Go to full page →

புஸ்தக விற்பனை வேலை LST 233

ஒழுங்காய்ச் செய்யப்படும் புத்தக விற்பனை வேலையானது மகா மேன்மையான மிஷனரி வேலையாயும், இக் காலத்திற்குரிய விசேஷ சத்தியங்களை ஜனங்கள் முன் வைப்பதற்கு உபயோகிக்கப்படக் கூடிய நல்ல பயனுள்ளதோர் முறையாயுமிருக்கிறது. சுவிசேஷ ஊழியத்தின் வேலை மிகவும் முக்கியமானதென்பது உண்மையே; ஆனால் ஜீவ அப்பத்திற்காகப் பசியாடிருக்கும் அநேகருக்கு தேவனால் அனுப்பப்படும் பிரசங்கிமாரிடமிருந்து வசனத்தைக் கேட்கும் சிலாக்கியம் கிடையாது. இதினிமித்தம் நமது பிரசுரங்கள் விஸ்தாரமாய்ச் சிதறடிக்கப்பட வேண்டியது அதிக அவசியமாம். இவ் விதம் உயிருள்ள பிரசங்கிமார் போகக்கூடாத இடத்திற்கு தூது போய், இவ்வுலக சரித்திர முடிவின் காட்சிகளோடு சம்பந்தப்பட்ட முக்கிய சம்பவங்களை அநேகர் கவனிக்க ஏதுவாகும். LST 233.1

தங்களுடைய வீடுகளுக்கு சத்தியம் கொண்டு போகப்பட்டாலொழிய அவர்களுக்கிருக்கும் துவேஷத்தால் அதை ஒருபோதும் அறியமாட்டாத அநேகர் உண்டு. புத்தக வேலையாள் இந்த ஆத்துமாக்களைக் கண்டு அவர்களுக்கு ஊழியஞ் செய்யலாம். வீடு வீடாய்ப் போய்ச் செய்யும் ஓர் வேலையுண்டு, அதை அவன் மற்றவர்களை விட அதிகப் படத்தக்கதாய்ச் செய்யக் கூடும். அவன் ஜனங்களோடு பழகி அவர்களுக்கு உண்மையில் அவசியமானவை எவை என்றறிந்து கொள்ளலாம்; அவன் அவர்களோடு ஜெபிக்கவும், உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியை அவர்களுக்குச் சுட்டிக்காட்டவும் கூடும். இவ் விதம் இக் காலத்திற்குரிய விசேஷ தாது அவர்களுடைய இருதயங்களில் இடம் பெற வழியுண்டாகும். LST 233.2