Go to full page →

தனது சித்தத்தை அடுத்தவனின் ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொடுத்தல். CCh 697

ஒருவன் மற்றவனின் மனதைக் கட்டுப்படுத்த இடங் கொடுக்கலாகாது. இப்படிச் செய்கிறவன் தன் அயலான் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வதாக எண்ணிக்கொள்ளுகின்றான். ஒருவர் மன ஆரோக்கியம் அடைய ஊழியம் செய்கிறனென்பது மகா மோசமான ஆபத்து. தற்காலிகமாக சுகம் கிடைத்தது போன்ற உணர்ச்சியடையலாம். ஆனால் அவ்விதமாகக் கட்டுப்பட்ட மனம் ஒரு போதும் அவ்வளவு திட்த்தையும் நம்பிக்கையையும் மறுபடியும் அடைவதில்லை. நாம் இயேசுவின் வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்ட அந்த ஸ்திரீயைப் போன்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் சிலாக்கியம் கொண்டு விசுவாசமாகச் கிறிஸ்துவை அண்டினால், அவர் அந்த ஸ்திரீயின் தொடுதலை அறிந்து, சுகம் கொடுத்தது போன்று சீக்கிரமே பதிலளிப்பார். CCh 697.2

ஒருவன் மனதை இன்னொருவனுடைய மனதினால் அடக்கி ஆள வேண்டிமென்பது தேவனுடைய திட்டமல்ல. பிதாவின் வலது பாரிசத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவரும், மரணத்திலிருந்து எழுந்தவருமானவர் மகா பரிகாரியாக இருக்கிறார். சுகமடையும் வல்லமைக்காக அவரை நோக்க்கிப் பார். அவர் மூலம் மட்டும் பாவிகள் தாம் இருக்கிற வண்ணம் தேவனண்டை வரக்கூடும். இன்னொரு மனிதனின் வாயிலாக அவர்கள் ஒரு போதும் வர முடியாது. நோயினால் கஷ்டப்படுகிறவர்களுக்கும், பரலோக உதவியாளருக்கும் இடையே மானிடன் ஒரு போதும் குறுக்கிடலாகாது. பிறர் மனதைத் தேவனுக்கு நேராகத் திருப்புவதில் ஒவ்வொருவரும் தேவனோடு ஒத்துழைக்க வேண்டும். உலகம் ஒரு போதும் கண்டிராத பெரிய பரம வைத்தியர் உண்டு எனவும், அவரது கிருபை வல்லமை பற்றியும் அவர்களுக்குச் சொல்லுங்கள். CCh 698.1

உங்களை ஒரு மனிதனுடைய மனதின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்படி நாம் கேட்பதில்லை. பிரசாரம் செய்யப்படுபவைகளிலெல்லாம் மன சிகிச்சை தான் மகாப் பயங்கரமான சாஸ்திரம். ஒவ்வொரு துன்மார்க்கனும் தனது தீய திட்டங்களின் மூலமாக கறைப்படுத்தலாம். இவ்வித சாஸ்திரங்களோடு நமக்குத் தொடர்பு இல்லை. அதைக் குறித்து நாம் பயப்பட வேண்டும். இவ்வகை சாஸ்திரத்தின் ஆரம்ப பாடம் நமது ஸ்தாபனங்களுக்குள்ளே கொண்டு வரக்கூடாது. MM 115, 116. CCh 698.2

ஜெபத்தை அலட்சியம் பண்ணுவது மனிதர் தங்கள் சொந்த பெலனில் சார்ந்து, சோதனையின் கதவைத் திறக்கும்படி வழி நடத்துகிறது. அனேகரின் மனச் சிந்தனை விஞ்ஞான ஆராய்ச்சி எனப்படுவதில் அகப்பட்டு, தங்கள் சொந்த சக்திகளை உணர்ந்தவர்களாகப் பெருமை பேசுகின்றனர். மானிட மனசுகளை சிகிச்சை செய்யும் கலைகள் பெரிதாகப் பாராட்டப்படுகின்றன. அதினதின் இடத்தில் அது நன் மையாயிருக்கலாம். ஆனால், அதைச் சாத்தான் பறித்து, அவைகளைத் தனது பலத்த சாதனங்களாக ஆத்துமாக்களை அழிக்கவும், மோசப்படுத்தவும் உபயோகிக்கிறான். அவனது கலையைப் பரலோகத்திலிருந்து வந்த்தாக ஏற்றுக்கொள்ளச் செய்து, தன்னை வணங்குவதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுகிறான். கபால சாஸ்திரம், மிருக ஆகர்ஷண சாஸ்திரம் போன்ற இவ்வித விஞ்ஞானங்களால் உலகம் நன்மை பெற்றுள்ளது என்ற உத்தேசத்தில் உலகம் முன்னை விட அதிக கேட்டுக்குள் சென்றிருக்கிறது. இவ்வகை சாஸ்திரங்களின் மூலமாக சன்மார்க்கம் சீரழிந்து ஆவேசமார்க்கத்திற்கு அஸ்திபாரம் போடப்படுகின்றது. ST Nov. 6, 1884. CCh 698.3