Go to full page →

அரசியல் பர பரப்பு CCh 667

நமது பள்ளிக் கூடங்களிலும், சபைகளிலும் வேதபோதனை செய்வோர் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவரது நடவடிக்கைகளைப் பற்றிய தமது குரோத மனப்பான்மையை வெளிப்படுத்தக் கூடாது. ஏனெனில், அப்படிச் செய்வதின் மூலம் பிறர் மனதைக் கிளரி, ஒவ்வொருவரும் தனது விருப்பமான கொள்கையை அறிவிக்க வழி நடத்தும். நிகழ்கால சத்தியத்தை விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே, சிலர் இவ்வித கிளர்ச்சியடைந்து அரசியல் விஷயங்களில் தங்கள் விருப்பத்தை வெளியிட்டு, சபையில் பிரிவினைகளை உண்டாக்கிவிடலாம். CCh 667.2

அரசியல் கேள்விகளை தம்முடைய மக்கள் புதைத்துவிட கர்த்த்ர் விரும்புகிறார். இவ் விஷயங்களில் பேசாதிருப்பது நன்று. தேவனுடைய வார்த்தையில் தெளிவாக வெளிப்ப்டுத்தப்பட்டிருக்கும், சுத்த சுவிசேஷ இலட்சியங்களின் பேரில் ஒருமைப்பாடடையும்படி கிறிஸ்து தமது பின்னடியார்களிடம் கேட்கிறார். CCh 667.3

அரசியல் கட்சிக்கு நாம் நமது வாக்குறுதிகளை அளிக்க முடியாது; ஏனெனில் நாம் எத்தகையோருக்கு ஓட்டுப் போடுகிறோம் எனத் தெரியாது. அரசியல் திட்டங்களில் நாம் பத்திரமாக பங்கு கொள்ளமுடியாது. கிறிஸ்தவர்கள் மெய்யான திராட்சைச் செடியின் கிளைகள். கொடிக்கேற்ற கனியைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒற்றுமையுடன் கிறிஸ்தவ ஐக்கியத்தில் தொண்டு புரிவார்கள். அவர்கள் அரசியல் கட்சியின் சின்னங்களை தரிக்காது கிறிஸ்துவின் அடையாளங்களைத் தரித்துக்கொள்வார்கள். CCh 668.1

அப்படியாயின் நாம் என்ன செய்வது? அரசியல் கேள்விகளை, பிரச்சினைகளை தனியே விட்டு விடுவோம். CCh 668.2

நாம் பண்படுத்துவதற்கு ஒரு பெரிய திராட்சைத் தோட்டம் உண்டு. ஆனால் அவிசுவாசிகளிடம் வேலை செய்வதற்காக கிறிஸ்தவர்கள் உலக மக்களைப் போல காணப்படக்கூடாது. அவர் நேரத்தை அரசியல் பேச்சிலோ. அலுவலிலோ செலவிடக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் சத்துரு உள்ளே வந்து வித்தியாசத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த சந்தர்ப்ப மளிக்கிறார்கள். CCh 668.3

தேவனுடைய பிள்ளைகள் அரசியலிலிருந்து விலகி நிற்க வேண்டும். அரசியல் போராட்டங்களிலே பங்கு கொள்ள வேண்டாம். உலகத்தினின்று பிரிந்தும், சபைக்குள் அல்லது பாடசாலைக்குள் போராட்டம் ஒழுங்கின்மை உட்பிரவேசிக்க இடமளிக்காதேயுங்கள். சுயநலக்காரரின் உள்ளத்தில் இருக்கும் நச்சுப் பொருள் பிரிவினையாகும். GW 391-395. CCh 668.4