Go to full page →

பதினைந்தாம் அத்தியாயம்—இரு கிரீடங்கள் LST 76

1861 அக்டோபர் 26இல் மிசிகனில் உள்ள பற்றில்க்ரீகில் எனக்கு அளிக்கப்பட்டஓர் தரிசனத்தில் இப்பூமி இருளாகவும் மந்தாரமாகவும் எனக்குக் காண்பிக்கப்பட்டது. “கவனித்து பார்” என்று தூதன் சொன்னான். அப்பொழுது பூமியின் மேலுள்ள ஜனங்கள் எனக்குக் காண்பிக்கப்பட்டார்கள். சிலர் தேவ தூதர்களால் சூழப்பட்டிருந்தார்கள். பரத்திலிருந்து ஒரு கரம் போர்செங்கோல் ஒன்றைக் கீழே நீட்டிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். அசெங்கோளின் நுனியில் வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு கிரிடம் இருந்தது. வைரமேல்ல்லாம் தெளிவான அழகுள்ள வெளிச்சத்தைக் கொடுத்தன. “என்னைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் பாக்கியசாலிகள், அவர்கள் நித்திய ஜீவனடைவார்கள்” என்னும் வார்த்தைகள் அக்கிரிடத்தின் மேல் எழுதப் பட்டிருந்தன. LST 76.2

இக்கிரிடத்தின் கீழ் இன்னொரு செங்கோலில் இருந்து இதின் மேலும் ஓர் கிரிடம் இருந்தது. இக்கிரிடத்தின் மத்தியில் ஏதோ கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து கொண்டிருந்த முத்துக்களும் பொன்னும் வெள்ளியும் இருந்தன. பூலோக பொக்கிஷம் ஐஸ்வரியம் வல்லமை உள்ளது. என்னைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கலேள்ளருக்கும் கணமும் புகழுண்டு” என்னும் வார்த்தைகள் அக்கிரிடத்தின் மேல் வரையப் பட்டிருந்தன. இக்கிரிடதைப் பெற்றுக் கொல்வதற்கு பாய்ந்து செல்லும் திரளான ஓர் கூட்டத்தை நான் கண்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் இடித்து தள்ளி தங்களிலும் பலவீனமானவர்களை பின்னால் நெருக்கிக் கொண்டும் வேகமாய் ஓடினதில் தவறி விழுந்தவர்களை மிதித்துக் கொண்டும் சென்றார்கள். அனேகர் அக்கிரீடதிற்குள் இருந்த பொக்கிஷங்களை ஆவலுடன் பற்றி அவைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் சிலருடைய தலைகள் வெள்ளிகளைப் போல் வெண்மையாய் இருந்தன. அவர்களுடைய முகங்கள் கவலையினாலும் வருத்தினாலும் திரை விழுந்திருந்தன . தங்கள் எலும்பில் எலும்பும் தங்கள் மாம்சத்தில் மாம்சமுமான தங்கள் சொந்த இன ஜனங்களை அவார்கள் மதிக்க வில்லை.அனால் சிலர் கெஞ்சிக் கேட்கும் வண்ணமாய் அவர்களை நோக்கி நின்றபோது, தங்களுடைய கேட்ட நேரத்தில் ஏதோ கொஞ்சத்தை தாங்கள் இழந்து போகக் கூடுமோ அல்லது அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க தாங்கள் ஏவப்படக் கூடுமோ என்னும் பயத்தினால் அவர்கள் தங்கள் பொக்கிஷங்களை இன்னும் அதிகக் கெட்டியாய் பற்றிப் பிடித்தார்கள். அவர்கள் வெகு பிரியமாய் அப்பூலோகக் கிரீடத்தை உற்று நோக்கிக் கொண்டு அதின் பொக்கிஷங்களைத் திரும்ப திரும்ப எண்ணினார்கள். LST 76.3