Go to full page →

உலகத்திற்கு முன்மாதிரி CCh 623

ஒரு ஜனமாக நாம் சீர்திருத்தம் செய்வோராகவும், உலகத்திற்கு வெளிச்சத்தை அளிக்கின்றவர்களாகவும், போஜனப் பிரியத்தை மாறுபாடாக்கிச் சோதனை செய்யும் பொருட்டு சாத்தான் பிரவேசிக்கக் கூடிய ஒவ்வொரு வழியையும் காத்து நிற்கும் உண்மையான கடவுளின் மெய்கி காவலாளர் என்றும் பெயர் பெற்று விளங்குகிறோம். சீர்திருத்தத்தின் சார்பில் நம்முடைய முன்மாதிரியும் செல்வாக்கும் வல்லமை உடையதாகவும் விளங்க வேண்டும். மனச்சாட்சியை மழுக்கி, சோதனையை வரவழைக்கும் எப்பழக்கத்தையும் விட்டு நாம் நீங்க வேண்டும். தேவ சாயலில் உருவாக்கப்பட்ட ஒருவர் மனதிலும் சாத்தான் பிரவேசிக்கும் வழியை நாம் திறந்து வைக்கக் கூடாது. 5T 360. CCh 623.1

இதைச் செய்வதற்கு ஒரே பத்திரமான வழி தேயிலை, காபி, மது, புகையிலை, அபின் ஆகியவற்றையும், போதை தரும் பிற பானங்களையும் தொடாமலும், உருசி பாராமலும், உபயோகிக்காமலுமிருப்பதே. முந்திய தலைமுறையினர் சாத்தானுடைய சோதனைகளை எதிர்த்து, சிறிய அளவில் கூட போஜன பிரியத்தில் ஈடுபடாமலிருப்பதற்கு கிருபையினால் பலமடைந்த சித்தத்தின் உறுதி தேவையாயிற்று. இக்காலத்தில் அத்தகைய உறுதியுடைய சித்தம் இரு மடங்கு தேவையாயிருக்கின்றது. தற்கால சந்ததியினரோ முற்காலத்தில் வாழ்ந்தவர்களைப் பார்க்கிலும் குறைவான சுய கட்டுப்பாடு உடையவர்ளாயிருக்கின்றனர். இத்தகைய விசையூட்டும் பானப்பிரியத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய சீர்கெட்ட போஜனப் பிரியத்தையும் இச்சையையும் பிள்ளைகளுக்கு அளிக்கின்றனர், எனவெ இச்சையடக்க மின்மையை எல்லா முறைகளிலும் எதிர்ப்பதற்கு அதிகப்படியான சன்மார்க்கத் தன்மை தேவையாயிருக்கிறது. இச்சையடக்கத்தில் உறுதியாய் நின்று, ஆபத்தான வழியில் காலை வைக்காமலிருப்பதொன்றே சுக வழியாகும். எல்லாவற்றிலும் இச்சையடக்கமாயிருப்பதைக் குறித்து கிறிஸ்தவர்களின் சன்மார்க்க உணர்வுகள் புத்துயிரடையுமாகில், அவர்கள் தங்கள் முன்மாதிரியினாலே தங்கள் சாப்பாட்டு மேஜைகளில் இச்சையடக்கத்தைப் பயில்வதை ஆரம்பித்து, சுயகட்டுப்பாடுக் குறைவினால் பலவீனமுள்ளவர்களாயும் போஜனப் பிரியத்தினால் உண்டாகும் இச்சைகளை எதிர்ப்பதற்கு நிசக்தர்களாகவும் இருப்போருக்கு உதவக்கூடும். நாம் இவ்வாழ்வில் பழகும் பழக்கங்கள் நித்தியமான நன்மையை நாம் அடைவதைப் பாதிக்கிறதென்றும், இச்சையடக்கமுள்ள பழக்கங்களைப் பயில்வதினாலே நம்முடைய நித்திய வாழ்வின் கதியை நிர்ணயிக்கிறோமென்றும் அறிந்து கொள்வோமேயாகில், புசிப்பதிலும் குடிப்பதிலும் மிதமாகவெடெ இருப்போம். இச்சையடக்க மின்மை, குற்றம் புரிதல், சாவு ஆகியவற்றினால் விளையும் சீர்கேட்டிலிருந்து அனேக ஆத்துமாக்களைத் தப்புவிப்போம். ஆரோக்கியமும், CCh 623.2

போஷணையளிப்பதுமாகிய ஆகாரத்தை சமைத்து மேஜைக்குக் கொண்டுவருவதின் மூலம் நம்முடைய சகோதரிகள் இவ்விஷயத்தில் எவ்வளவோ உதவியாயிருக்கலாம். தங்கள் பிள்ளைகளின் போஜனப் பிரியத்தையும், உருசியுணர்வையும் பயிற்சிப்பதிலே அவர்கள் தங்கள் அருமையான நேரத்தை செலவிட்டு, எல்லாவற்றிலும் இச்சையடக்கமாயிருக்கவும், பிறர் பொருட்டு சுய வெறுப்பும், ஈகைக் குணமும் உடையவர்களாயிருக்கவும், கற்றுக் கொடுக்கலாம். 3T 488, 489. CCh 625.1