Go to full page →

போஜனபிரியத்தையும் இச்சையையும் அடக்குதல் CCh 586

போஜன அவா மனிதனுக்கு வரக்கூடிய பெரிய சோதனைகளில் ஒன்று. சரீரத்துக்கும் மனதுக்குமிடையில் ஆச்சரியமும் இரகசியமுமான ஒரு தொடர்பு இருக்கின்றது. அது ஒன்றின்மேல் ஒன்று கிரியை செய்கிறது. ஜீவ இயந்தியத் தின் ஒவ்வொரு பாகமும் இசைவாக வேலை செய்ய சரீரத்தை பலப்படுத்தி சுக நிலையில் வைப்பதே நமது வாழ்க்கையின் முதல் ஆராய்ச்சியாயிருக்க வேண்டும். சரீரத்தை அலட்சியம் செய்வது மனதை அசட்டை செய்வதாகும். தேவனுடைய பிள்ளைகள் விருத்தி செய்யப்படாத மனதையும் நோய்ப்பட்ட சரீரங்களையுமுடையவர்களாயிருப்பது அவருக்கு மகிமையைகொண்டு வராது. சுகத்தைக் கெடுக்கும் அளவில் சுவையைத் தேடுவது புலன்களைத் துர்ப்பிரயோகம் செய்வதாகும். புசிப்பதிலோ அல்லது குடிப்பதிலோ, இச்சையடக்கமின்றி இருப்பவர்கள், தங்கள் சரீர பெலத்தை வீணாக்கி, சன்மார்க்க சக்தியைப் பலவீனப்படுத்துகின்றனர். சரீரப் பிரமாணத்தை மீறுவதினால் வரும் தண்டனையை அவர்கள் உணர்வார்கள். 3T 485, 486. CCh 586.3

மாமிச இச்சையை நிறைவேற்றுவதினாலும் பெருந்திண்டியினாலும், அனேகர் மன சரீர வேலையைச் செய்யப் பெலனற்றுப் போகிறார்கள். சன்மார்க்க ஆவிக்குரிய தன்மை பலட்சியமடைகையில், மிருக சுபாவம் பெலப்படுத்தப்படுகிறது. நாம் வெள்ளைச் சிங்காசனத்தை சுற்றி நிற்கும் போது, அங்கு கூடியிருக்கும் அனேகருடைய வாழ்க்கை வரலாறு எப்படிப்பட்டதாயிருக்கும்! அப்பொழுது அவர்கள் தங்களுக்குக் கடவுள் கொடுத்த சக்திகளைத் துர்ப்பிரயோகம் செய்திருந்தால், அவருக்காக என்ன செய்திருக்கக் கூடுமென்பதை அப்பொழுது அவர்கள் கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு ஒப்புவிக்கபட்ட மன சரீர பலத்தை கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்திருப்பார்களானால், எப்படிப்பட்ட பேரறிவை அவர்கள் அடைந்திருக்கக் கூடும் என்று அப்பொழுது அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். தங்களுடைய மன வேதனையினால் மறுமுறை வாழ்வதற்கு தங்களுக்கு ஜீவன் கொடுக்கப்படும்படி வாஞ்சிப்பார்கள். 5T 135. CCh 587.1

ஒவ்வொரு மெய்க் கிறிஸ்தவனும் தன் போஜனப் பிரியத்தையும் இச்சையையும் அடக்கி ஆள்வான். அவன் போஜனப் பிரியத்துக்கு அடிமைப்படாதவனாக இருந்தாலொழிய, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதலுள்ள உத்தம ஊழியனாக இருக்க முடியாது. இச்சையுன் பசியைப் பேணுதலுமே, சத்தியம் இருதயத்தில் கிரியை செய்யாதபடி தடைசெய்கிறது. ஒருவன் போஜனப் பிரியம், இச்சை என்பவைகளால் ஆளப்படும்பொழுது, பரிசுத்த ஆவியும், சத்தியத்தின் வல்லமையும் ஒரு மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் பரிசுத்தமாக்குவது கூடாத காரியம். 3T 569, 570. CCh 587.2

இச்சையடக்கத்தையும் சுய வெறுப்பின் அவசியத்தையும் நமக்குப் போதிக்கும்படியாக, கிறிஸ்து வனாந்தரத்தில் நீண்ட கால உபவாசத்தைச் சகித்தார். இப்படிப்பட்ட வேலை போஜனப் பந்தியில் ஆரம்பமாகி, வாழ்க்கையின் சகல கட்டங்களிலும் கண்டிப்பாய்க் கடைபிடிக்கப்பட வேண்டும். இயேசு மனிதனுக்குக் கொண்டு வந்த வல்லமையினால் அவன் பெலன் கொண்டு, போஜனப் பிரியத்தையும், இச்சையையும் ஜெயிக்கவும், எல்லாவற்றிலும் வெற்றி பெறவும் முடியும். 3T 488. CCh 588.1