Go to full page →

புதுக் கொள்கைகளைக் கையாடுதல் LST 192

சத்திய வெளிச்சத்தை யுடையவர்களுக்காக ஆயிரக் கணக்கான சோதனைகள் மறைவாய்த் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. நம்மில் ஒருவரும் எந்தப் புதுக் கொள்கையையும் வேத வாக்கியங்களின் எந்தப் புது தாற்பரியத்தையும் உடனே ஏற்றுக் கொள்ளாமல் அவைகளை முதலாவது அனுபோகமுள்ள சகோதரரிடம் ஒப்படைக்க வேண்டும், அப்பொழுது தான் எவரும் பத்திரமாயிருக்கலாம். தாழ்மையும், கற்றுக்கொள்ள இஷ்டமுமுள்ள ஆவியில் ஊக்கமான ஜெபத்தோடு அதை அவர்களுக்குத் தெரிவி; அதில் யாதொரு வெளிச்சமுமில்லை என்று அவர்கள் கண்டால், அவர்களுடைய தீர்மானத்திற்கு இணங்கிப் பொ; ஏனெனின், “அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” - 5 T 293. LST 192.3