Go to full page →

சபைக்கு உறுதிமொழிகள் LST 184

கிறிஸ்து சபை சத்தியத்தை அறிவிப்பதற்கு தேவனுக்கு உதவியாய் இருக்கிறது: ஒரு விசேஷ வேலையைச் செய்கிறதற்காக அவர் அவளுக்கு வல்லமை அளித்திருக்கிறார்; அவள் தேவனுக்கு உண்மையாயிருந்து அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் தெய்வீக வல்லமையின் மேன்மை அவளுக்குள் வாசமாயிருக்கும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அவள் கனம் பண்ணினால் அவளுக்கு விரோதமாய் நிற்கத்தக்க வல்லமை ஒன்றுமில்லை. அவள் தன்னுடைய கடமையில் உண்மையாயிருந்தால் பதர் சுழல் காற்றுக்கு எதிர்த்து நிற்க்கக் கூடாதது போல சத்துருவின் படைகள் அவளை எதிர்த்து மேற்கொள்ள முடியாது. உலகத்தின் சகல வழிபாடுகளையும் விட்டுப் பிரிந்து அவள் கிறிஸ்துவின் நீதியாகிய அங்கியைப் போட்டுக் கொள்ளும் பட்சத்தில் பிரகாசமும் மகிமையுமான ஓர் நாளின் அருணோதயம் சபைக்கு முன்னிருக்கின்றது. LST 184.3

சபையின் அங்கங்கள் தங்கள் சீர்கேடுகளை இப்பொழுது அறிக்கையிட்டு ஒன்றாய் நெருங்கிச் சேர வேண்டியதவசியம். என் சகோதரரே, உங்களை ஒருவரை விட்டு ஒருவரை அல்லது தேவனை விட்டு உங்களைப் பிரிக்கக் கூடிய யாதொன்றும் உங்களுக்குள் வர இடங் கொடாதிருப்பீர்களாக. அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசாமல் இயேசுவிலுள்ள சத்தியத்தைப் பற்றிய அன்பில் ஐக்கியமாயிருங்கள். தேவனுக்கு முன்பாக வந்து நீங்கள் தீமைக்கு விரோதமாய்ப் போராடும் போராட்டத்தில் உங்களுக்கு ஏன் சகாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கு ஓர் நியாயமாக இரட்சகரின் சிந்துண்ட இரத்தத்தைச் சுட்டிக் காட்டி மன்றாடுங்கள். உங்கள் மன்றாட்டு வீணாகாது. மனப்பூர்வமான மனஸ்தாபத்தொடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் நீங்கள் தேவனண்டை செல்லுகிறபோது உங்களை அளிக்கும்படி வகை தேடுகிற சத்துருவை நீங்கள் மேற்கொள்வீர்கள். LST 185.1

நம்பிக்கையுடைய சிறைகளே, கர்த்தரிடம் திரும்புங்கள். தேவனிடத்திலிருந்து, ஜீவனுள்ள தேவனிடத்திலிருந்து பெலத்தைத் தேடுங்கள். இரட்சிப்பதர்கான அவருடைய வல்லமையிலும் அவருடைய விருப்பத்திலும் அசையாத, தாழ்மையுள்ள விசுவாசத்தைக் காட்டுங்கள். கிறிஸ்துவினின்று இரட்சிப்பின் ஜீவ தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அவரே ஜீவ ஊற்றாயும் சகல வல்லமைக்கும் காரணமாயுமிருக்கிறார். விசுவாசத்தோடு நாம் அவருடைய பெலத்தைப் பற்ற கொள்ளும்போது மகா நிர்ப்பந்தமுள்ள, அதைரியமான நிலைமையை அவர் மாற்றுவார், ஆச்சரியமான பிரகாரமாய் மாற்றுவார். அவர் இதைத் தமது நாமத்தின் மகிமைக்காகச் சஐவார். LST 185.2

அவிசுவாசிகளும் நம்பிக்கையற்றவர்களும் தைரியமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டுமென்று தேவன் தம்மை நம்புகிற விசுவாசிகளை அழைக்கிறார். ஒருவருக்கொருவர் உதவி புரியும் உயிருள்ள விசுவாசத்தினால் அவரை ரூபித்துக் காட்டவும் ஆண்டவர் நமக்குச் சகாயம் செய்வாராக. ------- 8 T 11-2. LST 185.3