Go to full page →

அத்தியாயம் 1 CCh 66

உத்தமருக்குப் பலன் CCh 66

(என் முதல் தரிசனம்) CCh 66

நான் குடும்ப ஜெபம் செய்து கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவி என்மீது இறங்கி, என்னை இருண்ட உலகினின்று மேலே எடுத்துச் செல்வதாக எனக்குத் தோன்றிற்று. CCh 66.1

உலகிலுள்ள அட்வெந்து விசுவாசிகளை நான் பார்க்க முயன்றபோது அவர்களைக் காணமுடியவில்லை. அப்பொழுது, மீண்டும் பார், சற்று மேலே பார் என்று ஒரு சப்தம் உண்டாயிற்று. நான் என் கைகளை ஏறெடுத்து பார்த்தபோது, மேலே இடுக்கமான குறுகிய நேர்பாதை ஒன்றைக் கண்டேன். இப்பாதையின் முடிவிலிருந்த நகரை நோக்கிஅ அட்வெந்து ஜனம் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். பாதையின் துவக்கத்தில் அவர்களுக்குப் பின்னாக ஒரு மாபெரும் ஜோதி பிரகாசித்துக்கொண்டிருக்கக் கண்டேன். இது நடு ராத்திரியின் சத்தம் என்று தூதன் சொன்னான். அவர்கள் பாதம் இடறாத படிக்கு அவ்வொளி வழி நெடுகிலும் பிரகாசித்தது. அவர்களை நகருக்கு வழி நடத்திய இயேசுவை நோக்கிக்கொண்டிருந்ததால், அவர்கள் வழி தவறமாட்டார்கள். சீக்கிரமாய் சிலர் களைத்து, இதற்கு முன்னதாகவே நாம் நகரத்தில் சேர்ந்திருக்கவேண்டுமே, நகரம் வெகு தொலைவிலிருக்கிறதே என்றும் கூறினார்கள். இயேசு தம் பிரகாசமான வலக் கரத்தை உயர்த்தியபோது, அக்கரத்திலிருந்து வந்த ஒளி அவர்களை ஊக்கி அவர்களைசு சுற்றிலும் பிரகாசிக்க அல்லேலூயா என அவர்கள் ஆர்ப்பரித்தனர். மற்றவர்கள் தமக்குப் பின்னால் இருந்து வந்த ஒளியை மறுத்து, தங்களை இதுவரை வழிநடத்தியவர் கடவுளல்ல என புறக் கணித்தனர். அவ்வொளி அவர்களை விட்டு மறைந்து, அவர்கள் தடுமாறும்படி அவர்களை இருளில் விட்டுவிட்டது. அவர்கள் இலக்கையும் இயேசுவையும் காணக்கூடாமல் வழி தவறி கீழிருந்த இருண்ட பொல்லாத உலகில் விழுந்தனர். சடுதியில் பெரு வெள்ள இரைச்சல் போன்ற தேவ சத்தத்தைக் கேட்டோம். அது இயேசு வரும் நாளையும் நாழிகையையும் அறிவித்தது. உயிரோடிருந்த லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் அச்சத்தை அறிந்து உணர்ந்து கொண்டார்கள். துன்மார்க்கரோ அதை இடி முழக்கமும் நில நடுக்கமுமென எண்ணினர். தேவன் அவ்வேளையை அறிவித்தபோது, எங்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றினார். மோசே மலையிலிருந்து இறங்கியபோது முகம் மகிமையினால் பிரகாசித்ததுபோல, எங்கள் முகங்களும் பிரகாசித்தன. CCh 66.2

லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும் முத்தரிக்கப்பட்டு பூரணமாக ஒன்று பட்டிருந்தனர். அவர்கள் நெற்றிகளில் தேவன், புதிய எருசலேம் என்று எழுதப்பட்டும் கிறிஸ்துவின் புது நாமம் எழுதப்பட்ட மகிமையான நட்சத்திரமும் காணப்பட்டன எங்களுடைய பரிசுத்த சந்தோஷ வாழ்க்கையைக் கண்டு துன்மார்க்கர் மிகுந்த மூர்க்க மடைந்து எங்கள் மேல் கைபோட்டு, சிறைச்சாலைக்கு இழுத்துச்செல்ல பாய்ந்து வந்தனர். கர்த்தருடைய நாமத்தினாலே எம் கைகளை நீட்டினபோது, அவர்கள் பலனற்று தரையில் விழுந்தனர். சாத்தானின் கூட்டம் தேவன் எங்களை நேசித்தாரென்பதை அறிந்து பரிசுத்த வான்களின் கால்களைக் கழுவு, பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்தும் எங்கள் பாதங்களில் விழுந்து எங்களை வணங்கினர். CCh 67.1

