Go to full page →

தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பதற்கான முயற்சி CCh 683

தேவன், இயற்கை இவை பற்றிய புரட்டு நியாயங்கள், ஐய வாதங்ஙள் கொண்டு உலகை நிரப்பும் கருத்துக்கள் யாவும் விழுந்துபோன சத்துருவின் ஆவியினால் உண்டானவைகள். சாத்தான் ஒரு வேத மாணாக்கன், ஜனங்கள் ஏற்றுக்கொள்ளுவதற்கு அவசியமான சத்தியம் அவனுக்குத் தெரியும். உலகின் மேல் வருபவைகளுக்கு மக்களை ஆயத்தப்படுவதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய சத்தியங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபடி அவர்களின் மனதை வேறு பக்கம் திருப்பி விடுவதே அவன் நோக்கம். CCh 683.2

1844-ம் ஆண்டு கடந்த பின்பு சகல விதமான மதவெறிக் கொள்கைகளை நாம் சந்திக்க வேண்டியதாயிருந்த்து. ஆவேசமார்க்க கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட சிலருக்கென எனக்கு கடிந்துகொள்ளும் சாட்சிமொழி கொடுக்கப்பட்டது CCh 683.3

பக்தியற்ற போதனையின் பின்னால் பாவமான செயல்கள் தொடர்ந்தன. பொய்களின் பிதாவின் வஞ்சிக்கிற இரை அது. ஆத்துமாக்கள் சுய திருப்தியளிக்கும் அசுத்தங்களில் மெய் மனஸ்தாபமின்றி தரித்திருக்கச் செய்த்தே அதன் பலன். CCh 683.4

கடந்த கால அனுபவம் மீண்டும் வரும். வருங் காலத்தில் சாத்தானுடைய மூட நம்பிக்கைகள் புதிய ரூபத்தில் தோன்றும். தப்பிதமானவைகள் மனம் விரும்பும்படியான முகஸ்துதியுடன் காணப்படும். பொய்யான கொள்கை கோட்பாடுகள் ஒளியின் ஆடை போர்த்து, தேவனுடைய ஜனங்களுக்கு முன் காட்டப்படும். இவ்விதமாகச் சாத்தான் கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் மோசம் போக்குவான். மகா தந்திரமான செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டு, மனது மயக்கப்படும். CCh 683.5

ஜலப்பிரளயத்தின் காலத்திலிருந்தவர்களிடம் காணப்பட்டது போன்ற அசுத்தங்கள் மனதை அடிமைப் படுத்தும்படி கொண்டு வரப்படும். இயற்கையைத் தெய்வமாக உயர்த்துவதும், கட்டுப்படுத்தப்படாத அளவுக்கு மனம் விரும்பியதை செய்வதும், தேவ பயமற்றவர்களின் ஆலோசனைகளும் அவன் விரும்பும் திட்டமான முடிவுகளுக்குக் கொண்டு வரும்படி சாத்தான் உபயோகிக்கும் கருவிகளாகும். உபாயங்களை நிறைவேற்றுவதற்கு மன சக்தியை மனதிற்கு மேலாக அவன் உபயோகிப்பான். எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகுந்த துக்கத்திற்கேதுவான கருத்து என்னவெனில், சாத்தானின் தந்திரமான செல்வாக்கினால் தேவனிடம் மெய்யான தொடர்பு அற்று, தேவ பக்தியின் வேஷம் காணப்படும். நன்மை தீமை அறியத்தக்க விருட்ஷத்தின் கனியைப் புசித்த ஆதாம் ஏவாளைப் போன்று இன்னும் அனேகர் தவறுதலின் வஞ்சக உணவைப் புசிக்கின்றனர். CCh 684.1

ஏதேன் தோட்ட்த்தில் சாத்தான் தன்னை மறைத்துக் கொண்டு சர்ப்பத்தின் மூலம் நம் ஆதிப் பெற்றோர்களிடம் பேசினது போன்று, சாத்தானின் ஆட்கள் தவறான கொள்கைகளைக் கவர்ச்சியான ஆடைகளால் மூடி விடுகின்றனர். இவர்கள் கொடும் விஷம் போன்ற கொள்கைகளை மெதுவாக மனதிற்குள் செலுத்தி விடுகின்றனர். தெளிவான வேத வசனங்களுக்கு மாறாக, கட்டுக் கதைகளை நாடுபவர்கள் மேல் சாத்தானின் மயக்கம் செல்வாக்கு பலிக்கும். CCh 684.2

அதிகப்படியான வெளிச்சத்தைக் கண்டடைந்தவர்களைச் சாத்தான் விடப்பிடியாக்க் கண்ணியில் அகப்படுத்தப் பார்க் கிறான். அவர்களை மோசம் போக்கினால், அவர்கள் அவன் வல்லமைக்குட்பட்டு, பாவத்தை நீதியின் வஸ்திரத்தினால் மூடி, அனேகரை வழி விலகச் செய்வார்கள் என அறிவான். சாத்தான் ஒளியின் தூதனாக ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியர்களின் கூட்ட்த்திலும், ஒவ்வொரு சபையிலும் மெம்பர்களைத் தன் பக்கம் ஆதாயம் பண்ணும்படி நடந்து திரிகிறான். மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ண வொட்டார் என்று தேவனுடைய ஜனங்களை எச்சரிக்கும்படி நான் கட்டளை பெற்றேன். கலாத்தியர் 6:7. 8T 292-294. CCh 684.3