Go to full page →

ஆரோக்கிய சீர்திருத்த பிரசாரம் CCh 569

நம்முடைய ஊழியத்திலே மதுவிலக்குச் சீர்திருத்தத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சீர்திருத்தமாகிய கடமையை நிறைவேற்ற வேண்டியதாகிற பொழுது, அந்த அலுவல் விசுவாசம், கீழ்ப்படிதல், மனந்திரும்புதலுடனும் இணைக்கின்றது. இந்த ஊழியம் புதியதும் மேன்மையுமானதோர் வாழ்க்கையை நடத்துவதற்கு ஆத்துமாவை உயர்த்துகின்றது. இவ்வாறு மூன்றாம் தூதனுடைய தூதில் மெய்யான சீர்திருத்தங்கள் யாவும் அடங்கியிருகின்றன. விசேஷமாக மதுவிலக்குச் சீர்திருத்தமானது நமது காலத்திற்கும் ஆதரவிற்கும் உரியது. நம்முடைய வருஷாந்திரக் கூட்டங்களிலே இந்த அலுவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை உயிருள்ள விஷயமாக்க வேண்டும். மெய்யான இச்சையடக்கத்தின் சரியான இலட்சியங்களைக் கண்களுக்கு முன்பாக நாம் வைத்து மதுவிலக்குப் பிரதிக்ஞையில் கையெழுத்திடுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களை மிகவும் நன்றாகக் கவனித்து, கிறிஸ்துவின் சிலுவையண்டையிலே அவர்களை நடத்த வேண்டும். CCh 569.2

கால முடிவு நம்மை நெருங்கி வருகிற பொழுது ஆரோக்கிய சீர்திருத்தம். கிறிஸ்தவ மதுவிலக்கு ஆகிய இரண்டையும் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் உறுதியுடனும் அவர்கள் முன்பாக வைக்க வேண்டும். நாம் எப்பொழுதும் நமது நாவினால் மாத்திரமல்ல, கிரியையினாலும் ஜனங்களுக்குப் போதனை செய்ய விடாப்பிடியாகப் போராட வேண்டும். 6T 110, 112. CCh 570.1