Go to full page →

சந்தேக விளைச்சல் LST 194

ஒரு நிமிஷம் கூட இருதயத்தில் சந்தேகத்தைப் பேணுவது நல்லதல்ல. முதலாம் அற்புதத்தைப் பார்வோன் புறக்கணித்துத் தள்ளின போது அவன் விதைத்த சந்தேக விதைகள் முளைத்து, பின்னால் செய்யப்பட அற்புதங்கள் எல்லாம் அவனுடைய தப்பித நிலையை அவனுக்கு உணர்த்தக் கூடாத வண்ணம் அவ்வளவு ஏராளமான விளைச்சலைக் கொடுத்தன. சந்தேகமான கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அவன் தன சொந்த வழியில் துணிந்து நடந்தான்; முதற்பேறானவர்கள் குளிர்ந்த செத்த முகங்களை அவன் உற்று நோக்கும்படி கேட்கப்படுமட்டும் அவனுடைய இருதயம் அதிகமதிகமாய்க் கடினப் படலாயிற்று. - 5 T 273-4 LST 194.1

* * * * *

நமது உலகில் அவ்வளவு பெரிதும், அவ்வளவு பரிசுத்தமுள்ளதும் அவ்வளவு மகிமையானதுமான வேலை வேறொன்றுமில்லை, இச் சுவிசேஷ வேலையை தேவன் மகிமைப் படுத்துகிறதுபோல வேறெந்த வேலையையும் அவ்வளவாய் அவர் மகிமைப் படுத்துகிறதில்லை. தவறிப்போன இவ்வுலகத்திற்கு இச்சமயம் கொடுக்கப்படுகிற தூது இரக்கத்தின் கடைசித் தூதாம். - 6 T 19. LST 194.2

* * * * *