Go to full page →

உறுதியான ஓர் அஸ்திபாரம் LST 191

சங்கத்தின் ஸ்திரமான விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடா விரும்புகிரவரகளுக்கு முகங் கொடாமல் நல்ல பாதுகாப்புடன் உறுதியை நின்ற ஓர் கூட்டத்தை நான் கண்டேன். தேவன் அவர்கள் பேரின் பிரியமாயிருந்தார். எனக்கு மூன்று படிகள் காண்பிக்கப்பட்டன. அவை முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதனுடைய தூதுகளே. எண்ணுடன் வந்த தூதன் சொன்னதாவது, “இந்தத் தூதுகளில் ஓர் கட்டையையாகிலும் அல்லது ஓர் குண்டூசியையாகிலும் அசைக்கிரவனுக்கு ஐயோ. இந்தத் தூதுகளைச் சரியை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிற விதத்தின் பேரில் ஆத்துமாக்களின் கதி தொங்குகிறது.” LST 191.1

நான் மறுபடியும் இத்தூதுகள் வழியாய்க் கொண்டு வரப்பட்டேன். தேவனுடைய ஜனங்கள் எவ்வளவு பிரயாசத்துடன் தங்கள் அனுபோகத்தை அடைந்திருந்தார்கள் என்று கண்டேன். அதிகமாய்க் கஷ்டப்பட்டுப் போராடி அதை அடைந்திருந்தார்கள். தேவன் அவர்களைப் படிப்படியாய் நடத்திக் கொண்டு வந்து திடமானதும் அசையாததுமானதோர் மேடையின் மேல் அவர்களை வைத்தார். சிலர் அந்த மேடையண்டை சென்று அதின் அஸ்திபாரத்தைச் சோதித்துப் பார்க்கக் கண்டேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தைப் பற்றிக் குற்றங் கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால் மேடை இன்னும் அதிகப் பூரணமாயிருக்குமென்றும் ஜனகள் அதிகச் சந்தோஷமாயிருப்பர்கள் என்றும் அவர்கள் விரும்பினார்கள். சிலர் அதை சோதிப்பதற்கு மேடையை விட்டு இறங்கி, அது தப்பிதமாய்ப் போடப்பட்டிருக் கிரதேன்று கூறினார். LST 191.2

ஆனால் ஏறக்குறைய யாவரும் அந்த மேடையின் மேல் உறுதியாய் நின்று கொண்டு மேடையினின்று இறங்கினவர்கள் தங்கள் முறைப்பாட்டை நிறுத்தும்படி அவர்களுக்குப் புத்திமதி சொன்னதை நான் கண்டேன்: ஏனெனில் தேவனே சிற்பாசாரியாக அதைக் கண்டி உண்டாக்கினார், அவர்கள் அவருக்கு விரோதமாகப் போர் புரிந்தார்கள்: - E.W. 25-9. LST 191.3

நாம் அநேக ஆண்டுகளாய்க் கொண்டிருந்தபடியே பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய விஷயம் நீதியின்படியும் சத்தியத்தின் படியும் நிற்கிறதென்று எனக்குத் தெரியும். மனசுகள் பக்க வழிகளில் செல்லும்படி செய்கிறது சத்துருவே. சத்தியத்தை அறிந்தவர்கள் சத்தியத்தில் யாதொரு ஆதாரமற்ற தப்பிதமான கொள்கைகளுக்காகவே வேத வாக்கியங்களைக் குவியலாய்க் குவிக்கும்படித் தேடும் போது அவன் சந்தோஷப்படுகிறான். அவ்விதம் பிரயோக்கிக்கப் பட்ட வேத வைக்கியங்கள் தப்பிப் பொருத்தப்படுகின்றன; அவைகள் தப்பிதத்தைப் பலப்படுத்த அருளப்படாமல் சத்தியத்தைப் பலப்படுத்த அருளப்பட்டவைகள். - G.W. 303. LST 191.4

* * * * *