Go to full page →

அத்தியாயம்-13 CCh 202

சபை ஸ்தாபனம் CCh 202

கிறிஸ்துவின் கட்டளையை எவராவது நிறைவேற்ற வேண்டும்; அவர் பூமியில் செய்ய ஆரம்பித்த வேலையை யாராவது தொடர்ந்து செய்ய வேண்டும்; இவ்வாய்ப்பு சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 6T. 295. CCh 202.1

போதகர்கள் ஒழுங்கையும், சுயசிட்சையையும் கையாட வேண்டும். அப்பொழுது அவர்கள் தேவனுடைய சபையை சித்திகரமாக சிட்சித்து, நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட போர் வீரர்களைப் போல் ஒற்றுமையாக ஊழியம் செய்ய உபதேசிக்கக் கூடும். யுத்தக் களத்தில் சித்திகரமான நடவடிக்கை எடுக்க சிட்சையும் ஒழுங்கும் அவசியமானால், போர்க் களத்தில் எதிர்த்துப் போராடும் சேனைகளைப் பார்க்கிலும், மகா விலையேறப் பெற்றதும் உன்னதமுமான இலட்சியங்களுக்காகப் போராடுவதற்கு அவை எவ்வளவு அவசியம். நாம் ஈடுபட்டிருக்கும் போராட்டத்தில், நித்திய காரியங்கள் ஆபத்திலிருக்கின்றன. CCh 202.2

துதர்கள் இசைவாக ஊழியஞ் செய்கின்றனர். அவர்களுடைய எல்லாப் போக்கு வரத்திலும் பூரண ஒழுங்கு காணப்படுகின்றது. தூத கணங்களுடைய ஒழுங்கையும் ஒற்றுமையையும் நாம் அதிகக் கருத்தாய்ப் பின்பற்றும்போது நமது சார்பாக இந்தப் பரம சேனையின் முயற்சிகள் மிகவும் அனுகூலமாயிருக்கும். பரம அபிஷேகத்தைப் பெற்றவர்கள், தங்கள் எல்லா முயற்சிகளிலும், ஒழுங்கு, சிட்சை, உழைப்பில் ஒற்றுமை என்பவைகளை ஊக்கப்படுத்துவார்கள் அப்பொழுது தேவ தூதர்கள் அவர்களோடு ஒத்துழைக்கக் கூடும். ஆனால் அந்தப் பரம தூதர்கள் ஒழுங்கீனத்தையும், சீர் குலைவையும், தாறுமாறையும் ஒரு போதும், ஒரு போதுமே அங்கிகரிக்க மாட்டார்கள். இந்த எல்லா தீமைகளும், நமது சேனைகளைப் பலவீனப்படுத்தி, அதைரியப்படுத்தி, சித்திக்கான செயல்களைத் தடை செய்ய சாத்தான் எடுக்கும் முயற்சிகளை யாகும். CCh 202.3

ஒழுங்கும் ஒற்றுமையுமான நடவடிக்கையில் மாத்திரம் சித்தியுண்டு என சாத்தானுக்கு நன்றாய்த் தெரியும். தூத சேனையின் வேலைகளில் பூரண ஒழுங்கும் கீழ்ப்படிதலும் குறிப்பிடப்படுகிற தென்றும், பூரண சட்ட திட்டங்கள் பரலோகம் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் ஆளுகிறதென்றும் சாத்தான் நன்கு அறிவான். கிறிஸ்தவர்களைப் பரலோக ஏற்பாடுகளுக்கு எவ்வளவு தூரம் விலக்கவேண்டுமோ, அவ்வளவுதூரம் அவர்களை விலகச்செய்வது சாத்தானின் தீர்மானமான முயற்சியாகும். அவன் தேவனுடைய பிள்ளைகளைக் கூட வஞ்சித்து, ஒழுங்கும் சட்ட திட்டங்களும், பக்திக்கு சத்துருக்கள் என நம்பும்படிச் செய்கிறான். செயலில் இணக்கமும், சீரமைப்பும் இருக்கும்படி பாடுபட்டு, அந்நியோந்நியமாக நடந்து வரும் கிறிஸ்தவ சமுதாயங்களிலிருந்து விலகி தனித்திருப்பதே தங்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பும் படிச் செய்வான். ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கும் முயற்சிகள் யாவும் ஆபத்துகரமானதென்றும், நியாயமான சுயாதீனத்துக்கு முட்டுக்கட்டை என்றும், பாப்பு மார்க்கத்தின் அடிமைத்தனமென்றும் பயப்படும்படிச் செய்கின்றான். இப்படி வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள், தங்கள் சுயாதீன நடக்கையும் சுயாதீன எண்ணமும் ஒரு சிறந்த இலட்சணம் என்று கருதுகின்றனர். அவர்கள் எந்த மனிதனுடைய சொல்லையும் கேட்கமாட்டார்கள். அவர்கள் எவருக்கும் ஒத்துப்போவதுமில்லை. தங்களுக்குள்ளே கட்டுபாடு பண்ணி, தங்கள் சுயவழியைத் தெரிந்துகொண்டு, தங்கள் சகோதரர் மீது சாராமல் இருப்பது தேவ ஒழுங்கு என்று மனிதர் எண்ணும்படிச் செய்வது சாத்தானின் முக்கிய வேலை என்று எனக்குக் காட்டப்பட்டது. 1 T. 649, 650. CCh 203.1

தேவன் தமது சபையின் மூலமாய், தமது சித்தத்தையும். நோக்ககத்தையும் வெளிப்படுத்தி, அது பூமியின் மீது ஒளியின் வழியாயிருக்கும்படி செய்திருக்கிறார். அவர் எவர்க்காயினும் தமது சபையின் அனுபவத்திற்கு விரோதமான எந்த சுயேச்சையான அனுபவத்திற்கு விரோதமான எந்த சுயேச்சையான அனுபவத்தையும் கொடுக்கிறதில்லை. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இருளில் கொடுக்கிறதில்லை. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இருளில் விடப்பட்டிருக்கையில், சபை பூராவுக்குமுரிய தமது சித்தத்தின் அறிவை ஒரு மனுஷனுக்கு மட்டும் அவர் கொடுக்கிறதில்லை. தமது பாதுகாப்பினால், அவர் தமது தாசர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், தமது ஊழியம் பரவச்செய்ய அவர் நடத்தும் மற்றவர்கள் மீத பெரும் நம்பிக்கை வைக்கும் படியாக தமது சபையின் நெருங்கிய சம்பந்தத்துக்குள் வைக்கிறார். A.A.163. CCh 204.1