சீக்கிரத்தில் கீழ் திசையில் தோன்றிய கையளவான கார் மேகத்தைக் கண்டோம். இதுவே மனுஷகுமாரனுடைய அடையாளமென அறிந்துகொண்டோம், பக்திவினமயமான அமைதியுடனே அம்மேகம் எங்களைக்கிட்டி வரவர மாபெரும் வெண் மேகமாக மகிமையின் மேல் மகிமையும் பிரகாசமும் அடைந்தது. அதன் அடிப் பாகம் அக்கினி மயமாகத்தோன்றிற்று. மேக மீது வாளவில் இருந்தது. அதைச் சுற்றி பதினாயிரமான தூதர்கள் நின்று, மிக இனிமையான கீதம் பாடினர். அம்மேக மீது மனுஷகுமாரன் வீற்றிருந்தார். அவரது வெண்மையும் சுருண்டதுமான தலைமுடி அவர் தோள் மீது கிரந்தது. அவர் சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. அவர் பாதங்கள் அக்கினி மயமாய்த் தோன்றின; அவரது வலக் கரத்தில் கருக்கமான அரிவாளும் இடக்கரத்தில் வெள்ளி எக்காளமுமிருந்தன. அவர் கண்கள் அக்கினி ஜுவாலை போன்றிருந்தது மக்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மை வாய்ந்திருந்தன. அனைவர் முகங்களும் வெளுத்தன, கடவுளால் புறக்கணித்தவர்களுடைய முகங்கள் கறுத்தன. CCh 67.2

பின்பு நாங்கள் அனைவரும் “யார் நிலை நிற்கக்கூடும்” “என் வஸ்திரம் கறையற்றிருக்கின்றதா?” என்று கதறினோம், அப்பொழுது தூதர்கள் பாடுவதை நிறுத்தி விட்டனர். சற்றுநேரம் பக்தி வினயமான அமைதி நிலவியது. அப்பொழுது இயேசு: தூய உள்ளமும் பரிசுத்த கைகளும் உள்ளவர்கள் நிற்கலாம்; எனது கிருபை உங்களுக்குப் போதும் என்றார். அதைக் கேட்ட எங்கள் முகங்கள் பிரகாசித்து, இருதயங்கள் பூரித்தன. அப்பொழுது தூதர்கள் மீண்டும் உயர்ந்த தொனியில் கீதம் பாடினர். அச்சமயம் மேகம் பூமியை யடுத்து நெருங்கிவிட்டது. CCh 68.1

