Go to full page →

வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்த மத போதகர்களுக்கும் சபை அங்கத்தினர்களுக்கும் பிரசங்கித்தல் CCh 660

வேறு சபைகளில் பேசுவதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கலாம். இவற்றைப் பயன்படுத்தும் பொழுது “புறாக்களைப் போல கபடமற்றவர்களாகவும், சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாயும் இருங்கள்” என்று இயேசு பெருமான் கூறியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சத்துருவின் வன்மத்தை எழுப்பும் விதமாக அவர்கள் நிலையைத் தப்பென்று நிரூபித்துக் காட்டிப் பிரசங்கிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியம் பிரவேசிக்காதபடி வாசல்களைப் பூட்டிப் போடுவீர்கள். திட்டமும் தெளிவுமாக யாவையும் கூற வேண்டியதே. ஆயினும் எதிர்ப்பை எழுப்பாதபடிக்கு விழிப்பாயிருங்கள். ஆத்துமாக்கள் அனேகர் இரட்சிக்கப்படவிருக்கிறார்கள். எதையும் கடுமை தோன்றக் கூறிவிடாமல் உங்களையே கட்டுப்படுத்துங்கள். வார்த்தையிலும், செய்கையிலும் இரட்சிப்படையத் தக்கதான ஞானத்தை உபயோகித்து, உங்களுடனே தொடர்பு கொள்ளுகின்ற அனைவரிடத்திலும் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக நடந்துகொள்ளுங்கள். சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையையும் மனுஷர் மேல் பிரியத்தையும் நீங்கள் உடையவர்களாயிருப்பதை அனைவரும் காண்பார்களாக. கிறிஸ்துவின் ஆவியினால் ஏவப்பட்டு, நாம் அவருடைய ஊழியத்திலே பிரவேசித்தால், அதிசயமான பலன்கள் உண்டாகும். நீதியாகவும், இரக்கத்துடனும் அன்புடனும் நாம் வேலை செய்து, வேலையை முன்னேற்ற மடையச் செய்தால், நமக்குத் தேவையாகும் பொழுது ஒத்தாசை அனுப்பப் பெறும். சத்தியம் வெற்றியடைந்து வெற்றியுடையதாகவே விளங்கும். Ev. 563., 564. CCh 660.1

பிற சபைகளில் போதகர்களாக இருப்பவர் பொருட்டு நாம் நடப்பிக்க வேண்டிய ஊழியம் ஒன்றுண்டு. அவர்கள் இரட்சிப்படையுமாறு தெய்வம் விரும்புகின்றார். அவர்கள் நம்மைப் போலவே விசுவாசத்தின் மூலமாயும், கீழ்ப்படிதலினாலுமே அழியாமையை அடைதல் கூடும். அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளுமாறு வாஞ்சையுடனே நாம் உழைக்க வேண்டும். தம்முடைய விசேஷித்த ஊழியத்திலே அவர்களும் பங்குகொள்ளுமாறு தெய்வம் விரும்புகின்றார். தம்முடைய வீட்டாருக்கு ஏற்ற வேளையிலே போஜனம் அளிப்பவர்களுடனே அவர்களும் ஒன்றாயிருக்க விரும்புகின்றார். அவர்கள் ஏன் இவ்வூழியத்தில் ஈடுபடக் கூடாது? நம்முடைய போதகர்கள் பிற ஸ்தாபனங்களின் போதகர்களுக்குச் சமீபமாக வரவேண்டும். கிறிஸ்துவானவர் பரிந்து CCh 661.1

பேசிக்கொண்டிருக்கிற இந்த மனிதருக்காகவும் அவர்களுடனும் ஜெபியுங்கள். அவர்களுடைய பொறுப்பு பக்தி வினய முடையது. கிறிஸ்துவானவரின் தூதுவராக நாம் மந்தையின் மேய்ப்பர்களாயிருக்கின்ற இவர்கள் பேரில் ஆழ்ந்த வாஞ்சையுடைய சிந்தையை காண்பிக்க வேண்டும். 6T 77, 78. CCh 662.1

போதகர்களுக்காக ஊழியஞ் செய்வதை நமது போதகர்கள் விசேஷித்த ஊழியமாகக் கொள்ள வேண்டும். அவர்களோடு தர்க்கம் பண்ண வேண்டுவதில்லை. என்றபோதிலும் தங்கள் கையில் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, திருவசனத்தை ஆராய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இவ்வாறு செய்தால், அவற்றைப் பிரசங்கிக்கும் அனேக போதகர்கள் நிகழ்கால சத்தியத்தைப் போதிக்கிறவர்களாவர். Ev 562. CCh 662.2