Go to full page →

பரிசுத்த ஆவி ஒரு உபாத்தியைப்போல LST 209

மனுஷர் தங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் பட்சத்தில் அவர் அவர்களே அவர்கள் இருக்கிற பிரகாரமே எடுத்து தமது ஊழியத்திற்கென்று அவர்களைப் பயிற்றுவிக்கிறார். உள்ளத்தில் கொள்ளப்பட்ட தேவ ஆவி ஆத்தும தத்துவங்களை எல்லாம் உயிர்ப்பிக்கிறார். பரிசுத்த ஆவியின் நடத்துதலின் கீழ் தேவனுக்கென்று முழுவதுமாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆத்துமா தேவனுடைய பிரமாணங்களை அறிந்து உணர்ந்து அவைகளை நிறைவேற்றும்படி பெலப்படுத்தப் படுகிறது.பெலவீனனும் தள்ளாடுகிறவனுமானவன் பெலமும் திடமுமுடையவனாகிறான். நிரந்தரமான பக்தி இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் நடுவாக மிகவும் நெருங்கியதோர் சம்பந்தத்தை ஸ்தாபிக்கிறபடியால், குண லட்சணத்தில் கிறிஸ்தவன் தன் எஜமானைப் போலாகிறான். அவனுக்கு தெளிவான, விசாலமான காட்சியுண்டு. அவனுடைய அறிவு அதிக ஆழ்ந்த கருத்துள்ளதும் அவனுடைய நிதானிப்பு துலாக்கோல் போல நேர்மையாயுமிருக்கிறது. உயிரைக்கொடுக்கிற நீதியின் சூரியனுடைய வல்லமையினால் அவன் உயிரடைந்திருக்கிறபடியினால் அவன் தேவனுடைய மகிமைக்கென்று அதிகக் கனியைக் கொடுக்கக் கூடியவனாயிருக்கிறான். LST 209.2

மானிட பக்தனுக்கு அபார பெலத்தை அளிப்பதினாலும் அறிவீனனுக்கு தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களைப் போதிப்பதினாலும் தேவ பலத்தின் வல்லமை ரூபித்துக் காட்டுகிறதற்கு, பாவத்தின் மேல் வெற்றியடையப் போராடுகிறவர்களோடு பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்க வேண்டுமென கிறிஸ்து வாக்களித்தார். உலக மீட்பரால் செய்யப்பட்டிருக்கிற கிரியை தனித்தனியே ஒவ்வொரு ஆட்களிடத்திலும் பலிக்கச் செய்வதற்கு எப்போதும் கிரியை செய்கிற மறு ஜெனன கர்த்தாவாக ஆவியானவர் அருளப்படாதிருந்தால், தேவனுடைய ஒரே பேறான குமாரன் தம்மைத் தாமே தாழ்த்தினதினாலும், தந்திரமுள்ள சத்துருவின் சோதனைகளைச் சகித்ததினாலும்’ அநீதிமான்களுக்காக நீதிமானாகிய அவர் மரித்ததினாலும் நமக்கென்ன பிரயோஜனம்? LST 209.3

சீஷர்கள் ஆண்டவரை மாத்திரம் உயர்த்துவதற்கு பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவி செய்ததுமன்றி உலகத்திற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளையும் கிரியைகளையும் எழுதிக் கொடுப்பதற்கு பரிசுத்த சரித்திரக்காரரின் பேனாக்களையும் அவர் நடத்தினார். கல்வாரிச் சிலுவையின்மேல் செய்யப்பட்ட அப்பெரிய பலிக்கு நேராக மக்களின் கவனத்தை இழுக்கவும், மக்களின் மேலுள்ள தேவ அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்தவும், உணர்வுள்ள ஆத்துமாவுக்கு வேதத்திலுள்ள வாக்குதத்தங்களைத் திறக்கவும் இக்காலத்தில் இந்த ஆவியானவர் இடைவிடாமல் கிரியை செய்கிறார். LST 210.1

நீதியின் சூரியனுடைய பிரகாசமான கதிர்களை இருளடைந்த இதயங்களில் பிரகாசிக்கச் செய்கிறவர் ஆவியானவரே. நித்தியத்துக்கான சத்தியங்களை அறிகிற அறிவினால் தங்களுக்குள்ளே மக்களின் உள்ளங்கள் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறவரும் அவரே; நீதியின் பெரிய திட்டத்தை மனதினிலே படும்படி செய்து, பாவத்தை உணர்த்துகிறவரும் அவரே; பாவத்திலிருந்து இரட்சிக்கக்கூடிய அவர் ஒருவரிடம் விசுவாசம் ஏற்படச் செய்கிறவரும் அவரே; லௌகிகமானதும் அழிந்துபோகக் கூடியதுமான காரியங்களை விட்டு மக்களின் பாசங்களை நீக்கி அவைகளை நித்தியமான சுதந்திரத்தைப் பற்றிக் கொள்ள செய்வதினால் குணம் மாறும்படி கிரியை செய்கிறவரும் அவரே. ஆவியானவர் மானிட ஜென்மங்களை புதிதாகச் சிருஷ்டிக்கிறதும் செம்மைப் படுத்துகிறதும் பரிசுத்தப் படுத்துகிறதுமன்றி அவர்களைப் பரமராஜாவின் மக்களும் ராஜ குடும்பத்தின் அவயவங்களுமாகும்படி சீர்ப்படுத்துகிறார்.---G.W. 284-7. LST 210.2