அக்கினி மயமான மேக மீது இயேசு இறங்கியபோது அவரது வெள்ளி எக்காளம் தொனித்தது, மரணமடைந்த பரிசுத்தவான்களுடைய கல்லறைகளை அவர் நோக்கிப் பார்த்து: பூமியின் தூளில் நித்திரை செய்கிறவர்களே எழுந்திருங்கள், எழுந்திருங்கள், எழுந்திருங்கள் என்று கூறினார். அப்பொழுது மாபெரும் பூமியதிர்ச்சி உண்டாயிற்று. கல்லறைகள் திறந்தன: மரித்தோர் அழியாமையை அணிந்தவர்களாஅக எழுந்திருந்தனர். லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும் மரணத்தினால் பிரிக்கப்பட்ட தம் நண்பர்களை கண்டவுடன் “அல்லேலூயா” என ஆர்ப்பரித்தனர். அக்கணமே நாங்கள் மறுரூபமடைந்து, அவர்களோடே எடுத்துக்கொள்ளப்பட்டோம். நாங்கள் அனைவரும் மேகத்துக்குட்பட்டுக் கண்ணாடிக் கடல் நோக்கி ஏழு நாட்களாக பிரயாணஞ் சென்றோம். அப்பொழுது இயேசு கிரீடங்களைக் கொண்டுவந்து எங்கள் சிரசுகளில் சூட்டினார். பொற் சுரமண்டலங்களையும் வெற்றிச்சின்னமான குருத்தோலைகளையும் எங்களுக்குக் கொடுத்தார். கண்ணாடிக் கடலருகே லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும் சமசதுரமாய் அணி அணியாக நின்றனர். சிலருக்கு மிகப் பிரகாசமான கிரீடங்களும் சிலருக்குப் பிரகாசம் குறைந்த கிரீடங்களும் இருந்தன. சில கிரீடங்களில் குறைவாகவு மிருந்தன. என்கிலும், யாவரும் மகிமையுள்ள வெண்மையான நிலையங்கி தரித்திருந்தனர். கண்ணாடிக் கடலைக் கடந்து நகரவாசல்களை நெருங்கியபோது, எங்களைத் தூதர்கள் புடை சூழ்ந்திருந்தனர். இயேசு தமது வல்லமையான மகிமையின் கரத்தினால் முத்து வாசலைத் திறந்துவைத்து எங்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அங்கிகளை என் இரத்தத்தில் தோய்த்து வெளுத்து, என் சத்தியத்திற்காக உறுதியாக நின்றீர்கள். நகரத்திற்குள் பிரவேசியுங்கள் என்றார். நாங்கள் யாவரும் உட்பிரவேசித்த போது, பிரவேசிக்கப் பூரண உரிமை பெற்றவர்களாக உணர்ந்தோம். இங்கு ஜீவ விருட்சத்தையும், தேவசிம்மாசனத்தையும் கண்டேன். சிம்மாசனத்திலிருந்து பளிங்கு போன்ற நதி புறப்பட்டு வந்தது. நதியின் இருகரையிலும் ஜீவ விருட்சம் இருந்தது. நதியின் ஒரு கரையில் ஜீவ விருட்சத்தின் ஒரு அடிமரமும் மறுகரையில் மற்ற அடிமரமும் இருந்தன. அவை பொன் மயக்காட்சி அளித்தன, இரு மரங்களைக் கண்டதாக நான் முதலாவது எண்ணினேன். மறுபடியும் கூர்ந்து கவனித்த போது, அவை இரண்டும் நதிக்கு மேல் ஒன்றாக இருப்பதைக் கண்டேன். ஆகவே, நதியின் இரு கரையிலும் ஜீவ விருட்ச மிருந்தது. நாங்கள் இருந்த இடம் வரைக்கும் அதன் கிளைகள் தாழ்ந்து பணிந்து தொங்கின. அதன் கனிகள் மகிமையாயிருந்தன. அவைகள் வெள்ளி கலந்த பசும் பொன்போல காணப்பட்டன. CCh 68.2

நாங்கள் மரத்தடியில் அமர்ந்து அதன் மாட்சிமைகளைக் கவனித்தோம். அப்பொழுது ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்தவர்களும் இரட்சிப்புக்குப் பங்காளிகளாகும்படி கடவுள் நித்திரையடைச் செய்தவர்களுமான சகோதரர்கள் ஃபிட்ச்ம் (Fitch) ஸ்டாக்மனும் (Stochman) எங்களிடத்தில் வந்து தாங்கள் மரண நித்திரையிலிருந்த காலத்தில் நாங்கள் எத்தகைய அனுபவங்களை அடைந்தோம் என வினவினர். எங்கள் மாபெரும் துன்பங்களை எண்ணமுயன்றோம். இப்பொழுது எங்களைச் சூழ்ந்துள்ள மகிமைக்கு அவைகள் ஒன்றுமில்லாமல் தோன்றியபடியால், நாங்கள்: அல்லேலூயா, பரலோகம் இலவசம் என முழங்கி பரலோக மண்டபங்கள் அதிரத்தக்கதாக எங்கள் சுரமண்டலங்களை வாசித்தோம். CCh 70.1

