Go to full page →

அத்தியாயம்-5 CCh 108

கடவுள் உனக்கு நியமித்துள்ள ஊழியம் CCh 108

ஆண் பெண்களான நம் சபையார் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் முயற்சிகளைப் போதகர்களோடும், சபை உத்தியோகஸ்தர்களுடனும் ஒருமுகப்படுத்தி உழைத்தாலன்றி பூமியில் தேவனுடைய வேலை ஒருபோதும் முடிவடையாது 9 T. 117. CCh 108.1

கிறிஸ்துவின் பின்னடியார் ஒவ்வொருவருக்கும் பின் வருமாறு கூறப்படுகிறது. நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். மாற்கு 16:15. கிறிஸ்துவின் ஜீவியத்திற்கென நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடன் மனிதரின் ரட்சிப்புக்கென்று உழைக்க நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இழந்துபோனவர்களை மீட்க கிறிஸ்துவுக்கிருந்த அதே மனோவாஞ்சை அவருடைய பின்னடியாரிடமும் காணப்பட வேண்டும். எல்லாரும் ஒரே மாதிரியான வேலையைச் செய்ய முடியாதெனினும், எல்லாரும் செய்யக்கூடிய ஓரிடமும், ஒரு வேலையும் உண்டு. யாருக்கெல்லாம் தேவாசீர்வாதம் அருளப்பட்டிருக்கிறதோ, அவர்களெல்லாருக்கும் அவருக்குப் பணி செய்யும் உத்தரவாதமுண்டு. தேவ ராஜ்ய விஸ்தரிப்புக்கென ஒவ்வொரு வரமும் உபயோகிக்கப்பட வேண்டும். CCh 108.2

ஆத்தும இரட்சிப்புக்கான முயற்சிகளில் பிரசங்கம் செய்வது ஒரு சிறு பாகமேயாகும். பரிசுத்த ஆவி சத்தியத்தைப் பாவிகளுக்கு உணர்த்துகிறார். தேவன் அவர்களைத் தம் சபையின் ஆதரவில் வைக்கிறார். போதகர்கள் தங்கள் காரியங்களைச் செய்யலாம்; என்றாலும் சபையின் பொறுப்பை சபையே நிறைவேற்ற வேண்டும். விசுவாசத்திலும் அனுபவத்திலும் குழந்தைகளாயிருப்பவர்களிடமும் சென்று, வீண் வார்த்தைகளை அலப்பாமல், ஜெபித்து, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமமான வார்த்தைகளைப் பேசி, அவர்களை போஷிக்குமாறு தேவன் எதிர் நோக்குகிறார். 8T. 16. CCh 108.3

பூர்வ இஸ்ரவேலரை உலகத்துக்கு ஒளியாயிருக்க அழைத்தது போல இக் காலத்தில் தம் சபையையும் அழைக்கிறார். முத்தூதுகளின் வல்லமையான சத்தியத்தினால் உலகிலிருந்தும் ஏனைய சபைகளிலிருந்தும், தேவன் அவர்களைப் பிரித்தெடுத்து தமது திவ்ய பிரசன்னத்தருகே சேர்க்கிறார். தேவன் அவர்களைத் தமது பிரமாணங்களின் காவலாளர்களாக நியமித்து, இக் காலத்துக்குரிய தீர்ககதரிசனங்களாகிய பெருஞ் சத்தியங்களை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். பூர்வ இஸ்ரவேலருக்குத் தேவனுடைய வாக்கியங்கள் ஒப்புவிக்கப்பட்டது போல, உலகத்திற்குக் கொடுக்கப்பட்ட வேண்டிய பிரமாணங்களையும் சத்தியங்களையும் பரிசுத்த நம்பிக்கையாக நம்மிடம் கடவுள் ஒப்புவித்திருக்கிறார். 4T.69. CCh 109.1

வெளிப்படுத்தல் 14-ல் சொல்லப்பட்ட முத்தூதுகள், கடவுளின் வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டு, பூமி எங்கும் சென்று எச்சரிப்புச் செய்தியை கூறி அறிவிக்கும் ஜனத்தைக் குறிக்கும். தம் பின்னடியார்களைப்பார்த்து கிறிஸ்து: நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்றார். மத். 6:14. இயேசுவை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆத்துமாவையும் நோக்கி கல்வாரி பின்வருமாறு கூறுகிறது: இதோ! ஆத்துமாவின் மாபெரும் மதிப்பைப் பாருங்கள். நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். மாற்கு 16:15. வேலையைத் தடுக்கும் எக் காரியத்திற்கும் இடங்கொடுக்கக்கூடாது. இதுவே சதா காலங்களுக்கு முரிய அதி முக்கிய வேலை. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும்படி இயேசு பாராட்டிய அதே அன்பு அவருடைய பின்னடியார்கள் யாவரையும் நெருக்கி ஏவும். 5T.455-456. CCh 109.2

கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்படைக்கிற ஆத்துமாவை ஆ! என்ன மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக்கொள்கிறார். உலகத்திற்கு, அவதாரமெடுத்து வெளிப்படுத்தின தெய்வ அன்பின் இரகசியங்களை அறிவிப்பதற்கு மனுஷீகத்தை தெய்வீகத்தோடு இணைக்கிறார். அதைக் குறித்து பேசு, ஜெபி, பாடு, உலகத்தை அவரது சத்திய செய்தியால் நிரப்பு. அது எட்டாத எல்லையெல்லாம் அதைக்கொண்டு செல். 9T. 30. CCh 110.1