Go to full page →

சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய நிலை CCh 652

நாம் போகுமாறு அழைக்கப்படுகிற எந்நாட்டிலும் சன்மார்க்க வாழ்க்கைத் தரத்தை நாம் உயர்வு பெற செய்வதானால், முதலாவதாக அவர்களுடைய சரீர பழக்கங்களைச் சரியானவையாக மாற்றி அமைக்க வேண்டும். CH 505. CCh 652.1

துன்பத்திலிருந்து விடுதலையளிப்பதாகிய சுவிசேஷத்தை வைத்திய மிஷனெரி ஊழியம் மனித வர்க்கத்திடமாகக் கொண்டு வருகிறது. சுவிசேஷ ஊழியத்திற்கு முன்னான ஊழியம் இதுவே. கிறிஸ்துவின் உருக்க இரக்கத்தை வெளிப்படுத்துவதாகிய நடைமுறை சுவிசேஷம் இதுவே. இந்த ஊழியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும், அனேக புதிய இடங்களிலே உடனடியாக வேலை ஆரம்பிக்கப் படவும் தெய்வம் வகை செய்வாராக. அப்பொழுது தான் கர்த்தருடைய ஒழுங்கின்படியே ஊழியம் நடைபெறும். நோயாளிகள் குணமடைவார்கள். துன்பமடைகின்ற ஏழை மனித வர்க்கம் ஆசிர்வதிக்கப்படும். MM 235. CCh 652.2

அதிகமான துவேஷத்தையும், பொய்யான வைராக்கியத்தையும், பக்தியென்று பொய்யாக பெயர் பெற்றிருப்பதையும் பெருமளவில் நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆயினும் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நீங்கள் எண்ணுவதைப் பார்க்கிலும் அதிகமான இருதயங்களிலே சத்தியமான விதை விதைக்கப்படுவதற்கு தெய்வம் வழி திறந்திருக்கக் காண்பீர்கள். தெய்வீக தூது அவர்களுக்கு அறிவிக்கப்படும் பொழுது, சந்தோஷத்துடனே அவர்கள் வரவேற்பார்கள். CH 502. CCh 652.3

வைத்திய சுவிசேஷத்தைக் குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்ட போது, உடலுடனே கரம் பிணைக்கப்பட்டிருப்பது போலவே இது ஊழியத்துடன் பிணைக்கப்பட்டிருப் பதாக எனக்குக் காட்டப்பட்டது. நோயுற்றோர்களுக்கும், சுகமுள்ளவர்களுக்கும் சத்தியத்தை அறிவிப்பதற்காக அமைந்ததே சுவிசேஷ ஊழிய ஸ்தாபனம். இந்த ஸ்தாபனம் சரீரமாகும். வைத்திய மிஷனெரி ஊழியம் அதின் கரம். கிறிஸ்துவானவர் சரீரத்திற்குத் தலையாயிருக்கிறார். இந்த ஊழியம் இவ்வாறு சரீரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதாக எனக்குக் காண்பிக்கப்பட்டது. CCh 652.4

உங்களுக்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, வைத்திய சுவிசேஷ ஊழியம் செய்ய ஆரம்பியுங்கள். வேதபாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு இவ்வாறு வழி திறக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். தங்களுடைய நோயாளிகளை எவ்வாறு குணப்படுத்துவது என்று அறிய வேண்டியிருப்பவர்களுடன் பரம பிதா உங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்துவார். நோய்க்குச் சிகிச்சை அளிக்க நீங்கள் பெற்றுள்ள அறிவைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு துன்பமடைந்தவர்களுடைய வேதனை நீங்கும். பசியுள்ள ஆத்துமாக்களை ஜீவ அப்பத்தினாலே போஷிக்க உங்களுக்குத் தருணம் அளிக்கப்படும். MM 237-239. CCh 653.1