இயேசுவைத் தலைவராகக் கொண்டு நாங்கள் நகரத்திலிருந்து இறங்கி ஓர் பர்வதத்தின் மேல் நின்றோம். அம்மலை இரண்டாகப் பிளந்து பெரும் சமவெளி தோன்றிற்று. அங்கிருந்து பக்கத்திற்கு மூன்று வாசல்களாகப் பன்னிரு வாசல்களையும், பன்னிரு அஸ்திபாரங்களையுமுடைய பெரும் நகரத்தை நோக்கி பார்த்தோம். மாபெரும் நகரம் தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கிவருகிறது, வருகிறது என்றோம். நாங்கள் நின்ற இடத்தில் அது இறங்கி தங்கிற்று. பார்க்க மகிமை நிறைந்த முத்துக்களால் பதிக்கப்பட்ட நான்கு தூண்களுடைய வெள்ளிமயமான வீடுகளைக் கண்டோம். இவைகள் பரிசுத்தவான்களின் வாசஸ்தலங்கள், ஒவ்வொன்றிலும் ஒரு தங்க அலமாரி இருந்தது. பரிசுத்தவான்கள் அநேகர் அவ்வீடுகளுக்குட் புகுந்து ஜொலிக்கும் தங்கள் கிரீடங்களை அந்த அலமாரிகளில் வைத்துவிட்டு, அருகேயுள்ள வயல்களில் ஏதோ ஒரு வேலையில் ஈடுப்பட்டனர். இப்பூமியில் நாம் பாடும் பிரயாசத்தைப் போன்றதல்ல, இல்லவே இல்லை. அவர்கள் சிரசுகளைச் சுற்றி ஓர் ஒளி பிரகாசித்தது. அவர்கள் இடைவிடாமல் கடவுளைத் துதித்துப் பாடினார்கள். CCh 70.2

இன்னொரு வயல் வெளியில் பற்பல விதமான பூக்கள் காணப்பட்டன. நான் அவைகளைக் கொய்தபோது இவை ஒருபோதும் வாடா என உரைத்துக் கூறினேன். அடுத்தபடியாக, ஓங்கி வளர்ந்து கண்ணைக் கவரும் மகிமையான புற்களைக் கண்டேன். அவை மனோகரமாக இயேசு ராஜாவின் மகிமைக்காக ஆடி அசைந்தபொழுது வெள்ளியும், பொன்னும் கலந்த இரமணியமான தோற்றம் அளித்து, வாடாத பச்சை நிறமாயிருந்தன. சிங்கமும், சிவிங்கியும், ஆட்டுக்குட்டியும், ஓநாயும் பூரண அந்நியோந் நியமாயிருந்த வேறோரு வயல் வெளியைக் கண்டோம். அவைகள் மத்தியில் நாங்கள் நடந்தபோது அவைகள் பயமின்றி எங்களைப் பின் தொடர்ந்தன. பின்பு நாங்கள் ஒரு காட்டுக்குள் நுழைந்தோம். அது இங்கிருக்கும் இருண்ட காடுகள் போன்றதல்ல, இல்லவே, இல்லை. எங்கும் மகிமை பொருந்தி ஒளியுடன் திகழ்ந்தது, அம் மரக்கிளைகள் மென்மையுடன் இங்குமங்கும் அசைவாடின. நாங்கள் வனாந்தரத்தில் சுகபத்திரமாய்த் தங்கி காடுகளில் இளைப்பாறுவோம் என்று உரத்துக் கூறினோம். வனத்தின் வழியாக சீயோன் மலை நோக்கிச் சென்றோம். நாங்கள் அப்படிச் செல்லுகையில் எங்களைப்போல் அந்த இடத்தின் மகிமைகளைக் கண்டு களித்த வேறொரு கூட்டத்தினரைச் சந்தித்தோம். அவர்களது வஸ்திர தொங்கல் சிவப்பாயிருந்தது. அவர்கள் கிரீடங்கள் மிகப் பிரகாச மாயிருந்தன. அவர்களை நாங்கள் வாழத்திய பின், இவர்கள் யாரென நான் இயேசுவைக் கேட்டேன். தமக்காக மரித்த இரத்தச் சாட்சிகள் என்றார். அவர்களோடு கூட திரளான சிறியோர் கூட்டமும் இருந்தது. அவர்கள் வஸ்திரங்களில் ஓரங்களும் சிவப்பா யிருந்தன. சீயோன் மலை எங்கள் முன்னிருந்தது. அம்மலை மீது ஒரு மகிமையான ஆலயமிருந்தது. அதைச் சூழ ஏழுமலைகளிருந்தன. அவைகள் மேல் அழகிய ரோஜா, லீலி புஷ்பங்கள் வளர்ந்திருந்தன. சிறியோர்கள் மலைச் சிகரங்களில் ஏறியும், நினைத்தால் பறந்தும் போய் வாடாத மலர்களைக் கொய்தார்கள். அவ்வாலயத்தைச் சுற்றி புன்னை, ஊசியிலை மரங்கள், தேவதாரு, தைலமரங்கள், மிருதுச்செடிகள், மாதுளை முதலிய மரங்கள் நின்று அவ்வாலயத்தை அழகுபடுத்தின. அத்திமரம் தன் காலக் கனிகளினால் நிறைந்து, பணிந்து குனிந்து நின்றது. இவைகளெல்லாம் மகிமையின்மேல் மகிமை அடையச் செய்தன. அந்த அழகிய ஆலயத்திற்குட் பிரவேசிக்கப்போனபொழுது இயேசு தம் அன்புக் குரலால்: லட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேர் மட்டுமே பிரவேசிக்கலா மென்று கூறினார். உடனே நாங்கள் அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம். CCh 71.1

