Go to full page →

முற்பிதாக்களின் யுகத்தில் LST 55

தீர்க்கதரிசன வரம் குறிப்பாய் இன்ன யுகத்திற்கு மாத்திரந்தானென்று மட்டிடடப்படவில்லை. வேதாகமத்தின் துவக்கத்திலேயே நாம் அதற்குரிய திருஷ்டாந்தங்களை காண்கிறோம். ஆதாமுக்கு ஏழாவதான எதேனுக்கு ஓர் தீர்க்கதரிசி. அவன் தீர்க்கதரிசன காட்சியில் நூற்றாண்டுகளுக்கு பின் நடக்கும் கர்த்தரின் வருகையையும்அவபக்தியுள்ளவர்கள் கடைசியாய் அடையும் ஆக்கினயையும் கண்டான். யூதா 14,15 LST 55.2

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கொப்புக்கும் கர்த்தர் தரிசனமாகி அவர்கள் சந்ததியாருக்கு வரும் ஆசிர்வாதங்களை முன்னுரைத்தார். அவர் தமது உடன்படிக்கையை அவர்களிடம் புதுப்பித்தார். நீதிமான்கள் இறுதியில் அடையும் பலனை திவ்விய தரிசனத்தில் அவர்கள் எதிர்நோக்கினதும் தவிர தேவன் நாமே கட்டி உண்டாக்கின அந்தப் பரம நகரின் மகிமையையும் கண்டார்கள். எபி 11:10 LST 55.3

இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகும்படி தேவன் தெரிந்து கோனே மோசே ஓர் பலத்த தீர்க்கதரிசி. அவன் மூலமாய்த் தேவன் மேசியாவின் வருகையை முன்னுரைத்தார். அவன் சொன்னாதவது “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்க தரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீர்களாக” உபா18:15 தேவன் இந்த உண்மையுள்ள மனுஷனுக்கு அனேக வெளிப்படுதல்கள் அளித்தார். தெய்வீக மகிமை அவனுக்குப் பூரணமாய் வெளிப்படுத்தப் படாவிடினும், தேவன் அவனோடு முகமுகமாய் பேசினாரென்று நாம் வாசிக்கிறோம். யாத் 33:11 LST 55.4

இஸ்ரவேல் புத்திரர் கானான் போய்க் குடியேறின பிறகு அவர்கள் கலந்து கொண்ட விக்கிரகாராதனைக்காரர் மெய்த் தேவனை அவர்கள் வழிபடுவதை விட்டு சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையும் பொன், வெள்ளி, மரம், கல் முதலானவைகளா செய்யப் பட்ட விக்கிரகங்களையும் வழிப்படும்படிச் செய்தார்கள். அவ்விதம் அவர்களுடைய சொந்த நன்மைக்கென்று அளிக்கப்பட்ட தேவ கற்பனைகளை அவர்கள் மீறினார்கள். தாம் தெரிந்து கொண்ட ஜாதியார் தங்கள் ஸ்ருஷ்டிகரும் வள்ளலுமானவரை விட்டு அழிவிற்குப் போம் பாதை போனது அன்புள்ள தேவனுடைய இருதயத்திற்கு விசனமாயிருந்தது. LST 56.1

பொதுவான மார்க்க துரோகத்தின் மத்தியில் யேகோவாவிற்கு உன்மாயியிருந்த சிலர் உளர். இவர்களுள் தேவன் தீர்க்கதரிசிகளைத் தெரிந்து கொண்டு அவர்கள் ஜனங்களை மனந்திரும்பும்படிச் செய்யவும், அவர்களுடைய கீழ்ப்படியாமைநிமித்தம் நிச்சயமாய் அவர்கள் மேல் வரும் தீங்குகளைக் குறித்து அவர்களை எச்சரிக்கவும் அவர்களுக்குக் கற்பித்தார். “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தயும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்க முள்ளவராயிருந்தபடியால் அவர்களிடத்துக்கு தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.” 2 நாளா 36:15 LST 56.2

சாமுவேல், எலியா, எலிசா, ஏசாயா, ஏரேமியா, எசக்கியேல், தானியேல் என்பவர்கள் இஸ்ரவேலின் தீர்க்க தரிசிகளுள் ஸ்ரேஷ்டமானவர்கள். பாவிகள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பும் படி அவர்களை ஏவி எழுப்பினார்கள். கர்த்தர் அவர்களை கிருபையாய் ஏற்றுக் கொண்டு அவார்களுடைய சீர்கேட்டை குணமாக்குவார் என்று அவர்கள் அந்த ஜனங்களுக்கு தீர்க்கமாய் சொன்னார்கள். அவர்கள் சொன்ன தீர்க்க தரிசனங்களில் சில வெகு காலத்துக்கு பின்பு நடக்க வேண்டியவற்றை குறிக்கின்றன. “கடைசி நாட்களில்” அல்லத்ஹு “முடிவு காலத்தில்” நடக்கும் சம்பவங்களை பற்றி அடிக்கடி அவர்கள் எழுதினார்கள். ஏசா 2:2; தானி. 12:4. LST 56.3