Go to full page →

ஜீவனுக்குப் பிரியமாயிருக்கும்படிக்கான தீர்மானம் LST 25

நான் மிகவும் சிறு பெண்ணாயிருந்த போதிலும் இரட்சிப்பின் ஒழுங்கு என் மனதிற்கு அதிகத் தெளிவையும் ன் சொந்த அனுபோகம் மிகவும் திட்டமாயும் இருந்தபடியினால் நான் அவ் விஷயம் கவனித்துப் பார்க்கும்போது, அருமையான அத்துமாக்களின் இரட்சிப்புக்காக நான் எப்பொழுதும் முயற்சிப்பதும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபித்து கிறிஸ்துவை அறிக்கை யிடுவதும் என் கடமை என உணர்ந்தேன், என் ஆண்டவரின் ஊழியத்திற்கேன்றே நான் என்னை முழுவதுமாய் ஒப்புவித்தேன். என்ன வந்தாலும் பரவாயில்லை, நான் தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் உண்மையுள்ளவர்களுக்குப் பதிலளிக்கும் படி இரட்சகர் வருவாரென்று எதிர்பார்த்து கொண்டிருப்போனைப் போல் ஜீவிக்கவும் வேண்டுமென்று நான் தீர்மானித்தேன். தேவனிடம், என் தந்தையிடம் போவது போலப் போய் நான் செய்யும்படிக்கு அவர் விரும்பும் காரியம் என்னவென்று கேட்கும் குழந்தையைப் போலிருப்பதாக நான் என்னை உணர்ந்தேன், பிறகு என் கடமை இன்னதென்று தெளிவாக்கப்பட்டதும், அதைச் செய்து முடிப்பதே என்னைக்குப் பேரானந்தம். சிலவேளைகளில் விசேஷ சோதனைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. என்னைவிட அதிக அனுபோகசாலிகள் என்னைத் தடுத்து என் விசுவாசத்தின் அனலைத் தனித்துப் போடும்படி வகை பார்த்தார்கள். ஆனால் என் ஜீவியத்தைப் பிரகாசிப்பித்த இயேசுவின் புன்சிரிப்புகளும் என் இருதயத்தை ஆட்கொண்ட தேவன்பும் நான் என் வேலையைச் சந்தோஷமாய் நடப்பிக்கச் செய்தது. LST 25.1

* * * * *