங்கள் பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்க நீங்கள் விரும்பினால், இதை ஒரு அலுவலாக்கிக் கொள்ள வேண்டும். AH 528, 529. CCh 528.2

இந்தத் தேசத்திலோ, வேறெந்தத் தேசத்திலும் சரியே, பள்ளிக்கூடங்கள் பட்டணங்களுக்குத் தூரமாக இருந்தாலொழிய, பிள்ளைகள் சரியான கல்வியைப் பெற முடியாது. பட்டணங்களிலே இருக்கிற வழக்கங்களும், பழக்கங்களும் சத்தியம் பிரவேசிப்பதற்கு இள வயதினர் மனதைத் தகுதியற்றதாக்குகின்றன. FE 312. CCh 529.1