Go to full page →

சந்தேகங்கள் பயங்கள் நடுவில் தெய்வ மக்கள் முன்னேறுகின்றனர் CCh 732

நிகழ்கால சத்தியத்தை விசுவாசிக்கின்ற தம்முடைய ஜனங்களைத் தெய்வம் உருப்படுத்துகின்றார். துரிதமான பலனை விளைவிக்க அவர் எண்ணுகின்றார். இவ்வாறு தமது சித்தத்திற்கேற்ப அவர் கிரியை நடப்பித்து வரும்பொழுதே “முன்னேறிச் செல்லுங்கள்” என்று அவர்களுக்குக் கூறுகின்றார். இப்பொழுது வழி திறக்கப்படாமல் இருப்பது உண்மையே. ஆயினும் விசுவாச பெலத்துடனும் தைரியத்துடனும் அவர்கள் புறப்பட்டுச் செல்லும்பொழுது, அவர்களுடைய கண்களுக்கு முனபாகத் தெய்வம் பாதையைத் தெளிவுபடுத்துவார். முறு முறுக்கிறவர்கள் ஆதி இஸ்ரவேலர் முறு முறுத்தது போலவே எப்பொழுதும் முறு முறுத்து, அவர்கள் முன்பாக இருக்கும் கஷ்டங்களுக்குக் காரணம் கடவுள் தம்முடைய வேலையை முன்னேற்றும் விசேஷித்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எழுப்பியவர்களே என்று கூறுவார்கள். இடுக்கமான இடங்களுக்கு அவர்களை கொண்டு வந்து பரீட்சிப்பது தெய்வமென்றும், அவருடைய கரத்தினாலேயே அன்றி அதினின்று விடுதலை பெறுவது கூடாதென்றும் அறியாமற்போகிறார்கள். CCh 732.1

சில வேளைகளிலே கிறிஸ்தவ வாழ்வை ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பது போலக் காணப்படும். கடமைகளை நிறைவேற்றுவதும் அதிகக் கடினமாகத் தோன்றும். நமக்கு முன்பாக அழிவும் அடிமைத்தனமும் முடிவாக மரணமும் இருப்பது போல மனக்காட்சி கற்பனை செய்யும். இந்த அதைரி யங்கள் யாவிற்கும் மேலாக “முன்னேறிச் செல்க” என்று கூறும் கடவுளுடைய குரல் ஒலிக்கின்றது. நம்முடைய கண்கள் இருளை ஊடுருவிப்பார்ப்பதற்கு கூடாவிட்டாலும், அடிக்கும் அலைகளின் குளிர் நீர் நமது பாதங்களில் வந்து மோதிய் போதிலும், விளைவு யாதாயினும். நாம் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். 4T 26. CCh 732.2

பிளவுபட்ட அரை மனதுடனே நடத்தும் வாழ்வில் அவ நம்பிக்கையும் இருளுமே இருக்க நீங்கள் காண்பீர்கள். மார்க்க ஆறுதலையும் உலகம் தரும் சமாதானத்தையும் நீங்கள் அடையக் கூடாது. “சிறிதளவே செய்தல்” என்றழைக்கப்படும் சாத்தானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திராமல், எழுந்து, உங்களுடைய சிலாக்கியமாகிய உயர்வான தேர்ச்சியைப் பெறுங்கள். அனைத்தையும் கிறிஸ்துவுக்காகத் துறந்துவிடுவது ஆசிர்வாதமானதோர் சிலாக்கியம். பிறருடைய ஜீவியங்களைப் பார்த்து, அவர்களுடைய மாதிரியின்படியே நடந்து, அந்நிலைக்கு மேலே நீங்களும் உயர்வடையாமல் இருந்துவிடாதிருங்கள். தவறாத ஒரே உண்மையான முன் மாதிரி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது! இயேசுவான வரை மட்டும் பின்பற்றுவதே பத்திரமானது. பிறர், ஆவிக்குரிய சோம்பேரியின் இலட்சியங்களைப் பின்பற்றினாலும், நீங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவ குணத்தின் உயர்விற்கு நேராகச் செல்லுவதற்கு உறுதி பூணுங்கள். பரலோகத்திற்கென்று குணத்தை உருவாக்குங்கள். உங்களுடைய ஸ்தானத்தில் நித்திரை செய்யாதிருங்கள். உங்கள் ஆத்துமாவுடனே மெய்யாகவும் உண்மையுடனும் நடந்து கொள்ளுங்கள். 1T 241. CCh 733.1