Go to full page →

உங்கள் தாலந்துகள் ஒரு தேவைக்குப் பயன் படும் CCh 123

தமது மாபெருந்திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஓரிடம் வைத்திருக்கிறார். ஒரு வேளை அத்தாலந்து மிகவும் அற்பமாக இருக்கலாம். அந்த ஒரு தாலந்துக்கும் கடவுள் ஓரிடம் வைத்திருக்கிறார்; அத்தாலந்தை உண்மையாக பயன்படுத்தினால் அதற்கென கடவுள் நியமித்த நோக்கத்தை அது நிறைவேற்றக்கூடும். சிறந்த தாலந்துகளைப் பார்க்கிலும், குடிசையில் வாழும் ஒருவனுடைய தாலந்துகள் வீடுவீடாய்ச் சென்று சந்தித்து ஊழியஞ் செய்வதர்கு அவசியப்படுகிறது. 9T. 37, 38. CCh 123.2

தேவன் விரும்புகிறபடி மனிதர் தங்கள் சக்திகளாஇ உபயோகித்தால், அவர்கள் திறமைகள் பெருகி, தாலந்துகள் விருத்தியாகி, இழந்த ஆத்துமாக்களை இரட்சிக்க பரம ஞானம் அடைவார்கள். சபை அங்கத்தினர்கள், தேவன் பிறருக்குக்கீயும்படி தங்களுக்கு அருளிய பரம பொறுப்பு பற்றி கவலையற்று அசட்டையாக இருந்தால், பரம மொக்கிஷத்தை அவர்கள் எங்ஙனம் எதிர் நோக்கக்கூடும்? கிறிஸ்தவர்கள் இருளிலிருப்போருக்கு ஒளியளிக்க பாரம் அடையாதிருக்கும்போது, அறிவையும் கிருபையையும் அளிக்காமலிருக்கும் போதும், அவர்கள் விவேகம் இழந்து, தேவன் தங்களுக்கு அருளிய பரம இரவுகளைப் பற்றி நன்கு பாராட்டக்கூடாமல் போகிறார்கள். தங்களுக்கு கிடைத்த நன்மைகளைப் பகிர்ந்து கொடுக்கும் அவசியத்தை உணராது போகிறார்கள். CCh 123.3

பெரிய சபைகள் பற்பல இடங்களில் சேர்ந்திருக்கக் காண்கிறோம். அந்த உறுப்பினர்கள் சத்திய அறிவையடைந்து, அதைக் கேட்பதில் திருப்தியடைந்து, பிறருக்கு அவ் வெளிசத்தைக் கொடுக்க வழி தேடுவதில்லை. வேலை முன்னேற்றம், ஆத்தும ஆதாயம் முதலியவை பற்றி பொறுப்புணர்ச்சியற்றவர்களாகி விடுகின்றனர். உலகக் காரியங்களில் முழுகிப் போய், தங்கள் மார்க்க பக்தியைத் தங்கள் தொழில் துறைகளில் கொண்டு வருகிறதில்லை. மதம் மதமே, தொழில் தொழிலே எனச் சொல்லுகின்றனர். அவை ஒவ்வொன்றுக்கும் தகுந்த இடமுண்டு என்று விசுவாசிக்கிறார்கள்; ஆயினும் அவைகள் பிரிந்திருக்கக் கடவது என்று சொல்லுகிறார்கள். CCh 123.4

வாய்ப்புகளை அசட்டை செய்து, சிலாக்கியங்களைத் துர்ப்பிரயோகஞ் செய்வதால், சபை அங்கத்தினர்கள் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளராமல் போகிறார். 2 பேது. 3:18. ஆதலால் அவர்கள் விசுவாசத்தில் பெலவீனரும், அறிவில் பேதைகளும், அனுபவத்தில் குழந்தைகளுமாக இருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தில் வேரூன்றி நிலைத்திருக்கவில்லை. இப்படியிருந்தால் கடைசிகால பல வஞ்சகங்கள் அவர்களை நிச்சயமாய் ஏமாற்றும்; பொய்க்கும், சத்தியத்திற்கும் உள்ள பாகுபாட்டை காணக்கூடாதபடி அவர்களுக்கு ஆவிக்குரிய திருஷ்டி இல்லாமற்போகும். 6T. 434, 425. CCh 124.1