Go to full page →

தேவ வசனத்தின் அன்பும் அறிவும் நமது உறுதி CCh 691

சத்தியத்தில் நீண்ட காலமாக உள்ள அனேகரின் இருதயஙளுக்குள்ளே கடினமாகத் தீர்ப்புக்கூறும் ஆவி பிரவேசித்திருக்கிறது. அவர்கள் குற்றம் கண்டு, வன்மையாகக் குறை கூறுகிறவர்கள். தங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர்கள் பேரில் தீர்ப்பளிப்பதற்கு நியாயாசனத்தின் மேல் ஏறி விடுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து இறங்கி, தம் முன்பு வணங்கி, பாவ அறிக்கை செய்து, மனந் திரும்பும்படி தேவன் அழைக்கிறார். அவர் அவர்களைப் பார்த்து, “ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத் தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்” என்கிறார். வெளி. 2:4,5. முதலிடத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுடைய வார்த்தையாலும், நடக்கையாலும் அனேக உள்ளங்களை புண்படச் செய்கின்றனர். CCh 691.2

கிறிஸ்துவானவர் தமது ஜனங்கள் தேவ வசனத்தை விசுவாசித்து கிரியை செய்யும்படி கேட்கிறார். இந்த வார்த்தையை ஏற்று, அதைக் கிரகித்துக்கொள்ளுகிறவர்கள் அதை ஒவ்வொரு கிரியையின் பாகமாக்கி, குணத்தின் ஒவ்வொரு அம்சமுமாக்கி, தேவ பெலத்தில் பலமடைகிறார்கள். அவர்களது விசுவாசம் பரலோகத்தில் ஆரம்பித்ததாகக் காணப்படும். வேறு பாதையில் அலைந்து திரியார்கள். அவர்களது மனது கிளர்ச்சிகரமானதும், விசித்திரமானதுமான மார்க்கத்திற்கு திரும்பாது. மனிதர்களுக்கும், தேவ தூதர்களுக்கும் முன்பாக அவர்கள் பலத்துக்கும். பொருத்தமானதுமான கிறிஸ்தவ குண லட்சணமுள்ளவர்களாக நிற்பார்கள். CCh 692.1

கிறிஸ்துவின் போதனையில் காட்டப்பட்ட பொன் தூப கலசத்தின் சத்தியம் நமக்கு உண்டு. அது ஆத்துமாக்களை உணர்த்திக் குணப்படுத்தும். கிறிஸ்து இவ்வுலகில் கூறி அறிவித்த சத்தியங்களை எளிய விதமாகப் போதி; நீ கொடுக்கும் தூதின் வல்லமை தன்னில் தானே உணரப்பட்த் தக்கதாக இருக்கும். வேத அஸ்திபாரமற்ற, கிறிஸ்து உபதேசியாத திட்டங்களையும், கோட்பாடுகளையும் போதியாதே. நாம் கொடுக்கத்தக்க மகத்துவமும், பக்தி வினயமுமான சத்தியம் உண்டு. “எழுதப்பட்டிருக்கிறது” என்பதே ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் கொண்டு வரப்பட வேண்டிய திட்டம். CCh 692.2

வழி நடத்தப்படுவதற்காக தேவ வசனத்தண்டை போவோமாக. “கர்த்தர் சொல்லுகிறதாவது” என்பதைத் தேடுவோம். மானிட முறைகள் நமக்கு ஏராளமுண்டு. உலக விஞ்ஞானத்தில் மட்டும் மனது பயிற்றுவிக்கப்பட்டிருக்குமானால் தேவனுடைய காரியங்களைக் கிரகிக்க தவறி விடும். ஆனால் அதே மனது சீர்திருந்தி பரிசுத்தமாக்கப்பட்டால் தேவ வசனத்தின் தெய்வீக சக்தியைக் காணும். பரிசுத்த ஆவியினாலே மனமும், இருதயமும், பரிசுத்தமாக்கப் பட்டிருந்தால் பரலோகக் காரியங்களைப் பகுத்தறியும். 8T 298-301. CCh 692.3