Go to full page →

புசிப்பதில் ஒழுங்கு CCh 581

ஆகாரம் உண்ட பின், வயிற்றுக்கு ஐந்து மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். அடுத்த ஆகாரம் அருந்தும் வரை ஒரு சிறிய அளவு ஆகாரமும் வயிற்றுக்குள் செல்லக் கூடாது. இந்த இடை நேரத்தில் இரைப்பை தன் வேலையைச் செய்து, பின்பு அதிகப்படியான ஆகாரத்தை உட்கொள்ளும் நிலையில் இருக்கின்றது. CD 179. CCh 581.3

உண்பதில் ஒழுங்கை அக்கரையுடன் கடைபிடிக்க வேண்டும். மறுவேளை போஜனத்திற்கிடையில், மிட்டாய், கொட்டைகள், பழங்கள், அல்லது எவ்வகை உணவுகளையும் புசிக்கக் கூடாது. இடைப்பட்ட நேரங்களில் சாப்பிடுவது ஜீரணக் கருவிகளின் சுகபலத்தை அழித்து, சுகத்துக்கும் சந்தோஷத்துக்கும் கேடு உண்டாக்குகின்றது. பிள்ளைகள் சாப்பாட்டு மேசையண்டை வரும்பொழுது, சுகத்துக்கேற்ற உணவை விரும்புவதில்லை; அவர்கள் பசி, தங்களுக்குத் தீங்கை விளைவிக்கும் ஆகாரத்தின் மேல் தேட்டங் கொள்ளுகிறது. MH 384. CCh 581.4

நாம் இளைப்பாற படுக்கும் போது, சரீரத்தின் மற்ற உறுப்புக்களும் இளைப்பாறுதலில் மகிழ்ச்சியடையும்படி, இரைப்பையும் தன் வேலையை முடித்திருக்க வேண்டும். உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கங்களுள்ளவர்கள், இரவு ஆகாரங்களைப் பிந்திப் புசிப்பதினால் முக்கிய தீமை விளைகின்றது. CCh 582.1

பல சந்தர்ப்பங்களில், ஜீரண உறுப்புக்கள் நாள் முழுவதும் கடினமான வேலை செய்வதினால் உண்டாகிய சோர்வு உணவை நாடும்படி வழி நடத்துகிறதாக உணரப்படுகிறது. ஒரு வேளை ஆகாரம் அருந்திய பின், ஜீரணக் கருவிகளுக்கு இளைப்பாறுதல் அவசியம். மறுமுறை உணவு உட்கொள்ளும் முன்பாக குறைந்த பட்சம் இந்து அல்லது ஆறு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். இந்த ஒழுங்கை பரிசோதிக்கும் பெரும்பான்மையோர், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதைவிட, இருவேளைச் சாப்பாடே சிறந்ததெனக் கண்டுகொள்வார். MH 304. CCh 582.2

ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிடும் பழக்கம் பொதுவாக சுகத்துக்கு நல்லதென்று காணப்படுகிறது. ஆயினும் சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு மூன்றாவது வேளை ஆகாரம் அவசியப்படும். அப்படி இருந்தாலும், எளிதில் ஜீரணிக்கத்தக்க இலகுவான ஆகாரத்தை உண்ண வேண்டும். MH 321. CCh 582.3

மாணவர் சரீர மனோ உழைப்பில் ஈடுபடுபோது, மூன்று வேளை ஆகாரம் அருந்துவதில் பாதகமில்லை. காய்கறி இல்லாமல், ஆயத்தம் செய்யப்பட்ட சத்துள்ள உணவு, ரொட்டி பழங்கள் மூன்றாவது வேளை உணவாக மாணவர் அருந்தலாம். CD 178. CCh 582.4

உணவை அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ புசிக்கக்கூடாது. ஆகாரம் குளிராயிருந்தால், அது ஜீரணமாகு முன் அதைக் சூடாக்க இரைப்பையிலுள்ள ஜீவசக்தி இழுக்கப்படுகின்றது. அதே காரணத்தால் குளிர்ந்த பானம் சுகத்துக்கு ஏற்றதல்ல; சதா சூடான பானங்கள் உபயோகிப்பது பலவீனப்படுத்துகிறது. ஆகாரங்களுடன் எவ்வளவுக்கதிகமாகத் தண்ணீர் அருந்தப்படுகிறதோ அவ்வளவுக்கதிகமாக உணவு ஜீரணமாகக் கடினப்படுகிறது. ஜீரணம் ஆரம்பிக்குமுன் தண்ணீர் உறிஞ்சப்படவேண்டும், உப்பை அதிகமாக உபயோகிக்க வேண்டாம். ஊறுகாய்கள் வாசனை ஏற்றப்பட்ட ஊணவுகளை அகற்றி பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்யும் போது, சாப்பாட்டு வேளையில் அதிகத் தண்ணீர் குடிக்கத் தேடும் கிளர்ச்சி அற்றுப்போகும். ஆகாரம் நன்றாக மெல்லப்பட்டு மெதுவாக புசிக்கப்பட வேண்டும். உமிழ் நீர் ஆகாரத்துடன் சரியானபடி கலந்து, ஜீரண நீர்கள் கிரியை செய்வதற்கு இது அத்தியாவசியமானது. MH 305, 306. CCh 583.1