Go to full page →

தூதர்கள் போர்புரியக் கட்டளையிடப்பட்டது LST 122

பொல்லாத தூதர்கள் ஆத்துமாக்களுக்காகப் போர் புரிவதையும் தேவதூதர்கள் அவர்களை எதிர்ப்பதையும் நான் கண்டேன். போர் அகோரமாயிருந்தது. பொல்லாத தூதர்கள் தங்கள் நஞ்சு நிறைந்த வசீகிரத்தால் அக்கம் பக்கத்தைக் கெடுத்து ஆகாயத்தைக் கெடுத்து இவ்வாத்துமாக்களின் மதியை மோசம்போக்கிப் போடுவதற்கு அவர்களை நெருக்கி கொண்டிருந்தார்கள். பரிசுத்த தூதர்கள் சாத்தானுடைய சேனையைத் துரத்துவதற்கு ஆத்திரத்துடன் விழித்துக் காத்திருந்தார்கள் .ஆனால் மனிதன் மனதை அவர்களுடைய இஷ்டத்திற்கு விரோதமாய் அடக்கி ஆளுவது நல்ல தூதர்களுடைய வேலையல்ல .அவர்கள் சத்ருவுக்கு இணங்கி அவனை எதிர்ப்பதற்கு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருந்தால், அபாயத்திலிருக்கும் அவர்களுக்குக் கூடுதலாக வெளிச்சம் அருளப்பட்டு அவர்கள் சகாயத்ததிற்காக பரத்தை நோக்கி கெஞ்ச ஏவப்படுமட்டும் சாத்தானுடைய தூதர்கள் அவர்களை அழிக்காதிருக்கும் பொருட்டு தேவ தூதர்கள் அவர்களைத் தடுப்பதற்கான காரியம் தவிர யாதொன்றும் செய்யமுடியாது . தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முயற்சிக்காதிருப்போரை விடுவிப்பதற்காக இயேசு பரிசுத்த தூதர்களுக்குக் கட்டளையிடமட்டார், சாத்தான் ஒரு ஆத்துமாவை இழக்கக் கொடுக்கும் ஆபத்தில் இருக்கிறதைக் கண்டால் அவன் தன்னால் இயன்றமட்டும் அவ்வாத்துமாவை வைத்துக் கொள்வதற்காக முயற்சிக்கிறேன் . அந்த ஆளோ, தான் அகப்பட்டிருக்கும் மோசத்தை யறிந்து, வேதனையோடும் அனலோடும் பலத்திற்காக இயேசுவை நோக்கும்போது , சாத்தான் தன் கைதி யொன்றை இழக்கப் போகிறதாகப் பயந்து,அவன் அவ்வேழை யாத்துமாவை விட்டு விடாமல் பார்த்துக்கொள்ள தன் தூதர்களில் புதிதாய் ஓர் சேனையை திரட்டி பரம வெளிச்சம் அவனைக் கிட்டிச் சேராதிருக்கும் பொருட்டு என்று அவனைச் சுற்றிலும் அந்தகாரக் கோட்டையாய் நிற்கக் கற்பிக்கிறான். ஆனால் ஆபத்திற்குட்பட்டிருக்கும் அந்த ஆள் ஊக்கமாய் தன் நிர்ப்பாக்கியத்தை யுணர்ந்து கிறிஸ்துவின் இரத்த புண்ணியங்களே சரணமென விழுந்தால், நமது இரட்சகர் விசுவாசத்தோடு கூடிய ஊக்கமான அச் செபத்தைக் கேட்டு அவனை விடுவிப்பதற்கு பலத்த சவுரியவான் களாகிய தூதர்களில் ஓர் சேனையை அனுப்புகிறார். LST 122.1