Go to full page →

அப்போஸ்தலரின் நாட்களில் LST 57

பரிசுத்த ஆவி அருளப்பட்டதினாலும் பிரதிட்சமான பல வரங்களினாலும் கிறிஸ்துவ யுகத்தின் ஆரம்பம் குறிப்பிடப்பட்டது. இவ்வரங்ளுள் சிறந்தது தீர்க்க தரிசன வரமே. அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகத்தில் பேதுரு, ஸ்தேவான் உரைத்த தீர்க்க தரிசன உரையிகளையும் ஆதி க்ரிஸ்தூவ சபையோடு சமாந்தப்பட்ட மற்றவர்களுடைய வார்த்தைகளையும் “தீர்க்க தரிசனம் சொல்லுகிற கன்னியா ஸ்திரீகளாகிய” பிலிப்புவின் நாலு குமாரத்திகளும் அகபு என்னும் தீர்க்க தரிசியும் கூட சொன்னவைகளையும் பற்றி நாம் வாசிக்கிறோம். அப்.21:9, 10. அப்போஸ்தலனாகிய பவுல் “ஏராளமான” வெளிப்படுத்தல்களை பெற்றார். 2 கொரிந்தியர் 12:1-7; கலாத்தியர் 1:11, 12 பார்க்க. ஒரு யுகத்திற்கு மாத்திரம் அல்ல, “நாம் அனைவரும் தேவனுடைய குமாரனை பற்றும விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி க்ரிஸ்தூவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்கு தக்க பூரண புருஷராகும்” வரைக்கும் அளிக்கப்பட்டிருந்த ஆவியின் வரங்களை குறித்து ஒன்று கொரிந்தியர் பன்னிரண்டாம் அதிகாரத்தில் அவர் விரிவாய் எழுதினார். எபே. 4:11. தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும் இரண்டாவது தீர்க்க தரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும் பின்ப குணமாக்கும் வரங்களையும் ஊழியங்களையும் ஆளுகைகளையும் பல வித பாஷைகளையும் ஏற்படுத்தினார்” 1 கோரி. 12:28 LST 57.1

இயேசுவின் அப்போஸ்தலர் பன்னிருவரில் கடைசி மட்டும் பிழைத்திருந்த யோவானும் ஒரு தீர்க்க தரிசி. பத்முதீவில் கைதியாய் இருக்கையில் தமக்கு அளிக்கப்பட காட்சிகளை குறித்து அவர் வேதாகமத்தின் கடைசி புஸ்தகத்தில் சொல்லுகிறார். இக்காட்சிகளை அவர் எழுதும்போது” சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை தம்முடைய ஊழியகாரறுக்கு காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்தது” என்று அவர் கூறுகிறார். பின்னும் அவர், “இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுதினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தை குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியை குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.” என்று சொல்லுகிறார். வெளி. 1:1, 2 LST 57.2