இவ்வாலயம் கண்ணாடிபோன்ற முத்துக்களால் அலங்கர்க்கப்பட்ட மகிமையுள்ள பொன் மயமான ஏழு தூண்களால் தாங்கப்பட்டது. அங்கு நான் கண்ட அதிசயக் காட்சிகளை என்னால் விவரிக்க முடியாது. ஆ! நான்கானானின் பாஷையை அறிந்திருந்தால் எத்தனை நலமாயிருக்கும்! அப்பொழுது நான் அந்த மேலான நாட்டைக் குறித்து சற்று விவரிக்கக் கூடும். லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களின் நாமங்கள் பொன்னால் பொறிக்கப்பட்ட கற்பலமைகளைக் கண்டேன். அவ்வாலயத்தின் மகிமையை பார்த்த பின்பு நாங்கள் வெளியே வந்தோம்; இயேசு நகரத்திர்குள் பிரவேசித்தார். மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த என் ஜனங்களே, நீங்கள் என் சித்தம் நிறைவேற்றி எனக்காக துன்பங்களைச் சகித்தீர்கள்; என்னோடே போஜனம் பண்ணுங்கள்; நான் அரைக் கட்டிக்கொண்டு உங்களுக்குப் பணிவிடை செய்வேன் என்று தம் அன்புக் குரலால் மீண்டும் சொன்னார். நாங்கள் அல்லேலுயா, மகிமை! என ஆர்ப்பர்த்தவர்களாக நகரத்திற்குள் பிரவேசித்தோம். எங்கிருந்தும் நாங்கள் காணக் கூடிய அநேக மைல் நீளமான வெள்ளி மேஜை ஒன்றைக் கண்டேன். மன்னாவையும், ஜீவ விருட்சத்தின் கனியையும், வாதுமை, அத்தி, மாதுளை, திராட்சை மற்றும் பலரக கனிகளையும் அம்மேஜையின் மீது கண்டேன். அக்கனிகளைப் புசிக்க உத்தரவாகும்படி இயேசுவைக் கேட்டேன், இப்பொழுது முடியாது; இவைகளைப் புசிப்பவர்கள் பூமிக்குத் திரும்பமுடியாது; உண்மையோடிருந்தால் கொஞ்சக் காலத்தில், நீ ஜீவ விருட்சத்தின் கனியைத் தின்று, ஜீவத் தண்ணீரையும் பருகும் சிலாக்கியத்தைப் பெறுவாய் என்றார். மேலும், நீ திரும்பிப் போய், நீ கண்டவைகளையும், கேட்டவைகளையும் பிறருக்குத் தெரிவிக்கவேண்டும் என்றார். பின்பு ஒரு தூதன் இருள் நிறைந்த இவ்வுலகில் என்னை மெதுவாகக் கொண்டு விட்டான். சில சமயங்களில் நான் இவ்வுலகில் வாழ முடியாதது போன் தோன்றும், நான் தனியாக விடப்பட்டவள் போல் காணப் படுவது உண்டு; ஏனெனில் நான் மேலான நாட்டைக் கண்டவள். அப்பொழுது நான்: ஆ! எனக்குப் புறாவைப் போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன் என்பதுண்டு.-Early Writings pp. 14-20. CCh 72.1