Go to full page →

உற்சாகமாய்க் கொடுக்கிறவன் CCh 141

தமது வேலையை முன்னேறச் செய்வதற்குக் கடவுள் ஏற்படுத்திய ஒரே வழி மனிதரைச் சொத்துக்களால் ஆசீர்வதிப்பதாகும். அவர் அவர்களுக்கு சூரியனைப் பிரகாசிக்கப் பண்ணி, மழையைப் பெய்யச் செய்கிறார்; மரஞ்செடி கொடிகளை செழிப்படையச் செய்கிறார்; பணஞ் சம்பாதிக்க சுகத்தையும் திறமையையும் அருளுகிறார். அவருடைய தாராளக் கரங்களிலிருந்து எல்லா ஆசீர்வாதங்களும் நமக்கு வருகிறது. அதன் நன்றி பாராட்டுதலாக மனிதர் பாவநிவாரணக் காணிக்கை, ஸ்தோத்திரக் காணிக்கை, உற்சாகக் காணிக்கை ஆகிய பலவகை காணிக்கைகளைச் செலுத்தும்படி விரும்புகிறார். 5T. 150. CCh 141.4

உதாரத்துவமாய் வழங்குவதர்கு உதாரணம் யூதர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுவதற்குக் கொடுத்ததிலிருந்து காண்கிறோம்; அவ் விதமான உதாரத்துவம் பிற்காலத்திய கிறிஸ்தவர்களால் வழங்கப்படவேயில்லை. அவர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து அப்பொழுது தான் விடுதலை பெற்று, வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்களை தொடர்ந்து வந்த எகிப்தீயர் கைகளிலிருந்து தப்பி அப்பொழுது தான் வந்து கொண்டிருந்தார்கள்; அப்பொழுது தேவ வார்த்தை மோசேக்கு உண்டாகி; இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்கு காணிக்கையை வாங்குவீர்களாக, என்றார். யாத். 25:2. CCh 142.1

அவருடைய ஜனத்திற்கு திரண்ட செல்வமிருந்ததில்லை; குறைந்த செல்வத்துடனிருந்த அவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரம் கட்டும் பொறுப்பு வந்தது. கர்த்தர் பேசினார். அவர்கள் அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். அவர்கள் ஒன்றையும் கொடாமல் வைத்துக்கொள்ளவில்லை. யாவரும் தாராளமாய்க் கொடுத்தனர். தங்கள் லாபத்த்ிலிருந்து ஒரு பாகத்தையல்ல, ஆனால், தங்கள் உடைமைகளில் ஒரு பெரும் பாகத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் தத்தஞ் செய்தனர். அப்படிச் செய்தது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. அவை கள் யாவும் அவருடையவைகள் அல்லவா? அவர்கள் வைத்திருந்த யாவும் அவர் கொடுத்தவைகள் அல்லவா? அவர் கேட்டால், கொடுத்தவருக்கு மறுபடியும் கொடுப்பது அவர்கள் கடமையல்லவா? CCh 142.2

கண்டிப்பு தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாகவே கொணர்ந்தனர்; மேலும் கொண்டு வராதபடி அறிவிக்கப்பட்டார்கள்; ஏனெனில், தேவைக்கு அதிகமான பொருட்கள் குவிந்துவிட்டன. மீண்டும் ஆலயக் கட்டடத்திற்கென அழைப்பு கொடுக்கப்பட்டபோது மனப்பூர்வமாய்க் கொடுத்தார்கள். மனச் சங்கடத்தோடு கொடுக்கவில்லை. தேவ ஆராதனைக்கென்று ஓர் ஆலயம் கட்டப்படப்போவதை எண்ணி, மகிழ்ச்சியுடன் தாராளமாய்க் கொடுத்தார்கள். CCh 143.1

எபிரேயரைவிட அதிகமான ஒளி பெற்றிருப்பதாக பெருமை பாராட்டும் கிறிஸ்தவர்கள் அவர்களைவிட குறைவாகக் கொடுக்கலாமா? கடைசி காலத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் யூதர் கொடுத்ததில் அரைவாசிக்கும் குறைவாய்க் கொடுத்துத் திருப்தியாக இருக்கலாமா? 4T. 77-79. CCh 143.2

பரலோக ஈவுகளைப் பெற்றவர்கள் மனப்பூர்வமாகய் கொடுக்கும் காணிக்கை, தசம பாகங்களைக் கொண்டு பூமியில் சத்திய ஒளியைப் பரப்ப கர்த்தர் திட்டஞ் செய்திருக்கிறார். மிகச் சொற்பப் பேரே மிஷனெரிகளாகவும், போதகர்களாகவும் பிராயண்ஞ் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையோர் தங்கள் பொருட்கள் மூலம் சத்தியத்தைப் பரப்ப வேண்டும். CCh 143.3

ஆம், வேலைக்குப் பொருளுதவி செய்யுங்கள் என அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன; நான் கொடுத்துக்களைத்திருக்கிறேன் என்று ஒருவன் சொல்லலாம். நீ அப்படிக் கொடுத்துக் களைத்திருக்கிறாயா? அப்படியானால் நாம் கேட்போம்: தேவனுடைய கருணைக் கரங்களிலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்வதில் நீ களைப்படைகிறாயா? அவர் உன்னை ஆசீர்வதிப்பதை நிறுத்தும் வரை நீயும் அவர் உன்னிடம் கேட்பதைக் கொடாமல் நிறுத்தாதே. அவர் உன்னை ஆசீர்வதித்து, நீயும் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கச் செய்கிறார். நீ பெற்றுக்கொள்வதைப்பற்றி சலிப்படைவதானால், கொடுக்கும்படி பல அழைப்புகள் வருவதைப்பற்றி, நான் கொடுக்கச் சலிப்படைகிறேன் என்று சொல்ல இடமுண்டு. நாம் பெறும் யாவிலும் ஒரு பாகத்தை தேவன் தமக்கனெ பிரத்தியேகப்படுத்தியிருக்கிறார். இப்படி அவருக்குரியதைக் கொடுக்கும் கொடாமல் நிறுத்தப்படுகையில், அந்த முழுப் பாகவும் உடனே அல்லது சற்று பிந்தி சபிக்கப் படுகிறது. தேவ உரிமை முதலாவது, மற்றவை இரண்டாவதானவை. 5T. 148, 150. CCh 143.4