Go to full page →

தியாகத்தைத் தூண்டும் அன்பின் கொடைகளைக் கடவுள் மதிக்கிறார் CCh 150

பரிசுத்த ஸ்தலத்தின் தராசுகளில், எளியோர் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் அளித்த கொடைகள், அவை களின் தொகைக்குத் தக்கவாறு அல்லாமல், அக்கொடைகளுக்கு அடிப்படையாக இருக்கும் அன்புக்குத் தக்கவாறே மதிப்பிடப் படுகின்றன. ஏழை தன் வறுமையிலிருந்து உற்சாகமாகக் கொஞ்சம் கொடுத்தாலும். தன் செல்வப் பெருக்கிலிருந்து ஐசுவரியவான் கொடுப்பதைப் போலவே அது மதிக்கப்படும்; எனவெ, தாராளமாய்க் கொடுக்கும் ஏழைக்கு இயேசுவின் வாக்குகள் நிச்சயமாகப் பலிதமாகும். தனக்கிருக்கும் சிறிதையும் அவன் தியாகஞ் செய்கிறான். தன் செளகரியத்துக்கே மிக அவசியமானதை அவன் ஒதுக்கிறான்; ஆனால் ஐசுவரியவானோ தன் மிகுதியிலிருந்து கொடுத்து, தன் வாழ்க்கையில் குறைவைக் காணாமலும், தன் தேவைகளாஇத் தியாகஞ் செய்யாமலுமிருக்கிறான். ஏழையின் நன்கொடையில் காணப்படும் பரிசுத்தம் ஐசுவரியவானுடைய நன்கொடையில் கிடையாது. ஏனெனில், ஐசுவரியவான் தன் மிகுதியிலிருந்து கொடுக்கிறான். மனித நலங் கருதியே, தேவத்திருவுளம், ஒழுங்காகக் கொடுக்கும் இப் பெரும் திட்டத்தை வகுத்திருக்கிறது. அவருடைய பாதுகாப்பு ஒரு காலும் ஓரிடத்தில் நின்றுவிடுவதில்லை. தேவனுடைய வழி நடத்தும் கடாட்சத்தை அவருடைய ஊழியர்கள் பின்பற்றுகிறவர்களாகில் எல்லாரும் சுறுசுறுப்பாய் உழைப்பார்கள். 3 T. 398, 399. CCh 150.3

சிறுவர் செலுத்தும் காணிக்கைகளைத் தேவன் அங்கீகரித்து, அவைகள் மேல் பிரியமாயிருக்கிறார். காணிக்கை எந்த ஆவியோடு கொடுக்கப்படுகிறதோ அதற்கேற்ற படியே அதின் மதிப்புமாகும். பவுலார் ஆலோசனைப்படி ஏழைகள் வாராவாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ப்பதில் பொக்கிஷத்தைப் பெருக்குகிறார்கள். அவர்கள் காணிக்கைகள் தேவனுக்கு முழுவதும் பிரியமாயிருக்கிறது; ஏனெனில் அவர்கள் தியாகம் ஐசுவரியவான் களுடைய தியாகத்தைப் போலவும், அதைவிட பெரிதாகவுமிருக்கிறது. அனாவசியமாக செல வழிக்காதபடி இத் திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பாயிருக்கிறது. ஐசுவரியவான்கள் டம்பமான வாழ்க்கையில் இறங்கிவிடாதபடி இது அவர்களைக் காக்கிறது. 3 T. 412. CCh 151.1

மனதையும் இருதயத்தையும் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்படச் செய்வதே முழு ஆத்துமாவோடு கொடுக்கும் காணிக்கையின் பலன். 6 T. 390. CCh 152.1

தேவனுக்கு கொடுப்பது பற்றிய விதியை பவுல் கூறியறிவித்து, அதனால் தேவனுக்கும், நமக்கும் இடையில் உண்டாகும் பலனையும் நமக்குச் சொல்லுகிறார். பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்த படியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க்கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடைய வர்களாயும், சகல வித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகல வித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைந்தான்; ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை யளித்து, அதைப் பெருகப் பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதார குணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். 2 கொரி. 9:6-11. 5 T. 735. CCh 152.2