Go to full page →

குற்றஞ்சாட்டியவன் கண்டிக்கப்பட்டது LST 126

தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேருதலுக்காக யோசுவா வணக்கமாய் மன்றாடுகிற போது சாத்தான் அவனுக்கு விரோதஞ் செய்யத் தைரியமாய் எழுந்து நின்றான். இஸ்ரவேலர் திரும்பவும் தேவ தயவைப் பெறக்கூடாதென்று அவன் அவர்க்களுடைய மீருதல்களை சுட்டிக் காண்பிக்கிறான். அவர்கள் தன் சிறைகளாக அழிக்கப்பாடுதற்கு அவர்களைத் தன் கையில் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று அவன் கேட்கிறான் LST 126.1

சாத்தான் சாட்டுஞ் குற்றங்களுக்கு பிரதான ஆசாரியன் தன்னையும் தன் ஜனத்தையும் தப்புவிக்க முடியாது. இஸ்ரவேல் குற்றமற்றவனென்று அவன் சொல்லுகிரதில்லை. அவன் ஜனங்களின் பிரதிநிதியாக அவர்களுடைய பாவங்களுக் கடையாளமாக அழுக்கு வச்திரந்த் தரித்து தூதனுக்கு முன் அவர்களுடைய குற்றத்தை அறிக்கை இடுகிறான். ஆயினும் அவர்களின் மனந்திரும்புதலையும் மனத் தாழ்மையையும் சுட்டி காட்டி, பாவத்தை மன்னிக்கும் மீட்பரின் இரக்கத்தை சார்ந்தவனாய் விசுவாசத்தோடு தேவனுடைய வாக்குதத்தங்களைப் பாராட்டி நிற்கிறான். LST 126.2

பிறகு பாவிகளின் இரட்ச்கரும் கிறிஸ்துவுமான அத்தூதன், “கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்து கொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று சொல்லி ஜனங்களை குற்றஞ் சாட்டினவனின் வாயை அடைத்தார். இஸ்ரவேலர் வெகு காலமாய் உபத்திரவமாகிய குகையிலிருந்தார்கள். தங்களுடைய பாவங்களிநிமித்தம் , சாத்தானாலும் அவனுடைய தூதாட்களாலும் முட்டின அக்கினியில் அவர்கள் கொஞ்சங் குறைய முழுவதுமாய் எரியுண்டு போனார்கள். ஆனால் தேவன் இப்பொழுது அவர்களைத் திருப்பிக்கொண்டு வரும்படி தமது கரத்தை நீட்டினார். ஜெனங்கள் மன்ஸ்தாபப்பட்டு தங்களைத் தாழ்மைப் படுத்தும் போது மனமுருகும் இரட்சகர் அவர்களை அஞ்ஞானிகளின் கொடிய வல்லமைக்கு ஒப்புகொடுக்க மாட்டார். “அவர் நெரிந்த நாணலை முரியாமலும், மங்கிஎரிகிற திரியை அணையாமலும் இருப்பார்.” LST 126.3