Go to full page →

பேதமையான விசுவாசம் LST 21

என் வழிகாட்டி இப்போது வாசலைத் திறந்தார். நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அவர் மறுபடியும் நான் வெளியே வைத்திருந்த சகல வஸ்துக்களையும் எடுத்துக் கொள்ளும்படி எனக்குச் சொன்னார். நான் அவைகளை எடுத்துக் கொண்டதும் இருக்கமாய்ச் சுட்டியுள்ள ஓர் பச்சைக் கையிற்றை நக்குத் தந்தார். இதை நான் என் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும், நான் இயேசுவைப் பார்க்க விரும்பும்போது அதை நெஞ்சிலிருந்து எடுத்துக் கூடுமான மட்டிலும் நீட்டிப் பிடிக்கவும் வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டார். அது முடிப்பு விழுந்து நீட்ட கஷ்டமாகதபடி அதை வெகுகாலம் சுற்றியிருக்க விடக் கூடாதென்று என்னை எச்சரித்தார். அக்கயிற்றை என் நெஞ்சோடணைத்து, கர்த்தரைத் துதித்துக் கொண்டும், நான் சந்தித்த யாவருக்கும் இயேசுவைக் காணக் கூடிய இடத்தைச் சொல்லிக் கொண்டும் இடுக்கமான அப்படிகளின் வழியாய்க் கீழே இறங்கினேன். LST 21.2

இச் சொப்பனம் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது, அந்தப் பச்சைக் கயிறு என் மனதுக்கு விசுவாசமாவாதென்ன என்பதைக் காட்டிற்று. தேவன் பேரில் பற்றுதலாயிருப்பதின் அழகும் பேதமையும் என் உள்ளத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது. LST 22.1