Go to full page →

பரிசுத்தஸ்தலத்திற்கு கவனம் திருப்பபடுதல் LST 47

இயேசு பரிசுத்த ஸ்தலத்தைச் சுத்திகரிக்கவும் இஸ்ரவேலுக்காக ஓர் விசேஷ பாவ நிவாரணம் செய்யவும் போயிருந்த அந்தா மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக ஏமாற்ற மடிந்தோரின் கவனத்தைத் திருப்புவதற்கு அவர் தமது தூதர்களை அனுப்பினார். தம்மைக் கண்டடைந்த யாவரும் தாம் செய்யவேண்டிய அவ்வேலையை உணர்ந்து கொள்வார்கள் என்று இயேசு தூதர்களுக்குச் சொன்னார். இயேசு கல்வாரியில் மரிக்கும்போது “முடிந்தது” என்று சத்தமிட்டார், அப்பொழுது “தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.” இது பூமிக்குரிய பரிசுத்த ஸ்தல ஆராதனை என்றென்றைக்கும் முடிந்ததென்றும் அவர்களுடைய பலிகளை ஏற்றுக் கொல்வதற்கு இனி தேவன் ஒரு போதும் பூமிக்குரிய அவர்களுடைய ஆலயத்திலே ஆசாரியர்களோடு கூடுவதில்லை யென்றும் காட்டினது. அப்பொழுது சிந்தப்பட்ட இயேசு வின் இரத்தமே அவரால் பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் செலுத்தப் படவேண்டியிருந்தது. LST 47.3

பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலத்தைச் சுத்திகரிப்பதற்கு ஆசாரியன் வருஷத்திர்கோர் முறை மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தது போல, தானியேல் 8ல் சொல்லப்பட்ட 2300 நாட்களின் முடிவாகிய 1844ல் அவருடைய மத்தியஸ்த ஊழியத்தினால் நன்மையடையக் கூடிய யாவருக்காகவும் கடைசி நிவாரணம் செய்து அவ்விதமாய் பாரிசுத்த ஸ்தலத்தைச் சுத்திகரிப்பதற்கென்று இயேசு பரலோகத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தார். LST 48.1

* * * * *