Go to full page →

இயேசுவை நோக்கிப் பார்த்தல் LST 134

தங்கள் உணர்ச்சிகளைக் கவனித்து அவ்விதம் தங்கள் முன்னேற்றத்தையோ அல்லது தளர்ச்சியையோ நிதானப்படுதினால் அநேகர் தங்கள் மார்க்க ஜீவியத்தில் பிரமாதமானதோர் தப்பிதம் செய்கிறார்கள். உணர்ச்சிகளைக் கொண்டு நாம் சரியாய் நிதானிக்க முடியாது. தேவன் நம்மை எற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை நாம் நமக்குள்ளே காணமுடியாது. அங்கே நம்மை அதைரியப்படுதக் கூடியதை மாத்திரமேயன்றி வேறொன்றையும் காண முடியாது. “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரு மாயிருக்கிற இயேசுவை நோக்கி” பார்ப்பது தான் நமக்குள்ள ஒரே நம்பிக்கை. நம்பிக்கையையும், விசுவாசத்தையும், தைரியத்தையும் கொடுப்பதற்கானது எல்லாம் அவரிலுண்டு. அவரே நமது நீதியும் நமது ஆறுதலும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறார். LST 134.4

ஆறுதலுக்காக தங்களையே நோக்கிப் பார்ப்போர் சோர்வுற்று ஏமாற்றமடையக்கூடும். ஜெபத்தின் அருமையான சிலாக்கியத்தைச் சரியாய்ப் பாராட்டுவோர் அல்லது பேணுவோர் வெகு சிலர் மாத்திரமுண்டு. நாம் இயேசுவண்டை பொய் நமது குறைகளை எல்லாம் அவருக்குச் சொல்ல வேண்டும். நமது பெரிய வருத்தங்களையும் அற்பக் கவலைகளையும் குழப்பங்களையும் கூட நாம் அவரிடம் கொண்டு வரலாம். நம்மைச் சஞ்சலப்படுத்தும் எல்லாவற்றையும் நாம் ஜெபத்தில் கர்த்தரிடம் எடுத்துக்கொண்டு பேசவேண்டும். LST 135.1

அடியெடுத்து வைக்கும்போதெல்லாம் கிறிஸ்துவின் பிரசன்னம் நமக்குத் தேவையென்று நாம் உணரும் போது, சாத்தான் தன் சோதனைகளை இடையிலே விடுவதற்கு அவனுக்குச் சமயம் கிடையாது. உத்தமமும் மிக்க அனுதாபமுள்ள நமது நண்பரைவிட்டு நம்மைப் பிரிக்க வேண்டுமென்பது அவன் யோசனையோடு கூடி எடுத்துக்கொண்ட சிரமம். இயேசுவை தவிர வேறொருவரையும் நமது அந்த சங்கமித்திரராய் வைக்ககூடாது. நமது உள்ளதிலிருக்கிறவைகளை எல்லாம் நாம் பயமின்றி அவரிடம் வெளியிடலாம். LST 135.2

சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆராதிக்கும்படி சபை கூடும் போது இயேசு உங்களுடன் கூடுகிறார் என்றும், அவர் உங்களை ஆசீர்வதிக்கப் பிரியமாய் இருக்கிறார் என்றும் நம்புங்கள். நீங்கள் உங்களையே நோக்காமல் இயேசுவை நோக்கிப்பாருங்கள், நிகரற்ற அவருடைய அன்பைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் அவரைக் காண்கிறதினால் அவருடைய சாயலாகத் தானே மறுரூபமவீர்கள். LST 135.3

நீங்கள் ஜெபிக்கும் போது உங்கள் ஜெபம் சுருக்கமாயும் குரிப்பாயுமிருப்பதாக. உங்கள் நீண்ட ஜெபங்களினால் ஆண்டவருக்குப் பிரசங்கம் செய்யாதிருங்கள். பசி எடுத்த பிள்ளை தன் தந்தையிடம் அப்பம் கேட்கிறது போல் ஜீவ அப்பத்திற்காகக் கேளுங்கள். நாம் தேவனிடத்தில் சுருக்கமாய் விசுவாசத்துடன் கேட்கையில் நம்க்கவசியமான ஆசீர்வாதங்களை எல்லாம் அவர் அருளிச்செய்வார் LST 135.4